தலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோயில்!

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019

வெற்­றியை நோக்கி எடுக்­கும் முயற்­சி­கள் தோல்­வி­யில் முடிந்­தால், ‘எல்­லாம் என் தலை­யெ­ழுத்து’ என்று விதியை எண்ணி நொந்­து­ கொள்­ப­வர்­கள் இனி அந்த கவ­லையை விட்­டு­வி­ட­லாம். திருப்­பட்­டூ­ரில் எழுந்­த­ரு­ளி­யி­ருக்­கும் பிரம்­மனை தொழுது தங்­க­ளது தலை­யெ­ழுத்தை திருத்தி எழு­திக்­கொண்டு வெற்­றி­க­ர­மான திருப்­பங்­களை  சந்­திக்­கலாம்.

திருச்­சி –­ சென்னை தேசிய நெடுஞ்­சா­லை­யில் சம­ய­பு­ரத்தை அடுத்­துள்­ளது சிறு­க­னுார். இவ்­வூ­ருக்கு மேற்­கில் சுமார் 5 கி.மீ. தொலை­வில் உள்ள சிற்­றுார்­தான் திருப்­பட்­டூர். பாடல் ­பெற்ற சிவத்­த­லங்­க­ளில் வைப்­புத்­த­ல­மாக குறிக்­கப்­பட்­டுள்­ளது. இங்­குள்ள சிவன் ‘பிரம்­ம­பு­ரீஸ்­வ­ரர்’ என்று அழைக்­கப்­ப­டு­கி­றார்.

தல வர­லாறு: புரா­ணங்­கள் கூற்­றுப்­படி சிவ­னுக்கு ஈசா­னம், தத்­பு­ரு­ஷம், அகோ­ரம், வாம­தே­யம், சத்­யோ­ஜா­தம் என்று ஐந்து முகங்­கள் இருந்­தன. இதே­போல் படைப்­புக்­க­ட­வு­ளான பிரம்­மா­வுக்­கும் ஆதி­யில் ஐந்து முகங்­கள் இருந்­த­ன­வாம். இத­னால் சரா­யு­ஜம், உத்­பி­ஜம், அண்­ட­ஜம், ஸ்வேத­ஜம் (பிறப்­பவை, பொறிப்­பவை, முளைப்­பவை, வெடிப்­பவை) என்று நான்கு வகை­க­ளில் 82 லட்­சம் ஜீவ­ரா­சி­களை படைத்து அவற்­றின் வாழ்வை தீர்­மா­னிக்­கும் தலை­யெ­ழுத்­தை­யும் எழு­து­ப­வர் இவரே என்­ப­தும் ஐதீ­கம்.

இவ்­வாறு உல­கில் வாழும் சர்வ ஜீவ­ரா­சி­க­ளை­யும் படைத்து அவற்­றுக்­கான தலை­யெ­ழுத்­தை­யும் நிர்­ண­யிப்­ப­தால், பிரம்மா தானும் ஈச­னுக்கு ஈடா­ன­வன்­தான் என்று பேசி­னா­ராம். இத­னால் கோப­ம­டைந்த சிவ­பெ­ரு­மான், பிரம்­மா­வின் தலை­க­ளில் ஒன்றை கிள்­ளி­யெ­றிந்­து­விட்­ட­து­டன், படைக்­கும் தொழி­லை­யும் அவ­ரி­டமிருந்து பறித்­து­விட்­டா­ராம். இத­னால் உல­கில் படைப்பு தொழில் நின்­று­போ­னது. ஈச­னின் சாபத்­தால் பொழி­வும், நிம்­ம­தி­யும் இழந்து பிரம்­மன் வருந்­தி­யி­ருக்க, நார­தர் உள்­ளிட்ட ரிஷி­க­ளும் தேவர்­க­ளும் பிரம்­ம­னுக்கு அறி­வு­ரை­கள் கூறி, ஈச­னி­டம் சென்று மன்­னிப்­பும், சாப­வி­மோ­ச­ன­மும் பெறும்­படி அறி­வு­றுத்­தி­ன­ராம்.

இந்த ஆலோ­ச­னைப்­படி ஈச­னைத் தொழுது வேண்­டிய பிரம்­ம­னி­டம், ஈசன் பூமி­யில் ஏதா­வ­தொரு தலத்­தில் 12 சிவ­லிங்­கங்­களை பிர­திஷ்டை செய்து வழி­பட்டு வரு­வா­யாக, குறிப்­பிட்ட காலத்­தில் யாமே நேரில் வந்து உமக்கு சாப­வி­மோ­ச­னம் தரு­வோம் என்று கூறி­னா­ராம்.

