ஐஸ்வர்யம் தரும் வடபத்ரசாயி பெருமாள்!

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019

தல வர­லாறு : நந்­த­வ­னத்­தில் தாம் பறிக்­கும் பூக்­களை இறை­வ­னுக்கு மாலை­யாக கட்டி முத­லில் அதை தன் கூந்­த­லில் சூடி இறை­வ­னுக்கு தாம் ஏற்ற பொருத்­தம் உடை­ய­வளா என்­பதை கோதை கண்­ணா­டி­யிலே கண்டு களிப்­பாள். மீண்­டும் பூக்­களை களைந்து பூஜைக்கு கொடுத்து விடு­வாள். பெரி­யாழ்­வா­ரும் தின­மும் இதையே இறை­வ­னுக்கு சாத்­து­வார். ஒரு நாள் மாலை­யில் தலை­முடி இருப்­பது கண்டு அஞ்சி அதை தவிர்த்து விட்டு வேறு மலர்­களை சூட்­டி­னார்.

உடனே இறை­வன், ‘‘ஆழ்­வார்! கோதை­யின் கூந்­த­லில் சூட்­டிய மாலை­யையே நான் விரும்­பு­கி­றேன். அதையே எனக்கு சூட்டு,’’ என்­றார். ஆழ்­வா­ரும் கோதையை மானு­டர் யாருக்­கும் மண­மு­டிக்க சம்­ம­திக்­கா­மல் இறை­வ­னுக்­காக காத்­தி­ருந்­தார். கோதை­யும் இறை­வ­னையே நினைத்து ஏங்கி தொழு­த­ப­டியே இருந்­தாள்.

இறை­வ­னும் தாம் கோதையை நேசிப்­ப­தா­க­வும் தன்னை திரு­வ­ரங்­கத்­திற்கு வந்து சந்­திக்க சொல்ல, கோதை­யும் பூப்­பல்­லக்­கில் அங்கு சென்று இறை­வ­னோடு ஐக்­கி­ய­மா­னாள். ஸ்ரீவில்­லி­புத்­தூ­ரி­லும் கோதை­யோடு சேர்ந்து எழுந்­த­ருள வேண்­டும் என்று பிரார்த்­திக்க இறை­வ­னும் ஏற்று இத்­த­லத்­தில் எழுந்­த­ரு­ளி­யுள்­ளார். வைண­வர்­க­ளின் முக்­கியத்தல­மாக இக்­கோ­யில் போற்­றப் படு­கி­றது.

தல பெருமை: மூலஸ்­தா­னத்­தில் விம­லாக்­ருதி விமா­னத்­தின்கீழ் வட­வி­ரு­சத்­தி­ன­டி­யில் அர­வ­ணைப் பள்­ளி­யில் ஸ்ரீதேவி, பூதேவி அடி­வ­ருட சய­னக்­கோ­லத்­தில் பெரு­மாள் காட்சி தரு­கி­றார். இவ­ரைச் சுற்றி மூன்று பக்­கங்­க­ளி­லும் கதை வேலை­யாய் செய்து வர்­ணம் தீட்­டப்­பட்ட கரு­டன், சேனை முத­லி யார், சூரி­யன், தும்­ப­ரு­நா­ர­தர், சனத்­கு­மா­ரர், வில், கதை, சக்­க­ரம், சங்கு, பெரு­மா­ளின் நாபிக் கம­லத்­தி­ லி­ருந்து உண்­டான தாம­ரை­யில் அமர்ந்த பிரம்மா, வாள் சன­கர், கந்­தர்­வர்­கள், சந்­தி­ரன், மது­கை­ட­பர், பிருகு, மார்க்­கண்­ட­டே­யர் உரு­வங்­கள் இருக்­கின்­றன. விமா­னத்­தைச் சுற்றி வர விமா­னத்­திலே ஒரு சிறு­விட்ட வாசல் பிரா­கா­ர­மும் இருக்­கி­றது. இதில் திரு­மு­டி­யை­யும் திரு­வ­டி­க­ளை­யும் சேவிக்க சிறிய திட்டி வாசல்­கள் உள்­ளன. இவை மார்­க­ழித் திரு­நாள் ஆரம்­பத்­திற்கு  முதல் நாள் பிரி­யா­வி­டை­யன்று யாவ­ரும் வழி­ப­ட­ தி­றந்து வைக்­கப்­ப­டு ­கின்­றன.

