சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 419 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2019

நடி­கர்­கள் : சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஹன்­சிகா மோத்­வானி, ரகு­மான், விவேக், சந்­தா­னம், விஜ­ய­கு­மார், ராதா­ரவி, டேனி சபனி, முகேஷ் ரிஷி, மொட்டை ராஜேந்­தி­ரன், மற்­றும் பலர். இசை : தேவி ஸ்ரீ பிர­சாத், ஒளிப்­ப­திவு : ப்ரியன், எடிட்­டிங் : வி.டி. விஜ­யன், தயா­ரிப்பு : எஸ். லக்ஷ்­மன் குமார், திரைக்­கதை,  இயக்­கம் : ஹரி.

‘சிங்­கம்’ படத்­தின் முதல் பாகத்­தில் வில்­லன் மயில்­வா­க­னனை (பிர­காஷ்­ராஜ்) கொல்­லும் துரை­சிங்­கம் (சூர்யா) போலீஸ் வேலையை ராஜி­னாமா செய்­கி­றார். தொடர்ச்­சி­யான இரண்­டாம் பாகத்­தில் உள்­துறை அமைச்­சர் ராம­நா­தன் உத்­த­ர­வுப்­படி அண்­டர்­க­வர் ஆபீ­ச­ரான சிங்­கம், என்.சி.சி. ஆபீ­ச­ராக துாத்­துக்­குடி பள்­ளி­யில் பணி­யாற்­று­கி­றார். துாத்­துக்­குடி பகு­தி­யில் நடை­பெ­றும் போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­களை பிடிப்­ப­தற்­காக சிங்­கம் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது முதல்­வர் (கே. விஸ்­வ­நாத்) மற்­றும் உள்­துறை அமைச்­ச­ருக்கு மட்­டுமே தெரி­யும். போலீஸ் வேலையை விட்­ட­தால் துரை­சிங்­கத்­தின் மீது கோப­மாக இருக்­கும் தந்தை சவுந்­தி­ர­பாண்டி (ராதா­ரவி), காதலி காவ்­யா­வு­ட­னான (அனுஷ்கா ஷெட்டி) திரு­ம­ணத்தை ஒத்தி வைக்­கி­றார். பள்­ளி­யில் மாணவி சத்யா (ஹன்­சிகா மோத்­வானி) துரை­சிங்­கத்தை நேசிக்­கி­றாள். காவ்­யா­வு­டன் மோதும் சத்­யா­வி­டம் சிங்­கம் தங்­க­ளது காத­லை­யும், திரு­ம­ணத்­திற்­காக காத்­தி­ருப்­ப­தை­யும் எடுத்­துக்­கூறி எச்­ச­ரிக்­கி­றான். மனம் திருந்தி இவர்­க­ளு­டன் நட்­பா­கும் சத்யா தொழி­ல­தி­பர் தங்­க­ரா­ஜின் (ரகு­மான்) அண்­ணன் மகள்.

பள்­ளி­யில் பணி­பு­ரி­யும் சூசை (சந்­தா­னம்) உள்­ளூர் நில­வ­ரங்­களை துரை­சிங்­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­து­கி­றான். சிங்­கம் ராம­நா­தன் உத­வி­யு­டன் தனது டீம் ஆட்­க­ளான எரி­மலை (விவேக்), கரீம் (மன்­சூர் அலி­கான்) ஆகி­யோரை தூத்­துக்­கு­டிக்கு வர­வ­ழைக்­கி­றான். தங்­க­ராஜ் மற்­றும் பாய் (முகேஷ் ரிஷி) இரு­வ­ரும் கடற்­க­ரை­யோர பகு­தி­களை தங்­கள் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருப்­ப­தோடு வெளி­நாட்டு கடத்­தல்­கா­ரர்­க­ளோ­டும் தொடர்­பில் இருப்­ப­வர்­கள். பாயின் கையாள் சகா­யம் (மொட்டை ராஜேந்­தி­ரன்) உள்­ளூ­ரில் நடக்­கும் ஜாதிச்­சண்­டை­யில் ஒரு பெண்ணை கடத்­து­கி­றான். அத­னால் ஏற்­ப­டும் கல­வ­ரத்­தால் பள்ளி மூடப்­ப­டு­கி­றது. நில­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்த தான் சேக­ரித்த விவ­ரங்­க­ளோடு சிங்­கம் டிஎஸ்­பி­யாக கள­மி­றங்­கு­கி­றான். பெண்ணை காப்­பாற்றி உள்­ளூர் மக்­க­ளின் அபி­மா­னத்­தைப் பெறு­கி­றான். அவ­ரது தந்­தை­யும் மகனை மன்­னித்து நிச்­சய ஏற்­பா­டு­களை செய்­கி­றார்.

