கமல் மகள் ரொம்ப குஷி!

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019

கமல் மக­ளான ஸ்ருதிஹாசன் கடந்த இரு ஆண்­டு­க­ளாக நடிப்­பில் தீவி­ரம் காட்­ட­வில்லை. அதே வேளை­யில், காலத்­தை­யும் வீண­டிக்­க­வில்லை.  இந்த ‘பிரேக்’ காலத்­தில், தனக்கு விருப்­ப­மான இசைப்­ப­ய­ணத்­தில் ஈடு­பட்­டார். லண்­ட­னில் உள்ள கபேக்­க­ளில் சில இசை நிகழ்ச்­சி­களை நடத்­தி­னார்.

இப்­போது மீண்­டும் சினி­மா­வில் தீவி­ர­மா­கி­யி­ருக்­கும் ஸ்ருதி, ‘கிராக்’ என்ற தெலுங்கு படத்­தில் ரவி தேஜா­வுக்கு ஜோடி­யாக நடிக்­கி­றார்.

ஸ்ருதி­யின் ‘குஷி’ பேட்டி:

‘‘நான் தமி­ழச்­சி­யாக இருந்­தா­லும், தெலுங்கு ரசி­கர்­கள் என்னை மிக­வும் விரும்­பு­கின்­ற­னர். தெலுங்கு திரை­யு­ல­கில் இருந்­து­தான் என்­னு­டைய வெற்­றிப்­ப­ய­ணம் தொடங்­கி­யது. தெலுங்கு படங்­க­ளில் நடிப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி.  ‘எல்சா’ என்ற ஆங்­கில அனி­மே­ஷன் படத்­தி­லும், டப்­பிங் குரல் கொடுத்­துள்­ளேன். பல மொழி­க­ளில் தயா­ரிக்­கப்­ப­டும் இந்த படம், இம்மாதம் வருகிற 22ம் தேதி வெளி­யா­கி­றது’’.

***