வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த கோரி திரண்ட பழங்குடியின மக்கள்

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019

இந்­தி­யா­வில் வனப்­ப­கு­தி­க­ளில் பல நூற்­றாண்­டு­க­ளாக பழங்­கு­டி­யின மக்­க­ளும், வன­வா­சி­க­ளும் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இவர்­களே வனங்­க­ளை­யும், வனங்­க­ளில் வாழும் மிரு­கங்­கள், பிரா­ணி­கள், பற­வை­கள் உட்­பட பல்­வேறு உயி­ரி­னங்­க­ளை­யும் பாது­காத்து, அவற்­று­டன் இணக்­க­மாக வாழ்ந்து வரு­கின்­ற­னர். காடு­களை அழிப்­ப­தால், பரு­வ­நிலை மாற்­றம் உட்­பட பல்­வேறு இயற்கை கேடு­கள் உண்­டா­கின்­றன என்று பல்­வேறு ஆராய்ச்சி முடி­வு­கள் கூறு­கின்­றன. இயற்­கை­யு­டன் இணைந்து வாழ்­வதே சிறந்­தது என்று மற்­ற­வர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டும் வகை­யில் இன்­ற­ள­வும் பழங்­குடி மக்­க­ளும், வன­வா­சி­க­ளும் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

வனப்­ப­கு­தி­யில் பூமிக்கு அடி­யில் பல நூற்­றாண்­டு­க­ளாக பாது­காப்­பாக இருக்­கும் பல்­வேறு கனிம வளங்­களை வர்த்­தக நோக்­கத்­திற்­காக தோண்டி எடுக்க, இந்த பழங்­கு­டி­யின மக்­க­ளும், வன­வா­சி­க­ளும் தடை­யாக உள்­ள­னர். இவர்­களை வனப்­ப­கு­தி­யில் இருந்து வெளி­யேற்ற பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அர­சு­கள் எடுத்து வரு­கின்­றன. இந்த சந்­தர்ப்­ப­தில் இவர்­களை பாது­காக்­கும் நோக்­கத்­து­டன் ‘வன உரி­மை­கள் சட்­டம்’ கொண்டு வரப்­பட்­டது. இந்த சட்­டத்தை அமல்­ப­டுத்த கோரி, டில்­லி­யில் ஜந்­தர் மந்­த­ரில் பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த பழங்­கு­டி­யி­ன­ரும், வன­வா­சி­க­ளும் திரண்­ட­னர்.

நீர்,வனம், நிலம் எங்­கள் உரிமை என்­கின்­றார் தச­ரத். அறு­வது வய­தான பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த தச­ரத், உத்­த­ர­பி­ர­தேச மாநி­லம் சோனா­பத்ரா மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர். இவரை போன்றே டில்­லி­யில் உள்ள ஜந்­தர் மந்­த­ரில் சென்ற 21ம் தேதி ஆயி­ரக்­க­ணக்­கான பழங்­கு­டி­யின மக்­க­ளும், வனங்­க­ளில் பரம்­ப­ரை­யாக வாழும் வன­வா­சி­க­ளும் திரண்­ட­னர். இவர்­கள் உத்­த­ர­பி­ர­தே­சம், மகா­ராஷ்­டிரா, மத்­திய பிர­தே­சம், ஒடிசா, ஜார்­கண்ட், உத்­த­ர­காண்ட், மேற்கு வங்­கம், ஆந்­திரா உட்­பட பல மாநி­லங்­க­ளில் இருந்து வந்­தி­ருந்­த­னர்.

