மைக்கா சுரங்கங்களில் பலியாகும் குழந்தைகள்

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019

ஜார்­கண்ட் மாநி­லத்­தில் மைக்கா வெட்டி எடுக்­கும் சுரங்­கத்­தில் தனது மைத்­து­னி­யும், மற்ற நண்­பர்­க­ளும் பலி­யா­னதை பார்த்த பிறகு 15 வயது நிரம்­பிய ரிதிகா முர்மு, இனி நான் மைக்கா எடுக்க போக­மாட்­டேன் என்­கின்­றார். அத்­து­டன் மற்­ற­வர்­க­ளை­யும் போக வேண்­டாம் என்று தடுக்­கின்­றார்.  

“நான் மைக்கா வெட்டி எடுக்­கும் போது மண் சரிந்­தது. உதவி கேட்டு கூக்­கு­ரல் கொடுத்­தேன்” என்று அந்த சம்­ப­வத்தை நினைவு கூறும் ரிதிகா முர்மு, அவ­ரு­டன் மைக்கா எடுத்­துக் கொண்­டி­ருந்த இள வயது தோழியை சுரங்­கத்­தி­லேயே பலி கொடுத்­த­வர். அன்று அவ­ரு­டன் வேலை பார்த்த மைத்­துனி இடி­பா­டு­க­ளில் இருந்து மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார். “நான் இனி ஒரு போதும் மைக்கா சுரங்­கத்­திற்கு செல்ல மாட்­டேன். மற்ற குழந்­தை­க­ளை­யும் போக வேண்­டாம் என்று எச்­ச­ரித்­துள்­ளேன்” என்­கின்­றார் ரிதிகா முர்மு.

ஜார்­கண்ட் மாநி­லத்­தில் அம்­ஜ­கர் கிரா­மத்­தில் மைக்கா சுரங்­கத்­தில் மனி­தர்­கள் பலி­யா­வதை பற்றி வெளி­யு­ல­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்த ரிதிகா முர்மு விரும்­பு­கின்­றார். ஆனால் 25 வயது மனை­வியை மைக்கா சுரங்­கத்­தில் பலி கொடுத்த அவ­ரது சகோ­த­ரர் மோதி­லால் முர்மு உட்­பட மற்ற குடும்ப உறுப்­பி­னர்­கள் மைக்கா சுரங்­கத்­தில் விபத்து நடக்­க­வில்லை என்­கின்­ற­னர்.

2016ல் தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­சன் மைக்கா சுரங்­கத்­தில் குழந்­தை­கள் பலி­யா­வதை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது. ஆனால் இந்த குழந்­தை­கள் பலி­யா­வதை மூடி மறைக்க, அவர்­க­ளது குடும்­பத்­தா­ருக்கு பணம் வழங்கி விஷ­யம் வெளியே தெரி­யா­மல்  அமுக்­கு­கின்­ற­னர். இங்கு சட்­ட­வி­ரோ­த­க­மாக வெட்டி எடுக்­கப்­ப­டும் மைக்கா அழகு சாத­னப் பொருட்­கள், கார் பெயின்ட், எலக்ட்­ரா­னிக்ஸ் பொருட்­களை தயா­ரிக்க பயன்­ப­டு­கி­றது.

தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­சன் மைக்கா சுரங்­கத்­தில் இரண்டு மாதங்­க­ளில் ஏழு குழந்­தை­கள் பலி­யா­னதை வெளி­யு­ல­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­திய பிறகு, இந்­தி­யா­வில் மூன்று மாநி­லங்­க­ளில் இருந்து மைக்கா வாங்­கும் பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் சில கட்­டுப்­பா­டு­களை விதித்­தன. அரசு அதி­கா­ரி­கள் சட்­ட­வி­ரோத மைக்கா சுரங்­கங்­களை வரை­மு­றைப்­ப­டுத்­த­வும், சட்­டத்­திற்­குள் கொண்­டு­வ­ர­வும் திட்­டம் வகுக்க வேண்­டி­ய­தா­யிற்று.

ஆனால் தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­சன் இந்த வரு­டம் ஜார்­கண்ட் மாநி­லத்­தில் அதிக அளவு மைக்கா வெட்டி எடுக்­கப்­ப­டும் கொடிர்மா, கிரி­டிக் ஆகிய இடங்­க­ளில் மீண்­டும் ஆய்வு செய்­தது. அப்­போது மைக்கா சுரங்­கங்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்­கு­வ­தும், அதில் வேலை செய்­ப­வர்­கள் பலி­யா­வ­தும் தொடர்­க­தை­யாக இருப்­பதை கண்­கூ­டாக பார்த்­தது.

