வங்கதேசத்துடன் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2019 13:50

கொல்கத்தா,

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்க தேசத்துக்கு எதிரான முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.

இப்போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

விராட் கோலி 136, ரஹானே 51 ரன்கள் சேர்த்தனர்.

வங்கதேச தரப்பில் அல் அமீன் 3  -85, எபாதத் 3 - 91 விக்கெட்டுகள் எடுத்தனர்.

241 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சா்மா 4 -விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.