இந்த பழங்­கு­டி­யின மக்­கள் மத்­திய அரசு “பழங்­குடி யினர் மற்­றும் பாரம்­ப­ரிய வன­வா­சி­கள் (வன உரிமை அங்­கீ­க­ரித்­தல்) சட்­டம்–2006”ஐ அமல்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னார்­கள். இந்த சட்­டம் சுருக்­க­மாக ‘வன உரி­மை­கள் சட்­டம்’ என அழைக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சட்­டம் பழங்­கு­டி­யின மக்­க­ளும், மற்ற பாரம்­ப­ரிய வன­வா­சி­க­ளும் (வனப்­ப­கு­தி­யில் பரம்­ப­ரை­யாக வசிப்­ப­வர்­கள்) வனப்­ப­கு­தி­யில் வாழ்­வ­தற்­கும், நான்கு ஹெக்­டேர் நில பரப்பு வரை வனப்­ப­குதி நிலத்­தில் விவ­சா­யம் செய்­வ­தற்­கும் அனு­மதி வழங்­கு­கி­றது. அத்­து­டன் அந்த பகு­தி­யில் வசிக்­கும் வயது வந்­த­வர்­கள் அடங்­கிய கிரா­ம­ச­பை­கள், வனப்­ப­கு­தியை நிர்­வ­கித்து பாது­காக்க வேண்­டும் என்­றும் சட்­டம் கூறு­கி­றது. இந்த வனப்­ப­கு­தி­க­ளில் தனி நபர்­கள், சமூ­கங்­க­ளின் உரி­மை­களை தீர்­மா­னிக்­கும் வரை, எந்த நட­வ­டிக்­கை­யை­யும் மேற்­கொள்ள கூடாது என்­றும் சட்­டத்­தில் கூறப்­பட்­டுள்­ளது.

ஜந்­தர் மந்­தி­ரில் கூடி­யி­ருந்த பழங்­குடியின மக்­க­ளும், வன­வா­சி­க­ளும், இந்த வன உரி­மை­கள் சட்­டத்தை அமல்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர். அத்­து­டன் 16 மாநி­லங்­க­ளில் பழங்­குடி யின, வன­வா­சி­க­ளின் பராம்­ப­ரிய உரிமை கோரல்­கள் நிரா­க­ரிக்­க­பட்ட, 10 லட்­சம் குடும்­பங்­களை வெளி­யேற்ற வேண்­டும் என்று பிப்­ர­வரி மாதம் 13ம் தேதி சுப்­ரீம் கோர்ட் அளித்த தீர்ப்­புக்­கும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

இந்த தீர்ப்­புக்கு சுப்­ரீம் கோர்ட், சென்ற 28ம் தேதி தடை விதித்­தது. சுப்­ரீம் கோர்ட் தடை விதித்து இருந்­தா­லும், வனத்­துறை அதி­கா­ரி­கள், தங்­களை வன பகு­தி­யில் இருந்து வெளி­யே­று­மாறு நிர்ப்­பந்­திக்­கின்­ற­னர் என்று ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் கூறி­னார்­கள்.

எனது வீடு வனப்­ப­கு­தி­யில் அமைந்­துள்­ளது. நாங்­கள் அடுப்பு எரிக்க விறகு பொறுக்­க­வும், இலுப்பை காய்­களை பொறுக்­க­வும் வனத்­து­றை­யி­னர் அனு­ம­திப்­ப­தில்லை. வனப்­ப­கு­தியை விட்டு வெளி­யே­றுங்­கள் என்று நிர்ப்­பந்­திக்­கின்­ற­னர். வனத்­து­றையா இந்த பரந்த வனங்­களை உரு­வாக்­கி­யது? என்று கேட்­கின்­றார் தச­ரத்.

சுப்­ரீம் கோர்ட் தடை விதித்து இருந்­தா­லும் கூட, வனத்­து­றை­யி­ன­ரும், போலீ­சா­ரும் சேர்ந்து பழங்­கு­டி­யி­ன­ரை­யும், வன­வா­சி­க­ளை­யும் வெளி­யேற்­று­வது தொடர்­கி­றது. சென்ற ஜூலை 9ம் தேதி மத்­திய பிர­தே­சத்­தில் புர்­காம்­பூர் மாவட்­டத்­தில் உள்ள சிவால் என்ற கிரா­மத்­தில் வனத்­துறை அதி­கா­ரி­கள், தங்­களை வனப்­ப­கு­தி­யில் இருந்து வெளி­யேற்­று­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்த ‘பரிலா பழங்­குடி’ சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மீது துப்­பாக்கி சூடு நடத்­தி­னார்­கள். இந்த துப்­பாக்கி சூட்­டிற்கு பிறகு போலீ­சார் 153 பேர் மீது வழக்கு பதிவு செய்­துள்­ள­னர். இதில் இறந்­த­வர் மீதும் கூட போலீ­சார் வழக்கு பதிவு செய்து, தங்­கள் கட­மையை உணர்ச்­சியை நிரூ­பித்­துள்­ள­னர். இவர்­கள் வனப்­ப­கு­தியை ஆக்­கி­ர­மித்து மரங்­களை வெட்­டி­ய­தாக வழக்கு பதிவு செய்­துள்­ள­னர். மத்­திய பிர­தேச முத­ல­மைச்­சர் கமல்­நாத், ஆட்­சி­யா­ளர்­கள் வழக்­க­மாக செய்­வது போல் துப்­பாக்கி சூடு சம்­ப­வம் குறித்து மாஜிஸ்­தி­ரேட் விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார். அத்­து­டன் துப்­பாக்கி சூடு சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட அதி­கா­ரி­களை இட­மா­று­த­லும்  செய்­துள்­ளார்.

