நவம்பர் மாத ஜிஎஸ்டி ரூ.1,03,492 கோடி வசூல் விவரம்: மத்திய நிதியமைச்சகம் வெளியீடு

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019 16:10

புதுடில்லி,

நாடு முழுவதும் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொகையின் அளவு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் மொத்தம் ரூ.1,03,492 கோடி ஜிஎஸ்டி வசூலானது.

2019 ஆண்டு நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,

நவம்பரில் மத்திய ஜிஎஸ்டியாக (சிஜிஎஸ்டி) ரூ.19,592 கோடியும்,
மாநில ஜிஎஸ்டியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ. 27,144 கோடியும்,
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக (ஐஜிஎஸ்டி) ரூ.49,028 கோடியும் கிடைத்தது..
இதில் 20,948 கோடி ரூபாய் இறக்குமதி மூலம் கிடைத்தது.

கூடுதல் வரி (செஸ்) மூலம் ரூ.7,727 கோடியும் கிடைத்தது என்று மத்திய அரசு தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.