வைராக்கியம் பாட்டி!

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2019

சுந்­த­ரர் பாடிய, 'கவ்­வை­க­டல்...' என, துவங்­கும் தேவா­ரப் பதி­கம் இனி­மை­யா­னது. இந்த பாடல் பெற்ற திருச்­சுழி, திரு­மே­னி­நா­தர் கோவில் உள்ள மாவட்­டம் விரு­து­ந­கர். இங்­குள்ள ஆசி­லா­பு­ரம், ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப் பள்­ளி­யில், 2009ல், 5ம் வகுப்பு படித்த போது, நிகழ்ந்த சம்­ப­வம்...

பள்ளி வாச­லில் எள்ளு, கட­லை­மிட்­டாய், இடி­மாவு, கார அப்­ப­ளம் என, தின்­பண்­டங்­கள் விற்­பார் வைராக்­கி­யம் பாட்டி. அவ­ரி­டம் கட­லை­மிட்­டாய் வாங்கி, தோழி­ய­ரு­டன் பகிர்ந்து கொண்­டி­ருந்­தேன்.

பல­வீ­ன­மான நிலை­யில், 75 வய­தான பாட்டி, திடீர் என மயங்கி சாய்ந்­தார். செய்­வ­த­றி­யாது திகைத்து ஓடி, தலைமை ஆசி­ரி­யரை அழைத்து வந்­தேன். அவ­ரது அறி­வு­ரைப்­படி மருத்­து­வ­ம­னைக்கு துாக்கி சென்­ற­னர்.

மறு­நாள் இறந்து விட்­ட­தாக அறிந்து, மிக­வும் துய­ரம் அடைந்­தேன். எந்த வய­தி­லும், உழைத்து வாழ முடி­யும் என, நிரூ­பித்­த­வ­ரின் மர­ணம் அதிர்ச்சி தந்­தது.

கல்­லுா­ரி­யில், இளங்­கலை படிக்­கி­றேன். அந்த பாட்­டி­யி­டம், சில்­லறை மாற்­றாக பெற்ற, 1 ரூபாய் நாண­யத்தை, நினை­வாக வைத்­தி­ருக்­கி­றேன்.

பிறர் கையை எதிர்­பார்க்­காத வைராக்­கி­யம் தான், வலி­யில்­லாத வாழ்க்கை என்­பதை அவ­ரி­டம் கற்­றுக் கொண்­டேன்.

–- வே.பிரியா, விரு­து­ந­கர்.