டில்­லி­யில் ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்து கொண்ட சிவால் கிரா­மத்­தைச் சேர்ந்த பழங்­கு­டி­யின மக்­கள் நீதி வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர். இந்த கிரா­மத்­தைச் சேர்ந்த பழங்­கு­டி­யின இளை­ஞ­ரான அந்­த­ராம் அவாசி (29), “துப்­பாக்கி சூடு நடத்­திய போலீஸ் அதி­கா­ரி­களை வேறு இடத்­திற்கு மாற்­று­வ­தற்கு பதி­லாக, அவர்­களை தற்­கா­லிக வேலை நீக்­கம் செய்ய வேண்­டும்.வனத்­துறை அதி­கா­ரி­கள் எங்­களை துன்­பு­றுத்­து­வதை வாடிக்­கை­யாக கொண்­டுள்­ள­னர். எங்­களை பயி­ரிட விடு­வ­தில்லை. நாங்­கள் வனப்­ப­கு­திக்கு சென்­றால் எங்­களை மிரட்டி, அடிக்­கின்­ற­னர். இது சட்­ட­வி­ரோ­தம்”­என்­று­கூ­றி­னார்.

உத்­த­ர­காண்ட் மாநி­லம் உதம்­சிங் நகர் மாவட்­டம் கதிமா தாலு­கா­வைச் சேரந்த பழங்­கு­டி­யின பெண் கமலா தேவி (45), இதே போன்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றார். அவர் கூறு­கை­யில், “ எங்­கள் பயிர்­களை புல்­டோ­சர் வைத்து வனத்­து­றை­யி­னர் அழித்­த­னர். இதை தட்­டிக் கேட்ட நான் உட்­பட 15 வன­வாசி பெண்­கள் மீது (2018,நவம்­ப­ரில்) போலீ­சார் வழக்கு பதிவு செய்­த­னர். வனத்­து­றை­யி­னர் எங்­கள் பயிர்­களை அழித்து, அந்த நிலங்­களை சுற்றி முள்­வேலி அமைத்து மரக்­கன்­று­களை நட்­ட­னர். தற்­போது எங்­களை வனப்­ப­கு­திக்கு செல்ல அனு­ம­திப்­ப­தில்லை” என்று கூறி­னார்.

இதே போல் ஜார்­கண்ட் மாநி­லத்­தி­லும் பழங்­கு­டி­யி­னர் எதிர்ப்பு தெரி­விக்­கின்­ற­னர். குந்தி மாவட்­டத்­தில் பழங்­கு­டி­யின மக்­கள் தங்­க­ளுக்கு அர­சி­யல் சாச­னப்­படி வனங்­க­ளில் நில உரிமை உள்­ளது என்று வலி­யு­றுத்­தி­னர். இதற்கு பதி­ல­டி­யாக போலீ­சார் குந்தி மாவட்­டத்­தில் வசிக்­கும் பத்­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பழங்­கு­டி­யின மக்­கள் மீது, 2017 ஜூலை மாதம் முதல் 2018 ஜூலை வரை ஒரு வரு­டத்­தில் ‘தேச துரோக’ வழக்கை பதிவு செய்­துள்­ள­னர்.

ஜந்­தர் மந்­தி­ரில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்து கொண்­ட­வர்­கள், வனத்­து­றை­யி­னர் லஞ்­சம் வாங்­கு­வ­தா­க­வும் குற்­றம் சாட்­டி­னர். மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள ரெய்­கார்க் மாவட்­டம், அம்­பி­வாலி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள், வனப்­ப­கு­தி­யில் விறகு பொறுக்க வனத்­து­றை­யி­னர் ரூ.2 ஆயி­ரம் வரை லஞ்­சம் கேட்­கின்­ற­னர். சில நேரங்­க­ளில் கோழி போன்ற பொருட்­க­ளை­யும் அப­க­ரித்து செல்­கின்­ற­னர் என்று தெரி­வித்­த­னர்.