போலீஸ் ஆவ­ணங்­கள், உள்­ளூர் நாளி­த­ழில் வெளி­யான செய்­தி­கள், கட்­டு­ரை­கள், தொண்டு நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளின் பேட்­டி­கள், நேரில் பார்த்த சாட்­சி­கள், பலி­யா­ன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் ஆகி­யோ­ரி­டம் இருந்து திரட்­டிய தக­வல்­படி, 2018ல் இருந்து மைக்கா சுரங்­கங்­க­ளில் மூன்று குழந்­தை­கள் உட்­பட 19 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர். இதில் ஆறு பேர் பற்­றிய தக­வல் மட்­டுமே அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­வித்­துள்­ள­னர்.

மைக்கா சுரங்­கம் பற்­றிய செய்­தி­கள் அதிக அளவு வெளி­யா­ன­வு­டன், இதில் வேலை பார்க்­கும் சிறு­வர்­கள், வேலையை விட்டு விட்டு பள்­ளி­கூ­டத்­திற்கு செல்­வது அதி­க­ரித்­துள்­ளது. இந்த சுரங்­கங்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்­கு­வ­தால், இதில் விபத்து ஏற்­பட்டு பலி­யா­னால் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் போலீஸ் உட்­பட அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்த தயங்­கு­கின்­ற­னர். தங்­களை போலீ­சார் கைது செய்து விடு­வார்­களோ என்று அச்­சப்­ப­டு­கின்­ற­னர். அல்­லது சட்­ட­வி­ரோ­த­மாக இயங்­கும் மைக்கா சுரங்­கம் மூடி­னால் வேலை இன்றி வரு­மா­னம் இல்­லா­மல் போய்­வி­டுமோ என்று தயங்­கு­கின்­ற­னர் என்று போலீ­சா­ரும், தொண்டு நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளும் கூறு­கின்­ற­னர்.

சென்ற வரு­டம் மைக்கா சுரங்­கங்­க­ளில் ஐந்து பேர் பலி­யா­கி­யுள்­ளதை தொண்டு நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இந்த வரு­டம், இது­வரை யாரும் பலி­யா­க­வில்லை என்று ஜார்­கண்ட் மாநில அரசு கூறு­கி­றது

மைக்கா சுரங்­க­ளில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு உரிய இழப்­பீடு மறுக்­கப்­ப­டு­வ­தாக, பலி­யா­ன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். இதற்கு கார­ணம் போலீ­சார் இறப்­புக்கு கார­ணம் மைக்கா சுரங்க விபத்து என்­பதை மறைக்­கின்­ற­னர் அல்­லது அவர்­க­ளது குடும்­பத்­தா­ரால் மறைக்­கப்­பட்­டதே கார­ணம் என்­கின்­ற­னர்.

இந்த வருட ஆரம்­பத்­தில் கொடிர்­மா­வில் போலீஸ் அதி­காரி தமிழ்­வா­ன­னுக்கு, மைக்கா சுரங்­கத்­தில் ஒரு­வர் இறந்து கிடக்­கி­றார் என்ற தக­வல் கிடைத்­தது. அவ­ரும், அவ­ரது குழு­வி­ன­ரும் மைக்கா சுரங்­கத்­திற்கு செல்­வ­தற்­குள் இறந்­த­வ­ரின் சட­லம் அகற்­றப்­பட்­டது. அந்த கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் யாரும் இறக்­க­வில்லை என்­றும், விசா­ரணை செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் தெரி­வித்­த­னர்.

நாங்­கள் மைக்கா பொறுக்­கு­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை. அதே­நே­ரத்­தில் இது சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை என்­ப­தை­யும் பற்­றி­யும், இதை பற்­றிய விழிப்­பு­ணர்வை  ஏற்­ப­டுத்­து­கின்­றோம். இத­னால் பலி­யா­வது குறை­வ­து­டன், விபத்து நடந்­தா­லும் தெரி­விக்க வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது என்று போலீ­சார் கூறு­கின்­ற­னர்.

ஜார்­கண்ட் மாநில அர­சு­டன் இணைந்து குழந்தை தொழி­லா­ளர்­களை ஒழிக்­கும் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள கைலாஷ் சத்­யார்த்தி குழந்­தை­கள் அறக்­கட்­ட­ளை­யைச் சேர்ந்த கோவிந்த் கனால் கூறு­கை­யில், “மைக்கா சுரங்­கங்­க­ளில் பலி­யா­வதை பற்­றியோ விபத்து நடப்­பதை பற்­றியோ போலீ­சா­ரி­டம் கூறா­மல் இருப்­ப­தற்கு கார­ணம், அவர்­க­ளின் ஒரே வரு­மா­னத்தை இழக்க நேரி­டும் என்­பதே. நாங்­கள் மைக்கா சுரங்­கங்­க­ளில் வேலை செய்­யும் குழந்­தை­களை பற்­றி­யும், அங்கு பலி­யா­கு­ப­வர்­களை பற்­றி­யும் கவலை கொள்­கின்­றோம் என்று தெரி­வித்­தார்.

