ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019

* பணத்தாசை பிடித்தவர்களை எப்படி திருத்துவது? ரமணி சந்திரா, நெல்லை.

பணத்தால் மட்டும் எல்லாவற்றையும் சாதித்து விடமுடியாது. மனமகிழ்ச்சியை கண்டிப்பாகப் பணத்தால் பெறமுடியாது. இது போன்ற உண்மைகளைப் புரிந்து கொள்பவர்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நிம்மதியாக வாழ்வார்கள். நீங்கள் குறிப்பிடும் நபர்களுக்கு இதைப் புரிய வைத்து அவர்களும் ஏற்றுக்கொண்டால் திருத்துவது சுலபம். பிறகு இறைவன் கையில் விடவேண்டியதுதான்.

* மாலை நேரத்தில் தூங்கக்கூடாது என்பது ஏன்? எஸ். அகிலாண்டேஸ்வரி, ஆறுமுகநேரி.

‘‘சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் உறங்கினால் அது விஷ்ணுவாகவே இருந்தாலும் அவ்விடம் விட்டு நீங்குவேன்’’ என மகாலட்சுமி கூறுகிறாள். அதாவது சந்தியா காலத்தில் உறங்கினால் செல்வ வளம் குறைந்து வறுமை தோன்றும்.