திருப்­ப­தி­யில் புரட்­டாசி 3வது சனிக்­கி­ழமை பிரம்­மோற்­ச­வத்­துக்கு ஆண்­டாள் மாலையை திருப்­பதி பெரு­மா­ளுக்கு அணி­விக்­கப்­ப­டு­கின்­றது. இங்கு ஆண்­டாள் திருக்­கல்­யா­ணத்­துக்கு திருப்­பதி வெங்­க­டா­ஜ­ல­பதி கோயி­லி­லி­ருந்து திரு­ம­ணப் பட்­டுப் புடவை வரும்.  மது­ரை­யில் சித்­தி­ரைத் திரு­விழா அழ­கர் எதிர் சேவை­யின் போது ஆண்­டாள் சூடிக்­கொ­டுத்த மாலை­யைத்தான் கள்­ள­ழ­கர் அணி­விக்­கி­றார்.

ஆண்­டாள் மடி­யில் ரங்­க­நா­தர்: ஸ்ரீரங்­கம் ரங்­க­நா­தர், ஆண்­டா­ளின் மடி­யில் சய­னித்­தி­ருப்­பார். அது­போல, ஸ்ரீவில்­லிப்­புத்­தூர் கோயில் ஆடித்­தி­ரு­வி­ழா­வின் 7ம் நாளில் ரங்க மன்­னார் சுவாமி, ஆண்­டா­ளின் மடி­யில் சய­னித்த கோலத்­தில் அரு­ளு­வ­தைக் காண­லாம். இவ்­வூர் கிருஷ்­ணன் கோயி­லில் இந்த நிகழ்ச்சி நடக்­கும். தம்­ப­தி­ய­ரி­டையே ஒற்­று­மையை வலுப்­ப­டுத்­தக்கூடி­யது.

திரட்­டுப்­பால் நைவேத்­யம்: கொண்­டைக் க­டலை, சுண்ட காய்ச்­சிய பால், வெல்­லம் ஆகி­யவை சேர்க்­கப்­பட்ட திரட்­டுப்­பால், மணிப்­ப­ருப்பு நைவேத்­யத்தை ஆண்­டா­ளுக்கு படைக்­கின்­ற­னர். திரு­ம­ணம் முடிக்­கும் பெண்­கள் இதைச் சாப்­பிட்­டால் ஆரோக்­கி­ய­மான உடல்­நிலை கிடைக்­கும். ஆண்­டா­ளுக்கு பெரு­மா­ளு­டன் திரு­ம­ணம் நடக்­கும் முன் அவ­ளுக்­கும் இவ்­வாறு கொடுத்­த­னர்

பாவை நோன்பு: பெண்­கள், எவ்­வாறு இருக்க வேண்­டும் என்­ப­தற்கு உதா­ர­ண­மாக திகழ்ந்­த­வள் ஆண்­டாள். பெரு­மாள் மீது பக்தி கொண்டு அவ­ரையே தன் கண­வ­னாக அடைய விரும்­பி­ய­வள். அவள் கண்­ணனை மணக்க வேண்டி மார்­கழி மாதத்­தில் பாவை நோன்பு இருந்­தாள். அவ­ளுக்கு அருள் செய்த சுவாமி, பங்­குனி உத்­தி­ரத்­தில் திரு­ம­ணம் செய்து கொண்­டார். ஆகவே, பெண்­கள் பாவை நோன்பு இருந்­தால் விரும்­பிய கண­வன் கிடைப்­பர் என்­பது நம்­பிக்கை.

‘ஏலே' ஆண்­டாளு!: திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் செல்­ல­மா­க­வும், கோப­மா­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­டும் வார்த்தை ‘ஏலே'. ஸ்ரீவில்­லி­புத்­தூர் ஒரு காலத்­தில் திரு­நெல்­வே­லியை சார்ந்தே இருந்­தது. இதன் கார­ண­மாக ‘ஏலே' என்ற வார்த்தை இங்­கும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. ஆண்­டாள் காலத்­தில் இந்த வார்த்தை ‘எல்லே' என்று இருந்­த­தாம். திருப்­பா­வை­யில் ‘எல்லே இளங்­கி­ளியே இன்­னும் உறங்­கு­தியோ?' என தோழி­யைப் பார்த்து கேட்­கி­றாள் ஆண்­டாள். ‘எல்லே' என்ற செய்­யுள் வார்த்­தையே திரிந்து ‘ஏலே' என்று ஆன­தா­கச் சொல்­வர். குழந்­தை­கள் ஆணா­யி­னும், பெண்­ணா­யி­னும் ‘ஏலே' என செல்­ல­மாக அழைப்­பர்.

