மாதுளைக்கு மாறும் ஆப்பிள் விவசாயிகள்

பதிவு செய்த நாள் : 16 நவம்பர் 2019

இமா­சல பிர­தே­சத்­தில் ஆப்­பிள் தோட்ட விவ­சா­யி­கள் பலர் பரு­வ­நிலை மாற்­றத்­தால் மாதுளை பயி­ரிட தொடங்­கி­யுள்­ள­னர். இனி ஆப்­பிள் மரங்­களை வளர்ப்­பது லாப­க­ர­மா­ன­தாக இருக்­காது என்­றும் கரு­து­கின்­ற­னர்.

இமா­ச­ல­பி­ர­தே­சத்­தில் குல்லு மாவட்­டத்­தில் உள்ள மங்­க­ளூர்–­­பஞ்­சார் பகு­தி­யைச் சேர்ந்த விவ­சாயி பத்­ம­தேவ் (52). இவர் கடந்த முப்­பது வரு­டங்­க­ளாக ஆப்­பிள் மரங்­களை வளர்த்து வந்­தார். ஆனால் சில வரு­டங்­க­ளாக ஆப்­பிள் வளர்ப்­பதை கைவிட்­டுள்­ளார். இம­ய­ம­லை­யின் அடி­வா­ரத்­தின் கடை­கோ­டி­யில் அமைந்­துள்ள இவ­ரது கிரா­மத்­தில் ஆப்­பிள் மரங்­களை வளர்ப்­பது இய­லா­த­தாகி விட்­டது. கார­ணம் பரு­வ­நிலை மாற்­றமே. பரு­வ­நிலை மாற்­றத்­தால் ஆப்­பிள் மரங்­களை வளர்ப்­ப­தற்கு உரிய குளிர்ச்சி இல்­லா­மல் போய் விட்­டது என்­கின்­ற­னர்.

இமா­சல பிர­தே­சத்­தில் மாறி­வ­ரும் பரு­வ­நி­லை­யால் ஆப்­பிள் மரங்­களை வளர்ப்­பது கஷ்­டம். எனவே இதற்கு தீர்வு காணும் வரை விவ­சா­யி­கள் மாற்­றாக மாதுளை, பிளம்ஸ், பீச் ஆகிய பழ மரங்­களை வளர்க்­கு­மாறு தோட்­டக்­க­லைத்­துறை நிபு­ணர்­கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­னர்.

இவர்­கள் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு முன்பே பத்­ம­தேவ் போன்ற விவ­சா­யி­கள் ஆப்­பிள் மரம் வளர்ப்­பதை கைவிட்டு விட்டு, மாதுளை மரங்­களை வளர்க்க ஆரம்­பித்து விட்­ட­னர். அவ­ரைப் பொருத்­த­மட்­டில் ஆப்­பிள் மரங்­களை வளர்ப்­ப­தற்கு தகுந்த பரு­வ­நிலை இல்லை என்­பது மட்­டு­மல்ல, பொரு­ளா­தார ரீதி­யாக மாதுளை வளர்ப்­பதே இலா­ப­க­ர­மா­ன­தாக உள்­ளது.

காஷ்­மீர் ஆப்­பிள் போன்றே இமா­ச­ல­பி­ர­தேச ஆப்­பி­ளும் புகழ் பெற்­றது. பரு­வ­நிலை மாற்­றத்­தால் இம­ய­மலை அடி­வா­ரத்­தின் தொலை­தூர பகு­தி­யில் உள்ள பஞ்­சார் போன்ற பகுதி விவ­சா­யி­கள் ஆப்­பிள் மரம் வளர்ப்­பது லாப­க­ர­மா­ன­தாக இல்லை என்று உணர்ந்து வேறு பழ மரங்­களை வளர்க்க ஆரம்­பித்து விட்­ட­னர்.

