வடபழனி முருகன் கோவிலில் சிவனுக்கு சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019

சென்னை       

வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் உள்ள சொக்கநாதருக்கு இன்று 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு, பரதக்‌ஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, இன்று மாலை 4.30 மணிக்கு சொக்கநாதருக்கு சங்காபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. 108 வலம்புரி சங்குகளில் நீர் நிரப்பி, அதற்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

சொக்கநாதருக்கு முச்தல் பால், தயிர், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக 108 வலம்புரி சங்குகளில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகத்தை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

சங்காபிஷேகத்திற்குப் பின், மண்டபத்தில் பரதக்‌ஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. கலைமாமணி ஜே.சூர்யநாராயண மூர்த்தியின் மாணவிகள் அம்ருதா சரவணன் மற்றும் ஹரிணி வெங்கடேஷ்வரன் ஆகியோர் சிறப்பாக அபிநயம் பிடித்து நடனமாடினர். 

இந்நிகழ்ச்சியை காண மக்கள் பெருமளவு திரண்டனர்.