ரோம் சிங் (54) என்ற பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர், நாங்­கள் வனப்­ப­கு­தி­யில் விறகு பொறுக்க வேண்­டும் எனில் வனத்­து­றை­யி­னர் ரூ.2ஆயி­ரம் முதல் ரூ.5 ஆயி­ரம் லஞ்­ச­மாக வாங்­கு­கின்­ற­னர். ஒரு முறை அவர்­கள் லஞ்­சம் கொடுக்­க­வில்லை என்­ப­தற்­காக எனது சகோ­த­ர­ரின் மாட்டு வண்­டியை எடுத்­துச் சென்று விட்­ட­னர் என்று தெரி­வித்­தார். இவர் மத்­திய பிர­தே­சம், பர்­கான்­பூர் மாவட்­டம் பகாரி கிரா­மத்­தைச் சேர்ந்த ‘பார்­லியா’ பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர்.

வன உரி­மை­கள் சட்­டப்­படி, பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள், வனப்­ப­கு­தி­யில் உரிமை கொண்­டாட விண்­ணப்­பிக்க வேண்­டும். இந்த விண்­ணப்­பத்­தின் மீது கிரா­மம், தாலுகா, மாவட்­டம் என மூன்று நிலை­க­ளில் உள்ள வன­உ­ரிமை கமிட்டி பரி­சீ­லித்து முடிவு செய்­யும். இவர்­கள் 2005, டிசம்­பர் 13ம் தேதிக்கு முன்­பாக வனப்­ப­கு­தி­க­ளில் வாழ்த்­தற்­கான ஆவ­ணங்­களை தாக்­கல் செய்ய வேண்­டும்.

ஜந்­தர் மந்­த­ரில் பங்­கேற்ற பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள், உரிய ஆவ­ணங்­களை சமர்ப்­பித்­தும், தங்­கள் விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். மகா­ராஷ்­டிரா மாநி­லம் ராய்­காட்­டைச் சேர்ந்த கட்­காரி பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வ­ரான நாது­ராம் சங்­கர் வாக்­மேர், “ மாவட்ட மட்­டத்­தில் விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­ப­டு­கி­றது என்று தெரி­வித்­தார். இவர் 2008 முதல் மூன்று முறை விண்­ணப்­பித்­துள்­ளார்.

சுப்­ரீம் கோர்ட் பிப்­ர­வ­ரி­யில் வனப்­ப­கு­தி­க­ளில் இருந்து பழங்­கு­டி­யி­னர், வன­வா­சி­களை வெளி­யேற்ற வழங்­கிய தீர்ப்­புக்கு தடை விதித்த பிறகு, சுப்­ரீம் கோர்ட்­டில் ஜூலை மாதம் எட்டு மாநி­லங்­கள் உரிய விதி­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டா­மல் உரிமை கோரும் விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­க­ப­டு­கி­றது என்று கூறி­யுள்­ளன. இந்த மாநி­லங்­க­ளி­டம் சுப்­ரீம் கோர்ட், உரிமை கோரும் விண்­ணப்­பங்­கள் எப்­படி பரி­சீ­லிக்­கப்­ப­டு­கி­றது. விண்­ணப்­பங்­களை நிரா­க­ரிக்க கார­ணம் என்ன என்று விளக்­கம் கேட்­டுள்­ளது.

சுப்­ரீம் கோர்ட் தடை விதித்த பிறகு, தங்­கள் உரிமை கோரும் விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் தெரி­வித்­த­னர். ஒடிசா மாநி­லம் சம்­பல்­பூர் மாவட்­டம், பம்ரா தாலு­கா­வைச் சேர்ந்த முண்டா பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த கிரி­கோரி சமந்த் (50) கூறும் போது, “எங்­க­ளில் பல பேர் உரிமை கோரும் விண்­ணப்­பத்தை சமர்ப்­பித்து விட்டு, அதை பற்றி மறந்து போனோம். ஜூன் மாதம் மட்­டும் 7 ஆயி­ரம் விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. நாங்­கள் சுப்­ரீம் கோர்ட் தடை உத்­த­ர­வுக்கு பிறகு பய­மில்­லா­மல் இருந்­தோம். ஆனால் நாங்­கள் எங்­கள் நிலத்தை பற்றி தான் கவ­லைப்­ப­டு­கின்­றோம். நாங்­கள் வெளி­யேற்­றப்­பட்­டால், எங்கு செல்­வது?. பல பழங்­குடி குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளி­டம் உரிமை கோர தேவை­யான ஆவ­ணங்­கள் இல்லை. எல்­லோ­ரி­டத்­தி­லும் ஆக்­கி­ர­மிக்­க­வில்லை என்ற சான்­றி­தழ் இல்லை. இந்த ஆவ­ணத்தை கொடுக்க வேண்­டி­யது மாநில அர­சின் பொறுப்பு என்று கூறி­னார்.