சர்­வ­தேச அள­வில் மைக்கா அதிக அளவு உற்­பத்தி செய்­யும் நாடு­க­ளில் இந்­தி­யா­வும் ஒன்று. ஒரு சம­யத்­தில் இந்­தி­யா­வில் 700 மைக்கா சுரங்­கங்­கள் இயங்­கின. இவற்­றில் சுமார் 20 ஆயி­ரம் பேர் வேலை செய்­த­னர். 1980ம் ஆண்­டு­க­ளில் சுரங்­கங்­க­ளில் இருந்து வெட்டி எடுக்­கப்­ப­டும் மைக்­கா­வுக்கு மாற்­றாக செயற்கை மைக்கா உற்­பத்தி செய்­யப்­பட்­டது. சுரங்­கங்­க­ளில் இருந்து வெட்டி எடுப்­ப­தற்கு செலவு அதி­க­மா­வது, கடு­மை­யான சுற்­றுச் சூழல் சட்­டங்­க­ளால் மைக்கா சுரங்­கங்­கள் பாதிக்­கப்­பட்­டன. ஆனால் சீனா­வின் பொரு­ளா­தா­ரத்­தின் வளர்ச்சி, சர்­வ­தேச அள­வில் இயற்கை அழகு சாத­னப்­பொ­ருட்­க­ளின் விற்­பனை அதி­க­ரிப்பு ஆகிய கார­ணங்­க­ளால், கைவி­டப்­பட்ட மைக்கா சுரங்­கங்­க­ளில் சட்­ட­வி­ரோ­த­மாக மைக்கா வெட்டி எடுப்­பது தொடங்­கி­யது. இதன் சட்­ட­வி­ரோத வர்த்­த­க­மும் அதி­க­ரித்­தது.

சட்­ட­வி­ரோத மைக்கா சுரங்­கங்­களை ஒழிக்க ஜார்­கண்ட் மாநில அரசு பல்­வேறு முயற்­சி­களை எடுத்து வரு­கி­றது. குழந்­தை­களை பள்­ளி­யில் சேர்ப்­பது, மைக்கா சுரங்­கங்­க­ளில் வேலை செய்­த­வர்­க­ளுக்கு மாற்று வேலை வாய்ப்பு, சிறு அள­வில் வியா­பா­ரம் செய்ய உதவி. அல்­லது மைக்கா சுரங்­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்கி, அங்கு வேலை செய்­ப­வர்­க­ளுக்கு பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வது போன்ற நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.

ஜார்­கண்ட் மாநில பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் மேம்­பாட்டு துறை முதன்­மைச் செய­லா­ளர் அமி­தாப் கௌசால் கூறு­கை­யில், “ மைக்கா சுரங்­கங்­க­ளில் வேலை பார்க்­கும் குழந்­தை­க­ளின் பெற்­றோர்­க­ளுக்கு வரு­மா­னத்­திற்கு மாற்று வழி­யில்­லாத கார­ணத்­தால், தங்­களை குழந்­தை­களை மைக்கா சுரங்­கங்­க­ளில் வேலைக்கு அனுப்­பு­கின்­ற­னர். 2016 முதல் இது­வரை கைலாஷ் சத்­யார்த்தி குழந்­தை­கள் அறக்­கட்­ட­ளை­யைச் சேர்ந்­த­வர்­க­ளின் முயற்­சி­யால் மைக்கா சுரங்­கங்­க­ளில் வேலை செய்த 2,500 குழந்­தை­களை மீட்டு பள்­ளி­யில் சேர்த்­துள்­ள­னர் என்று தெரி­வித்­தார்.

சட்­ட­வி­ரோ­த­மாக மைக்கா வெட்டி எடுக்­கப்­பட்ட இரண்டு சுரங்­கங்­கள் டிசம்­பர் மாதம் ஏலம் விட்டு தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நாங்­கள் மைக்கா சுரங்­கங்­களை சீர­மைக்­கும்  முயற்­சி­யல் ஈடு­பட்­டுள்­ளோம். இதன் மூலம் சட்­ட­பூர்­வ­மாக மைக்கை வெட்டி எடுக்க அனு­மதி வழங்­கப்­ப­டும். பல­ரின் வாழ்வு இதை நம்­பியே உள்­ளது என்று ஜார்­கண்ட் சுரங்­கம் மற்­றும் கனி­மத்­துறை செய­லா­ளர் அபு­பக்­கர் சித்­திக் தெரி­வித்­தார்.

