சியாவோமி கடன் வழங்கும் இணையதள மேடை: இன்று துவக்கம்

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019 19:13

புது டில்லி

சீன நாட்டைச் சேர்ந்த பிரபலமான கடன் வழங்கும் நிறுவனமான சியாவோமி இந்தியாவில் தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கான கடன் வழங்கும் இணையதள மேடையை இன்று அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் இந்திய கிளையின் மேலாண்மை இயக்குனருமான மனு ஜெயின் துவக்கி வைத்தார்.

மனு ஜெயின்       -       ஹாங்-பெங்

சியாவோமி நிறுவனம் சென்ற ஆண்டு கிரெடிட்பீ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை தனிப்பட்ட கடன்களை வழங்குவதாக அறிவித்தது.

சியாவோமி நிறுவனத்தின் சார்பாக இந்தியாவிலும் பல இடங்களில் தனிப்பட்ட கடன்களை பல வடிவங்களில் வழங்கி வருகிறோம். இந்த கடன் திட்டங்களுக்கு மி கிரெடிட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டங்களின் கீழ் கடன் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குறைந்தபட்ச கால அவகாசத்தில் தலா ரூபாய் ஒரு லட்சம் வரை தனிப்பட்ட கடன்களாக வழங்குகிறோம். என்று சியோமி நிறுவனத்தின் துணை தலைவரும் அந்நிறுவனத்தின் இந்திய கிளையின் மேலாண்மை இயக்குனருமான மனு ஜெயின் டெல்லியில் அறிவித்தார்.

இன்றுவரை சியாவோமி நிறுவனத்தின் இணைய தளத்தில் சோதனை முறையில் இயங்கி வந்தோம். இனி முறையாக தனி இணைய தள் மேடையில் இன்று முதல் இயங்குவோம் என மனு ஜெயின் கூறினார்.

சியாவோமி நிறுவனத்தின் பங்குதாரர்களாக பல இந்திய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் இப்பொழுது கிரெடிட்பீ நிறுவனம் இல்லை என்று மனு ஜெயின் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி சார்பான வினியோக அமைப்புக்கள், சேவை அமைப்புகள் புதிய பங்குதாரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மனு ஜெயின் குறிப்பிட்டார்.

இந்தக் கடன் திட்டங்களையெல்லாம் ஆன்லைனில் இணையதள மேடையிலே இன்று முதல் வழங்குவதாக மனு ஜெயின் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கடன் வழங்கும் திட்டங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கப்பட்டன. இதுவரை எங்கள் நிறுவனத்தில் 2 கோடிப்பேர் பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளாக சேர்ந்துள்ளனர்.

ஆன்லைனில் கடன் வழங்கும் திட்டங்கள் சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டன. அந்த. அனுபவத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஆன்லைனில் தனிப்பட்ட கடன்களை வழங்க தீர்மானித்திருக்கிறோம்.

உலக அளவில் 30 கோடி பேருக்கு இதுவரை கடன் வழங்கி இருக்கிறோம். இதில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் இந்தியாவில் இந்த தொழிலை சிறப்பாக நடத்த உதவும் என்று நம்புகிறோம் என்று சியோவோமி நிறுவனத்தை துவக்கிய வரும் தற்பொழுது அதன் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் இருக்கும் ஹாங்-பெங் கூறினார்.

சீனாவில் பல நிதி சேவை திட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அவை சொத்து, நிதி ஆகியவற்றை பராமரிக்கவும், காப்பீட்டு திட்டங்களை அமல் செய்யவும் உதவுகின்றன. அதே போன்ற திட்டங்களை இந்தியாவில் இங்குள்ள பல நிறுவனங்களின் துணையுடன் அமல் செய்ய தீர்மானித்து இருக்கிறோம்.

இந்தியாவுக்கான கடன் சேவை பராமரிப்பு திட்டங்களை வடிவமைக்கும் பணியில் சீனாவில் உள்ள தலைமையகத்தில் 20 பேர் கொண்ட நிபுணர் குழு பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் ஆன்லைன் கடன் வழங்கும் துறையில் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.70 லட்சம் கோடியை தனிப்பட்ட கடனாக வழங்க வாய்ப்பு உள்ளது என ஆய்வு அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தியாவில் ஏற்கனவே உள்ள வங்கிகள், நிதி சேவை நிறுவனங்கள், ரூபாய் 4 லட்சம் கோடியினை தனிக்கடன்களாக 1.9 கோடி பயனாளிகளுக்கு வழங்கியுள்ளன. தலா ரூ. 2 லட்சம் வரை அவர்கள் கடன் பெற்றுள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் மருத்துவ நெருக்கடிகளின் போதும் திருமணம், பயணம், கல்வி ஆகியவற்றுக்கான தேவைகளின் போதும் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

இளம் தொழில் பட்டதாரிகளுக்கு கடன் வழங்க மி கிரெடிட் முன்னுரிமை அளிக்கும். பாரம்பரிய முறையில் கடன் வழங்குவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு டிஜிட்டல் அனுபவங்களின் மூலம் சியாவோமி நிறுவனம் தீர்வு கண்டு பணியாற்றி வருகிறது. மொபைல் போன்களின் மூலமாக தங்களுடைய கடன் தகுதி நிலை என்ன என்று கடன் பெற விரும்புவோர் அறிந்து கொள்ளலாம்.  இந்தியாவின் கடன் பெறுவோர் பற்றிய தகவல்கள் எல்லாம் இந்தியாவில் அமேசான் வெப்சர்வீசஸ் கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்  நிறுவனத்தில் எக்கிர்ப்டடு  வடிவில்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 28 கோடி ரூபாயை நாங்கள் கடனாக வழங்கி இருக்கிறோம். இதில் 20 சதவீதத்துக்கும் சற்று அதிகமானவர்கள் தலா ஒரு லட்ச ரூபாய் தனிக் கடனாக பெற்றுள்ளனர்.

சியோமி நிறுவனம் 10 மாநிலங்களில் 1500 பின் கோடுகளுக்கான நிலப் பரப்பில் இயங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள 100 சதவீத பின்கோடு களுக்கு உரிய இடத்தையும் 2018-19ம் ஆண்டில் எட்ட வேண்டும் என்பது எங்கள் இலக்காகும் என மனு ஜெயின் கூறினார்.

மி கிரெடிட் ஆப்  மியுயி ( MIUI) போன்களில் விற்பனையின் போதே பதிவு செய்யப்பட்டுக் கிடைக்கும். கூகுள் பிளே ஸ்டோர், கெட் ஆப்ஸ், சியாவோமி-யின் சொந்த ஆப் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.