இம­ய­மலை பிராந்­திய மாநி­லங்­க­ளில், குறிப்­பாக மலை அடி­வா­ரத்­தில் இருந்து தொலை­வில் உள்ள பகு­தி­க­ளில் பரு­வ­நிலை மாற்­றத்­தால் விவ­சா­யம், பழ­மர தோட்­டங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்,  ( ‘இம­ய­மலை பிராந்­தி­யம்’ எனப்­ப­டு­வது ஜம்­மு–­­காஷ்­மீர், இமா­ச­ல­பி­ர­தே­சம், உத்­த­ராஞ்­சல், சிக்­கிம், அரு­ணா­ச­ல­பி­ர­தே­சம், மேக­லாயா, நாகா­லாந்து, மணிப்­பூர், மிசோ­ரம், மற்­றும் அஸ்­ஸாம் மாநி­லத்­தின் திமா ஹாசோ, கப்­ரி­அன்­லாங், மேற்கு வங்­கத்­தின் டார்­ஜி­லிங், கலிம்­போங் ஆகிய மலை­பி­ர­தேச மாவட்­டங்­கள் அடங்­கி­யவை.)

குல்லு மாவட்­டத்­தில் பல பகு­தி­க­ளில் இந்­திய இம­ய­மலை பரு­வ­நிலை தழு­வல் திட்­டத்­தின் படி, தோட்ட பயிர்­கள் பற்றி ஆராய்ச்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில் பஞ்­சார் நக­ரமே பரு­வ­நிலை மாற்­றத்­தால் அதிக அளவு பாதிக்­கப்­பட்டு இருப்­பது தெரி­ய­வந்­தது.

பஞ்­சார் பகுதி விவ­சா­யி­கள் சுவை­யான ராயல் ரக ஆப்­பிள் மரங்­க­ளையே வளர்த்து வந்­த­னர். இந்த ரக பழம் விளைய 800 முதல் 1,200 மணி நேரம் குளிர்ச்­சி­யாக இருக்க வேண்­டும். வசந்த காலத்­தில் வெப்­பம் அதி­க­ரிப்­ப­தும், கோடை, குளிர் காலங்­க­ளில் வெப்­பம் அதி­க­ரித்து குளிர் காலம் குறை­வாக உள்­ளது. இத­னால் ஆப்­பிள் உற்­பத்தி குறை­கின்­றது.  

அத்­து­டன் பஞ்­சார் பகு­தி­யில் நிலப்­ப­ரப்­பும் கடி­ன­மாக உள்­ளது. நில­மும் துண்டு துண்­டாக உள்­ளது. தண்­ணீர் பற்­றாக்­குறை அதி­க­மாக உள்­ளது. குளிர் குறை­யும் போது ஆப்­பிள் மரங்­க­ளுக்கு அதிக அளவு தண்­ணீர் தேவைப்­ப­டு­கி­றது. தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யால் ஆப்­பிள் மரம் வளர்க்க முடி­யாது என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.  

எனவே தோட்ட பயிர்­கள் பற்­றிய ஆராய்ச்­சி­யின் முடி­வில், மாதுளை போன்ற பழ மரங்­களை வளர்க்­க­லாம் இவை­க­ளுக்கு 600 முதல் 800 மணி நேரம் குளிர்­நிலை இருந்­தாலே போது­மா­னது என பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. அத்­து­டன் அதிக ஆப்­பிள் மரங்­கள் உள்ள பகு­தி­க­ளில் சொட்டு நீர் பாசன முறை­யில் நீர்­பாய்ச்ச வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டது.

பாலாம்­பூ­ரில் உள்ள அடிப்­படை விஞ்­ஞான கல்­லூ­ரி­யைச் சேர்ந்­த­வர்­கள் செய்த ஆய்­வில், பஞ்­சார் பகு­தி­யில் உள்ள விவ­சா­யி­க­ளில் 63 சத­வி­கி­தம் பேர் ஆப்­பி­ளுக்கு பதி­லாக மாதுளை, பீச், கிவி, பேரிக்­காய், முட்­டை­கோஸ் போன்­ற­வை­களை பயி­ரி­டு­கின்­ற­னர் என்­பது தெரி­ய­வந்­தது.