அதே நேரத்­தில் தொண்டு நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ஜார்­கண்ட் அர­சின் மறு­வாழ்வு நட­வ­டிக்­கை­கள் பற்றி கவலை கொள்­கின்­ற­னர். 2016ல் தொடங்­கப்­பட்ட பாரீஸ் நகரை தலை­மை­யி­ட­மாக கொண்டு இயங்­கும் ரெஸ்­பான்­சி­பில் மைக்கா இனி­டி­விட் என்ற அமைப்பு [Responsible Mica Initiative (RMI)], 2021ம் ஆண்­டிற்­குள் மைக்கா சுரங்­கங்­க­ளின் பாது­காப்பை அதி­க­ரிப்­பது, இதில் வேலை செய்­யும் குழந்தை தொழி­லா­ளர் முறையை ஒழிப்­பது என இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

இதற்­காக மைக்­காவை பயன்­ப­டுத்­தும் பெரிய நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து 13 லட்­சத்து 30 ஆயி­ரம் டாலர் திரட்­டி­யுள்­ளது. இது பற்றி ரெஸ்­பான்­சி­பில் மைக்கா இனி­டி­விட் தலை­வர் பானி ப்ரிமன்ட் கூறு­கை­யில், “இந்­தி­யா­வில் மைக்கா சுரங்­கங்­கள் இயங்­கும் ஜார்­கண்ட் மாநி­லத்­தில் கொடிர்மா, கிரி­டிக், பீகார் மாநி­லத்­தில் நவடா ஆகிய மாவட்­டங்­க­ளில் உள்ள 80 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மைக்கா சுரங்­கங்­க­ளில் வேலை செய்­யும் குழந்தை தொழி­லா­ளர்­க­ளின் மறு­வாழ்வு, சுரங்­கங்­க­ளின் பாது­காப்­பிற்­காக நடை­மு­றை­ப­டுத்­தும் திட்­டத்­திற்கு ஆகும் செல­விற்­காக தேவைப்­ப­டும் நிதி­யில் 20 சத­வி­கி­தம் மட்­டுமே குறை­வாக திரட்­டப்­பட்­டுள்­ளது. குழந்­தை­களை பள்­ளிக்­கூ­டத்­தில் சேர்க்­கின்­றோம். தொழி­லா­ளர்­க­ளை­யும், அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரை­யும் மருத்து காப்­பீடு உட்­பட பல்­வேறு அர­சின் திட்­டங்­க­ளில் சேர்க்க உதவி செய்­கின்­றோம்” என்று அவர் தெரி­வித்­தார்.

ஒரு கிரா­மத்­தில் மரத்­தின் கீழ் சில பெண்­கள் அமர்ந்­துள்­ள­னர். அரு­கில் மைக்கா குவிந்­துள்­ளது. இவர்­கள் ஒரு கிலோ மைக்­காவை பத்து ரூபாய்க்கு விற்­பனை செய்ய சம்­ம­தம் தெரி­வித்­த­னர். இதே மைக்கா சர்­வ­தேச சந்­தை­யில் கிலோ 1,400 டாலர். மைக்­காவை எடுக்­கும் சுனிதா தேவி (26), “எங்­கள் வாழ்க்­கையே மைக்­கா­வில் தான் உள்­ளது. இதில் இருந்து கிடைக்­கும் பணத்­தில் தான் தேவை­யான உணவு, துணி­ம­ணி­க­ளுக்கு செலவு செய்­கின்­றோம். இந்த வேலையை விட்­டால், எங்­க­ளுக்கு வேறு வேலை இல்லை என்­கின்­றார். கொடிர்­மா­வில் மைக்கா சுரங்­கத்­தில் இருந்து கிரா­மத்­திற்கு செல்­லும் சாலை­யில் வரி­சை­யாக குழந்­தை­கள், பெண்­கள் என செல்­கின்­ற­னர். எல்­லோ­ரது கையி­லும் மினு­மி­னுக்­கும் மைக்கா உள்­ளது. எனது தந்தை சில மாதங்­க­ளுக்கு முன் மைக்கா சுரங்­கத்­தில் பலி­யா­னார். இதை பற்றி போலீ­சில் தெரி­விக்­க­வில்லை. மைக்கா என்­பதே எங்­கள் விதி. இதை வெட்டி எடுப்­பதே எங்­கள் வேலை என்­கின்­றார் 25 வயது நிரம்­பிய முக­மது பிலால் அன்­சாரி.

நன்றி: தி வயர் இணை­ய­த­ளத்­தில் ரோலி ஸ்ரீவஸ்­தவா. தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­சன்.