‘மொக்க’ ஜோக்ஸ்!

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2019

‘‘மன்னர் ஏன் நம் படை பிரிவில் பெண்களை  சேர்த்துள்ளார்?’’

‘‘ஆண்கள்  வாள் சண்டைக்காம்... பெண்கள் வாய் சண்டைக்காம்!’’

– பாலாஜி, திசையன்விளை.

‘‘போருக்கு வருகிறாயா... வரி கட்டுகிறாயா....  என எதிரி கேட்கிறான் மன்னா...’’

‘‘வரியை கட்டி விடலாம்...

போருக்கு போனால் வரி

வரியாய் தழும்புகள் தான் முதுகில் வாங்குவேன் அமைச்சரே!’’

– நபா, கன்னியாகுமரி.

‘‘தொகுதி மக்கள் கிட்ட என்னை பத்தி தப்பா சொல்லி எதுக்குய்யா தர்ம அடி வாங்க வச்ச?’’

‘‘முள்ளை முள்ளால எடுக்குற மாதிரி ரொம்ப நாளா இருக்குற உங்க முதுகுவலியை சரி செய்யலாம்னு தான் தலைவரே!’’

– சங்கரி, பொட்டல் புதுார்.

‘‘இளவரசர் இந்த சின்ன வயதிலேயே  மன்னரின் வாரிசாக உருவெடுத்து விட்டார்...’’

‘‘எப்படி சொல்கிறீர்?’’

‘‘வெள்ளை நிற நைட்ரஜன் பலுான்களை பறக்கவிட்டு விளையாடுகிறார் பாருங்கள்!’’

– ரேவதி, மார்த்தாண்டம்