சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 418 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2019

நடி­கர்­கள்  :  தனுஷ், நஸ்­ரியா நஸீம், சூரி, சச்சு, ஸ்ரீமன், சத்­யன், வம்சி கிருஷ்ணா, ஆடு­க­ளம் நரேன், பிர­மிட் நட­ரா­ஜன், மீரா கிருஷ்ணா மற்­றும் பலர். இசை : ஜிப்­ரான், ஒளிப்­ப­திவு :   வேல்­ராஜ், தயா­ரிப்பு : எஸ்.கதி­ரே­சன், திரைக்­கதை, இயக்­கம் : ஏ. சற்­கு­ணம்.

கும்­ப­கோ­ணத்­தில் விளக்­குக்­கடை வைத்­தி­ருக்­கும் சம்­பந்­த­மும் (பிர­மிட் நட­ரா­ஜன்) அவ­ரது மனைவி மீரா கிருஷ்­ணா­வும் தனது மகன்­க­ளுக்கு திரு­ம­ண­மா­காத வருத்­தத்­தில் வாழ்­கின்­ற­னர். மூத்த மகன் பரஞ்­சோ­தி­யும் (ஸ்ரீமன்), அடுத்­த­வன் பரந்­த­வ­னும் (சத்­யன்) வயது முதிர்ச்­சி­யால் திரு­ம­ணத்­திற்கு பெண்­களை தேடு­கின்­ற­னர். இளைய மக­னான சின்­ன­ வண்டு (தனுஷ்) மாமா மகன் சூரி­யின் ஊரில் தங்கி படிக்­கி­றான். அவ்­வூ­ருக்கு திரு­வி­ழா­விற்­காக பாட்டி சச்சு வீட்­டுக்கு வரும் பல் ம­ருத்­துவ மாணவி வன­ரோ­ஜாவை விரும்­பு­கி­றான். ஆனால் சின்­ன­ வண்­டு­வின் திட்­டங்­கள் வன­ரோ­ஜா­வி­டம் பலிக்­கா­மல் போகி­றது. திரு­வி­ழா­வில் வன­ரோ­ஜா­வின் மோதி­ரம் காணா­மல் போக, கண்­டு­பி­டிப்­ப­வர்­க­ளுக்கு ஒரு லட்­சம் பரிசை அறி­விக்­கி­றார் அவ­ரது அப்பா பூங்­கா­வ­னம் (ஆடு­க­ளம் நரேன்). தன் தாயின் நினை­வான அந்த மோதி­ரத்தை சின்­ன­ வண்டு கண்­டு­பி­டித்­தும் வறு­மை­யான ஒரு பெண்­ணிற்கு விட்­டுக் கொ­டுத்து உத­வி­யதை பார்க்­கும் வன­ரோஜா, சின்­ன­ வண்டை விரும்­பத் தொடங்­கு­கி­றாள். திரு­விழா முடிந்து ஊர் திரும்­பும் வன­ரோஜா தனக்கு தந்தை திரு­மண ஏற்­பாடு செய்­வதை அறி­கி­றாள். பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் சின்­ன­ வண்­டு­வி­டம் தனக்­கும் கிருஷ்­ணா­வுக்­கும் (வம்சி கிருஷ்ணா) நிச்­ச­யம் நடந்­ததை தெரி­விக்­கி­றாள். இரு­வ­ரும் கிருஷ்­ணா­வின் ஆட்­க­ளி­ட­மி­ருந்து தப்பி ஓடு­கி­றார்­கள். இவர்­க­ளுக்கு உதவ நினைக்­கும் சூரி இவர்­க­ளுக்கு திரு­ம­ண­மா­னதை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­தா­லும், உண்­மையை மறைத்து பாது­காப்­பிற்­காக வன­ரோ­ஜாவை சின்­ன ­வண்­டு­வின் வீட்­டில் தங்க வைக்­கி­றான். அனாதை என்று நினைத்து பரஞ்­சோ­தி­யும், பரந்­த­வ­னும் வன­ரோ­ஜாவை மணக்க விரும்­பு­கி­றார் கள். உண்­மையை கூறா­மல் சின்ன வண்டு அவர்­கள் முயற்­சியை தடுக்­கி­றான். சில நாட்­க­ளுக்­குப் பிறகு வன­ரோஜா கர்ப்­ப­மாகி இருப்­பதை அறி­யும் அவன் தாய் வீட்டை விட்டு துரத்­து­கி­றார்.

காத­லர்­களை தேடி­ய­லை­யும் கிருஷ்­ணா­ வும், அவ­னது ஆட்­க­ளும் வன­ரோ­ஜாவை கடத்­து­கின்­ற­னர். அவர்­க­ளி­டம் போராடி வன­ரோ­ஜாவை மீட்­டு­ வ­ரும் சின்­ன­ வண்டு தன் குடும்­பத்­தி­டம் வச­மாக சிக்­கு­கி­றான். உண்­மை­கள் வெளி­யாக அண்­ணன்­கள் அதிர்ச்­சி­ய­டைய சம்­பந்­தம் இந்த திரு­ம­ணத்தை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றார். வன­ரோ­ஜாவை தேடி வரும் பூங்­கா­வ­னம் வச­தி­யான வாழ்க்­கையை துறந்து வந்த தன் மக­ளது மகிழ்ச்­சியே தனக்கு முக்­கி­யம் என்று எடுத்­துக்­கூ­று­கி­றார். இறு­தி­யில் தங்­கள் குடும்ப வாரிசை சுமக்­கும் வன­ரோ­ஜாவை அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­கின்­ற­னர். சின்­ன ­வண்­டின் அண்­ணன்­க­ளும் தங்­க­ளது திருமணத்தை நடத்­திக் கொள்­கின்­ற­னர்.