உலக அழ­கி­யின் திரை­யு­ல­க பிர­வே­சம்

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019

மனுஷி சில்­லார் உலக அழகி பட்­டம் வென்ற நாளில் இருந்தே, அவ­ரது பாலி­வுட் பிர­வே­சம் குறித்து அடிக்­கடி தக­வல் வெளி­யாகி வந்­தது. ஒரு­ வ­ழி­யாக இப்­போ­து­தான் அது நிஜ­மா­கி­யி­ருக்­கி­றது.

பிர­சித்தி பெற்ற பிருத்­வி­ரா­ஜன் – சம்­யுக்தை காதல் கதையை, ‘பிருத்­வி­ராஜ்’ என்ற பெய­ரில் பிரம்­மாண்­ட­மான சினி­மா­வா­கத் தயா­ரிக்­கி­றது, யஷ் ராஜ் பிலிம்ஸ். இதில்­தான் அறி­மு­க­மா­கி­றார், மனுஷி. பிருத்­வி­ரா­ஜாக டாப் ஸ்டார் அக்‌ஷய் கு­மா­ரும் சம்­யுக்­தை­யாக மனு­ஷி­யும் நடிக்­கின்­ற­னர்.

முதல் வாய்ப்பே பிரம்­மாண்­ட­மாக அமைந்­தி­ருப்­ப­தில், மகிழ்ச்­சிக்­க­ட­லில் திளைக்­கி­றார் மனுஷி.

‘‘இந்த பிர­ம்மாண்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்­துள்ள மிகப்­பெ­ரிய அங்­கீ­கா­ரம். என்­னு­டைய வாழ்க்கை, நினைத்து பார்க்­காத கற்­ப­னை­க­ளா­கவே நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. மிஸ் இந்­தியா, மிஸ் வேர்ல்டு பட்­டம் பெறு­வேன் என்று நான் கற்­பனை செய்­ததே இல்லை. அது­போல், இப்­படி ஒரு பிரம்­மாண்­ட­மான சினிமா வாய்ப்பு வரும் என்­றும் நினைத்­துப் பார்த்­த­தில்லை. மிக­வும் பிர­ப­ல­மான இள­வ­ரசி சம்­யுக்தை வேடம், புது­மு­க­மான எனக்கு மிகப்­பெ­ரிய சவால்­தான். சம்­யுக்தை கதா­பாத்­தி­ரத்தை, முடிந்த அள­வுக்கு சிறப்­பாக சித்­த­ரிக்க முயற்­சிப்­பேன்’’ என்று பேட்­டி­ய­ளித்­தி­ருக்­கி­றார் மனுஷி.