தமி­ழக அரசு சின்­னம்:  ஸ்ரீவில்லிபுத்­தூர் வட­பெ­ருங்கோ­யி­லு­டை­யான் சன்­னதி ராஜ­கோ­பு­ரத்தை கட்­டி­ய­வர் பெரி­யாழ்­வார். 11 நிலை­கள், 11 கல­சங்­க­ளு­டன் இருக்­கும் இக்­கோ­பு­ரத்­தின் உய­ரம் 196 அடி. பெரி­யாழ்­வார் காலத்­தில் ஒரு ரூபாய்க்கு 196 காசு­கள் மதிப்­பி­ருந்­த­தாம். இதன் அடிப்­ப­டை­யில் அவர், இந்த உய­ரத்­தில் கோபு­ரம் கட்­டி­ய­தாக சொல்­கி­றார்­கள். ஆனால், என்ன கார­ணத்­தாலோ பெரி­யாழ்­வார் இக்­கோ­பு­ரத்தை கட்­டி­ய­போது சிற்­பங்­கள் எது­வும் அமைக்­க­வில்லை. சிலை­கள் இல்­லா­மல், தமி­ழர்­க­ளின் கட்­ட­டக்­க­லையை எடுத்­துக்­காட்­டும் வித­மாக இருந்­த­தும், இக்­கோ­பு­ரம் தமி­ழக அர­சின் சின்­ன­மாக இடம்­பி­டிக்க ஒரு கார­ண­மாக அமைந்­தது.

பொது தக­வல்: கி.பி. 1536ம் ஆண்டு பாண்­டிய மன்­னர்­க­ளா­லும் சோழ மன்­னர்­க­ளா­லும் விரி­வு­ப­டுத்தி கட்­டப்­பட்­டது.

பிரார்த்­தனை: திரு­மண வரம், குழந்தை பாக்­கி­யம், கல்வி ஞானம், வியா­பார விருத்தி, குடும்ப ஜஸ்­வர்­யம் கிடைக்க, விவ­சா­யம் செழிக்க இத்­த­லத்து பெரு­மா­ளி­டம் பக்­தர்­கள் வேண்­டிக் கொள்­கின்­ற­னர்.

நேர்த்­திக்­க­டன்: பெரு­மா­ளுக்கு வெண்­ணெய் பூசு­தல், சுவா­மிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்­த­லாம். ஊது­வத்தி, வெண்­ணெய் சிறு விளக்­கு­கள், துளசி தளங்­கள், பூக்­கள், பூமா­லை­கள் முத­லி­யன படைக்­க­லாம். பிர­சா­தம் செய்து இறை­வ­னுக்கு பூஜை செய்து பக்­தர்­க­ளுக்கு கொடுக்­க­லாம். இது தவிர கோயி­லுக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தா­னம் செய்­ய­லாம்.      

திரு­விழா: ஆடிப்­பூ­ரத் திரு­விழா 10 நாள், புரட்­டாசி பெரிய பெரு­மாள் உற்­ச­வம் 10 நாள், பங்­குனி திருக்­கல்­யாண உற்­ச­வம் 10 நாள், மார்­கழி எண்­ணெய் காப்பு திரு­நாள், கிருஷ்­ண­ ஜெ­யந்தி, வைகுண்ட ஏகா­தசி ஆகிய நாட்­க­ளில் கோயி­லில் பக்­தர்­க­ளின் வருகை பெரு­ம­ள­வில் இருப்­பது சிறப்பு. தமிழ், ஆங்­கில வரு­டப்­பி­றப்பு, தீபா­வளி, பொங்­கல் ஆகிய விசேஷ நாட்­க­ளில் பெரு­மா­ளுக்கு சிறப்பு அபி­சேக ஆரா­த­னை­கள் நடை­ பெ­றும் போது ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்து கொள்­வர்.

திறக்­கும் நேரம்: காலை 6 மணி முதல் 11   மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8   மணி வரை.

முக­வரி: ஆண்­டாள் திருக்­கோ­யில், ஸ்ரீவில்­லி­ புத்­தூர் -  626 125, விரு­து­ந­கர் மாவட்­டம்.