ஆப்­பிள் மரம் நட்டு ஒன்­பது வரு­டத்­திற்கு பிறகே பழங்­கள் காய்க்க ஆரம்­பிக்­கும். மாதுளை மரங்­களை நட்டு நான்­காம் வரு­டத்­தி­லேயை பழங்­கள் காய்க்க ஆரம்­பிக்­கும். “ஆப்­பிள் வளர்ப்­பது லாப­க­ர­மாக இல்­லாத கார­ணத்­தால், நான் மாதுளை மரங்­களை வளர்க்க தொடங்­கி­னேன்” என்று விவ­சாயி பத்­ம­தேவ் தெரி­வித்­தார்.

இவ­ருக்கு சொந்­த­மாக உள்ள ஒன்­றரை ஏக்­கர் நிலத்­தில் மாதுளை பயி­ரிட்டு பத்து லட்­சம் ரூபாய் சம்­பா­தித்­துள்­ளார். இந்த மாதுளை மரங்­களை பரா­ம­ரிக்க வரு­டத்­திற்கு ரூ.90 ஆயி­ரம் செல­வா­கி­யுள்­ளது. செல­வு­போக வரு­டத்­திற்கு ரூ.9 லட்­சம் வரு­மா­னம் கிடைக்­கின்­றது. எனவே மாதுளை வளர்ப்­பதே லாப­க­ர­மா­னது என்­கின்­றார் பத்­ம­தேவ்.

பஞ்­சார் பகு­தி­யைச் சேர்ந்த யோதிஸ்ரா ரதோரி என்ற மற்­றொரு விவ­சாயி 200க்கும் அதி­க­மான மாதுளை மரங்­க­ளை­யும், பேரிக்­காய் மரங்­க­ளை­யும் வளர்க்­கின்­றார். இவர் கூறு­கை­யில், “நான் 14 வரு­டங்­க­ளாக மாதுளை, பேரிக்­காய் மரங்­களை வளர்த்து வரு­கின்­றேன். இந்த மரங்­க­ளில் பழங்­கள் காய்க்க தொடங்­கி­யது முதல் நல்ல வரு­மா­னம் கிடைக்­கின்­றது. இதில் இருந்து வரு­டத்­திற்கு ரூ. 8 லட்­சம் வரை வரு­மா­னம் கிடைக்­கின்­றது” என்­கின்­றார்.

பஞ்­சார் பகு­தி­யைச் சேர்ந்த முற்­போக்­கான விவ­சா­யி­யான மோதி­லால், இந்த பகு­தி­யில் ஆப்­பிள் மரங்­களை வளர்ப்­பது இய­லாது என்று கரு­திய உடன் மாதுளை, மஸ்­ரூம், மிள­காய் போன்­ற­வை­க­ளுக்கு மாறி­னார். இவர் சொட்டு நீர் பாசன முறை­யில் தண்­ணீர் பாய்ச்­சு­கின்­றார்.

ஆப்­பி­ளுக்கு பதி­லாக மாதுளை மரங்­களை வளர்ப்­பது லாப­க­ர­மா­ன­தாக இருந்­தா­லும், இதற்கு அதிக தடவை பூச்சி கொல்லி மருந்து அடிக்­க­வேண்­டி­ய­துள்­ளது. ஆப்­பி­ளுக்கு ஐந்து அல்­லது ஆறு முறை பூச்சி கொல்லி மருந்து அடித்­தால் போது­மா­னது. ஆனால் மாது­ளைக்கு பத்து முதல் 14 முறை பூச்சி கொல்லி மருந்து அடிக்­க­வேண்­டி­ய­துள்­ளது.

மக்­கள் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து அடித்த பழங்­களை விரும்­பு­வ­தில்லை. மாது­ளைக்கு அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து அடிக்­கின்­ற­னர் என்ற தக­வல் பர­விய பிறகு, மாதுளை பழங்­களை விற்­பனை செய்து மிக கஷ்­ட­மாக உள்­ள­தாக யோதிஸ்ரா ரதோரி கூறு­கின்­றார்.

