சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 19 நவம்பர் 2019 14:58

சென்னை,

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி சர்க்கரை மட்டும் வாங்கக்கூடிய குடும்ப ரேசன் அட்டையை வைத்திருப்பவர்கள் இன்று முதல் நவம்பர் 26 வரை http://tnpds.gov.in என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும், உதவி ஆணையரிடமும் சென்று தங்களுடைய தகுதியின் அடிப்படையில் அரிசி பெறும் ரேஷன் அட்டைகளாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத்‌ திட்டத்தில்‌ 10,19,491 ரேசன்‌ கார்டுகள்‌ தற்போது சர்க்கரை ரேசன்‌ கார்டுகளாக உள்ளன .

 பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.