வன உரி­மை­கள் சட்­டத்­தில், கிராம பஞ்­சா­யத்­தில் முடிவு எடுத்த பிறகு, தாலுகா, மாவட்ட மட்­டத்­தில் உள்ள கமிட்­டி­கள் எவ்­வித ஆவ­ணங்­க­ளை­யும் கேட்க கூடாது  என தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. இந்த சட்­டம் வனப்­ப­கு­தி­யல் பாரம்­ப­ரி­ய­மாக வசிக்­கும் வன­வா­சி­கள் , நிலத்­தின் மீது உரிமை கோர முடி­யாத நிலை­யில் உள்­ளது என்­கின்­ற­னர். 2005, டிசம்­பர் 13ம் தேதிக்கு முன், மூன்று தலை­மு­றை­யாக வனப்­ப­கு­தி­யில் வசித்­தி­ருக்க வேண்­டும் என்று சட்­டத்­தில் கூறப்­பட்­டுள்­ளது. அதே சட்­டத்­தில் ஒரு தலை­முறை எனில் 25வரு­டங்­கள் என­வும் கூறப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யெ­னில் 75 வரு­டங்­கள் வனப்­ப­கு­தி­யில் வாழ்ந்­தற்­கான ஆதா­ரத்தை சமர்ப்­பிக்க வேண்­டும் என்று கூறு­கி­றது. (அர­சின் துறை­க­ளி­டம் கூட 75 வருட ஆவ­ணங்­கள் இருப்­பது சந்­தே­கமே. இந்­நி­லை­யில் வனப்­ப­கு­தி­யில் எவ்­வித பாது­காப்­பும் இன்றி குடி­சை­யில் வாழும் மக்­க­ளி­டம் 75 வருட ஆவ­ணங்­களை கேட்­பது எந்த வகை­யில் நியா­யம் என்­பது தெரி­ய­வில்லை.)

மேற்கு வங்­கா­ளம் ஜல்­பாய்­குரி மாவட்­டத்­தில் உள்ள சிப்சு வனப்­ப­கு­தி­யைச் சேர்ந்த பள்­ளிக்­கூட ஆசி­ரி­யர் சிபா சனு­வால் (43), இது பெரிய பிரச்­னை­யாக உள்­ளது என்­கின்­றார். ஜந்­தர் மந்­த­ரில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளில் பலர், எங்­க­ளது உரிமை கோரும் விண்­ணப்­பம் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. ஆனால் நாங்­கள் உரிமை கோரி­ய­தை­விட, குறைந்த அளவு நிலமே அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது என்­கின்­ற­னர்.

“நான் ஏழரை ஏக்­கர் நிலத்­திற்கு உரிமை கோரி விண்­ணப்­பித்­தேன். ஆனால் ஒன்­றரை ஏக்­கர் மட்­டுமே ஒதுக்­கி­யுள்­ள­னர்” என்று சந்­தி­ர­காந்த் விஷ்ணு ஜக்­தாப் (40) கூறி­னார். இவர் மகா­ராஷ்­டார மாநி­லம் ராய்­காட் தாலு­கா­வில் உள்ள அம்­பி­வாலி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த கட்­காரி என்ற பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர். இவர் மேலும் கூறு­கை­யில், “ நாங்­கள் விண்­ணப்­பித்த அளவு நிலம் ஒதுக்­கா­தது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது.எங்­க­ளுக்கு உரி­மை­யான நிலத்தை முழு­வ­து­மாக கொடுத்­தால், தங்­க­ளது நிலம் குறைந்­து­வி­டும் என்று அரசு கரு­து­கி­றது” என்று கூறி­னார்.

நன்றி: ஸ்கோரல் இணை­ய­த­ளத்­தில் விஜ­யாட்வா லால்­வானி எழு­திய கட்­டு­ரை­யின் உத­வி­யு­டன்.