இதை­ய­டுத்து பிரம்­மன் இந்த தலத்­துக்கு வந்து 12 சிவ­லிங்­கங்­களை பிர­திஷ்டை செய்து நித்­யப்­படி பூஜை­கள் செய்து வர­லா­னார். அவ­ரு­டைய நீண்­ட­கால பிரார்த்­த­னைக்கு பின்­னர் சிவ­பெ­ரு­மான் இத்­த­லத்­தில் உள்ள மகி­ழ­ம­ரத்­த­டி­யில் எழுந்­த­ருளி, ‘‘இரு­வ­ருக்­கும் ஐந்து முகம் இருந்­தால் குழப்­பம் ஏற்­ப­டும். எனவே, உனக்கு இனி நான்கு முகம் போதும். எனி­னும் உனக்கு படைக்­கும் ஆற்­றலை மீண்­டும் தரு­கி­றோம். முன்­பு­போல் படைப்­புத்­தொ­ழிலை இங்­கி­ருந்தே தொடங்­கு­வா­யாக. இத்­த­லத்­தில் எனக்­க­ருகே நீயும் ஒரு சன்­னதி கொண்­டி­ருந்து இங்கு வந்து உன்­னை­யும், என்­னை­யும் வணங்கி வேண்­டு­வோ­ருக்கு அவர்­க­ளின் தலை­யெ­ழுத்தை தேவைப்­பட்­டால் மங்­க­லக­ர­க­மாக மாற்­றித் தரு­வா­யாக’’ என்று கூறி அருள் செய்­தா­ராம். அதன்­படி பிரம்மா இங்கு யோக நிலை­யில், அமர்ந்த தோற்­றத்­தில் இருந்து வரு­வோ­ருக்கு அருள் செய்து வரு­கி­றார்.

இந்த தேவ ரக­சி­யம் பல நுாற்­றாண்டு காலம் வெளி­யு­ல­குக்கு தெரி­யா­மல் இருந்­தது. எனி­னும், சமீ­ப­கா­ல­மாக சில ஜோதி­டர்­க­ளின் கணிப்­பின் மூலம் வெளிப்­பட்டு அவர்­கள் கூற்­றுப்­படி விவர­ம­றிந்­த­வர்­கள், இந்த தலத்­துக்கு வந்து பிரம்­ம­பு­ரீஸ்­வ­ர­ரை­யும், தனிச்­சன்­ன­தி­யில் எழுந்­த­ரு­ளி­யி­ருக்­கும் பிர­ம்மாண்ட பிரம்­மா­வை­யும் வணங்கி தங்­க­ளது தலை­யெ­ழுத்தை மாற்­றித் தரும்­படி வேண்­டிக்­கொள்­கின்­ற­னர். பல­ருக்கு அது­ ப­லி­த­மாகி தற்­போது, வியா­பா­ரம், அர­சி­யல், சினி­மாத்­து­றை­களை சேர்ந்த பிர­ப­லங்­கள் அடிக்­கடி வரும் கோயி­லாக மாறி­யுள்­ளது.

பிரம்மா தனது சாபம் நீங்க வழி­பட்ட 12 சிவ­லிங்­கங்­க­ளில் 5 சிவ­லிங்­கங்­கள் கோயில் பிர­ாகா­ரத்­தில் உள்­ளன. மீத­முள்ள 7 சிவ­லிங்­கங்­கள் கோயில் நந்­த­வ­னத்­தில் தனித்­தனி சன்­ன­தி­க­ளில் உள்­ளன. சுவாமி சன்­ன­தியை அடுத்து பிரம்ம சம்­பத்­க­வுரி அம்­பாள் சன்­னதி இருக்­கி­றது. மதுரை மீனாட்சி உரு­வில் சிறி­தாக, ஆனால் பார்ப்­ப­வர்­களை பர­வ­சப்­ப­டுத்­தும் அழ­கு­டன் இந்த அம்­பி­கை­யும் சிறந்த வரப்­பி­ர­சா­தி­யாக இத்­த­லத்­தில் விளங்­கு­கி­றாள்.

இந்த கோயி­லில் யோக­சாஸ்­தி­ரங்­களை உல­கிற்கு தெரி­வித்த பதஞ்­சலி முனி­வ­ரின் ஜீவ­ச­மாதி உள்­ளது. யோக மார்க்­கத்­தில் நாட்­ட­முள்­ள­வர்­கள் இந்த சன்­னதி அருகே அமர்ந்து சிறிது நேர­மா­வது தியா­னத்­தில் ஈடு­பட்டு அந்த சுகா­னு­ப­வத்தை பெறு­கின்­ற­னர்.

வாழ்­வில் திருப்­பங்­கள் வேண்­டும் என்று விரும்­பு­வோர் ஒரு முறை­யா­வது இத்­த­லத்­திற்கு வந்து இங்­குள்ள மூர்த்­தி­களை வணங்கி வள­மும், நல­மும் பெற­லாம்!