சகா­யத்தை கைது செய்ய செல்­லும் சிங்­கத்­தி­டம் தங்­க­ரா­ஜின் ஓட்­டல் திறப்பு விழா­விற்­காக வந்த இவர்­க­ளது வெளி­நாட்டு கூட்­டாளி டேனி­யும் (டேனி சபனி) மாட்­டு­கி­றான். லாக்­கப் ரூமில் இருக்­கும் டேனியை காப்­பாற்ற தங்­க­ரா­ஜின் ஏற்­பாட்­டின்­படி உள்­ளூ­ரி­லி­ருந்து அமைச்­சர்­கள் வரை பேசி­யும் பல­னில்லை. சிங்­கம் இல்­லாத நேரத்­தில் ரவு­டிக்­கும்­பல் மூல­மாக தங்­க­ராஜ் டேனியை விடு­விக்­கி­றான். இந்த போராட்­டத்­தில் போலீ­சார் காய­ம­டை­வ­தோடு டேனி, கரீமை குத்­தி­வி­டு­கி­றான். சஸ்­பெண்ட் செய்­யப்­ப­டும் சிங்­கம் சென்­னை­யில் ராம­நா­தனை சந்­தித்து முழு உண்­மை­க­ளை­யும் கூறி மீண்­டும் பணி­யில் சேர்­கி­றான். போதைப்­பொ­ருட்­களை கடத்­த­வி­டா­மல் சகா­யத்தை கைது செய்­கி­றான்.

காவ்யா, சிங்­கத்­தின் நிச்­சய நிகழ்ச்­சி­யில் தங்­க­ராஜ் ரவு­டி­கள் மூலம் கல­வ­ரம் செய்­கி­றான். அவர்­களை வெல்­லும் சிங்­கம் தங்­க­ராஜை அவ­னது வீட்­டில் வைத்து கைது செய்­கி­றான். தங்­க­ரா­ஜைப் பற்­றிய விவ­ரங்­களை சிங்­கத்­திற்கு கொடுத்து உத­விய சத்­யாவை அவ­ளது தந்­தையே (தலை­வா­சல் விஜய்) விஷம் கொடுத்து கொல்­வ­தோடு அவ­மா­னத்­தால் தற்­கொலை செய்­த­தாக ஜோடிக்­கி­றார். சத்­யா­வின் இழப்­பி­னால் வருந்­தும் சிங்­கம் தங்­க­ராஜை வெளி­வ­ரா­த­படி செய்­வ­தோடு தப்­பித்த டேனியை பிடிப்­ப­தற்­காக முதல்­வ­ரின் உத­வி­யு­டன் தென்­னாப்­ரிக்­கா­வுக்கு செல்­கி­றான். அங்­குள்ள போலீ­சா­ரின் உத­வி­யு­டன் டேனியை கைது செய்து இழுத்து வந்து, அவன் தப்­பித்­துச் சென்ற அதே லாக்­கப் ரூமில் அடைக்­கி­றான். எதி­ரி­கள் ஒழிந்­த­தோடு சிங்­கத்­தின் திரு­ம­ண­மும் இனிதே நடக்­கி­றது.