‘கோடீஸ்வரி’ ராதிகாவுக்கு அமிதாப் வாழ்த்து!

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2019

ராதிகா தொகுத்து வழங்க,  கலர்ஸ் தமிழில் அடுத்த மாதத்திலிருந்து ‘கோடீஸ்வரி’ குவிஸ் கேம் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது.

தமிழ்நாட்டில் படித்த மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாகவும், அவர்களின் ஆவலை துாண்டுவதாகவும், அறிவுத் திறமைக்கு ஏற்ற நிகழ்ச்சியாகவும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி இருக்கும். மேலும் இது சாதாரண பெண்களின் வாழ்க்கையை மாற்றும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ராதிகாவை மிகவும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘‘தொகுப்பாளராக இருந்து ‘கோடீஸ்வரி’ பயணத்தை நீங்கள் துவங்குகிறீர்கள். அதற்காக நான் கண்டிப்பாக உங்களை வாழ்த்த வேண்டும். ஏனெனில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வரலாற்றில் முதன்முறையாக ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் பெண்களாக இருக்க போகிறார்கள். இது தனித்துவமானது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஊக்கமளிப்பதோடு, அவர்களுக்கு உறுதியையும் அளிக்கும். இந்த நிகழ்ச்சியை நடத்தும் உங்களுக்கும், இதில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பாராட்டியிருக்கிறார்.