இமா­ச­ல­பி­ர­தேச தோட்­டக்­க­லைத்­துறை அதி­கா­ரி­யான மோதி­லால் நிகி கூறும் போது, “மாதுளை பழங்­க­ளில் பூச்­சி­கள் முட்­டை­யிட்டு குஞ்சு உற்­பத்­தி­யா­கின்­றது. இத­னால் பழங்­கள் கெட்­டுப் போகின்­றன. இதை தடுக்­கவே பூச்சி கொல்லி மருந்து அடிக்­கின்­ற­னர். இத­னால் மாதுளை பழங்­களை வாங்க பலர் விரும்­பு­வ­தில்லை” என்று தெரி­வித்­தார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் விவ­சா­யி­கள் ஆப்­பி­ளுக்கு பதி­லாக மாதுளை, பேரிக்­காய், பிளம்ஸ் போன்ற மரங்­களை வளர்க்க தொடங்­கி­னார்­கள். இவற்­றில் ஆப்­பிளை விட வரு­வாய் இரு­ம­டங்­காக கிடைக்­கின்­றது. அதே நேரத்­தில் மீண்­டும் ஆப்­பிள் மரங்­களை வளர்க்க சிலர் விரும்­பு­கின்­ற­னர். குறைந்த அளவு குளி­ரி­லும் வள­ரும், மலை அடி­வா­ரங்­க­ளில் வள­ரக்­கூ­டிய புதிய ஆப்­பிள் ரகங்­களை உரு­வாக்க வேண்­டும் என்று விவ­சா­யி­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.  தோட்­டக்­க­லைத்­துறை அதி­கா­ரி­யான மோதி­லால் நிகி, “குறைந்த குளிர்­நிலை உள்ள பஞ்­சார் போன்ற மலை அடி­வா­ரங்­க­ளில்,அதிக ஆப்­பிள் பழங்­கள் வள­ரக்­கூ­டிய ஆப்­பிள் மரங்­களை தோட்­டக்­க­லைத்­துறை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கி­றது” என்று தெரி­வித்­தார்.

பொது­வாக ஒரு பிகா நிலத்­தில் (இரண்­டரை பிகா=1 ஏக்­கர்) 100 ஆப்­பிள் மரங்­களை நட்டு வளர்க்­கின்­ற­னர். புதிய ரக ஆப்­பிள் மரங்­களை ஒரு பிகா­வுக்கு 200 முதல் 250 மரங்­களை நட்டு வளர்க்­க­லாம். அதிக பூச்சி கொல்லி மருந்து தேவைப்­ப­டும் மாது­ளைக்கு பதி­லாக, புதிய ரக ஆப்­பிள் மரங்­களை நட­லாம். சில விவ­சா­யி­கள் ஏற்­க­னவே இந்த புதிய ரக ஆப்­பிள் மரங்­களை நட்டு வளர்க்க தொடங்­கி­யுள்­ள­னர். ஆனால் மிக சிறிய பரப்­ப­ள­வில் மட்­டுமே மரங்­களை வளர்க்­கின்­ற­னர். இந்த புதிய ரக ஆப்­பிள் மரங்­களை அதிக பரப்­ப­ள­வில் வளர்க்க வேண்­டும். இத­னு­டன் மாதுளை மரங்­க­ளை­யும் வளர்க்­க­லாம். ஆப்­பிள் பழங்­கள் ஆகஸ்ட் மாத வாக்­கில் விற்­ப­னைக்கு வரும். ஆனால் இந்த புதிய ரகம் ஜூன், ஜூலை மாதங்­க­ளில் பறித்து விற்­ப­னைக்கு அனுப்­ப­லாம். இத­னால் விற்­பனை வாய்ப்­பும் பிர­கா­ச­மாக இருக்­கும்” என்று மோதி­லால் நிகி தெரி­வித்­தார்.

நன்றி: வில்­லேஜ் ஸ்கொயர்

இணை­ய­த­ளத்­தில் அதர் பர்­வாஸ்.