கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 204

பதிவு செய்த நாள் : 11 நவம்பர் 2019

காவல் துறையை காப்பாற்றும் ‘கைதி’!

காதில் கேட்­கிற ‘பிகில்’­கள் எல்­லாம் ‘கைதி’க்­காக ஒலித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன! ‘கைதி’ வெற்­றித்­தே­ரில் வலம் வரு­கி­றான். ‘தீரன்’ படத்­தில் வெளி­மா­நி­லக் கொள்­ளை­யர்­களை விரட்­டிப்­பி­டித்த கார்த்தி, ஒரு கையில் விலங்­கு­டன் ‘கைதி’­யில் காவல் துறை­யின் ‘ஓன் மேன் ஆர்­மி’­யாக செயல்­பட்­டி­ருக்­கி­றார்.

இந்­தப் பக்­கம் பார்த்­தால் ஜான் ராம்போ மற்­றும் ெடர்­மி­னேட்­டர், அந்­தப் பக்­கம் பார்த்­தால் டை ஹார்ட்  ஜான் மேக்­லேன் என்று சில சாயல்­கள்  தெரிந்­தா­லும், திரு­நீறு குங்­கு­மத்­து­ட­னும் அரு­ணா­சல சிவ ரிங்டோ னுட­னும் ஜேசு­தாஸ் பாடல் ரச­னை­யு­ட­னும் ‘கைதி’­யில் தென்­ப­டும் கார்த்தி, ஒரு சுதேசி படைப்­பா­கவே மிளிர்­கி­றார்!

இந்த வெளிச்­சத்­தின் மறு­பக்­கத்­தில் அதி­கம் தெரி­கி­ற­வர்­கள், படத்­தின் டைரக்­டர் லோகேஷ் கன­க­ரா­ஜும் அவ­ரு­டைய ஒளிப்­ப­தி­வா­ளர் சத்­யன் சூர்­ய­னும்.

ஒரு முறை, உல­கப்­பு­கழ் பெற்ற திரைப்­பட இயக்­கு­நர் அகிரா குரோ­சாவா, திரைப்­ப­டங்­கள் உரு­வாக்க நினைக்­கும் புது இயக்­கு­நர்­க­ளுக்கு ஒரு அறி­வுரை கூறி­னார்.

திரைப்­ப­டங்­கள் எடுத்­துப் பழ­க­வேண்­டும் என்­றால் கணி­ச­மாக செல­வா­கும்...இந்த நிலை­யில் புதி­ய­வர்­கள் எப்­படி உரு­வாக முடி­யும் என்ற கேள்­விக்கு அவர் தந்த பதி­லாக அவ­ரு­டைய அட்­வைஸ் அமைந்­தது.

‘‘காகி­தங்­களை எடுங்­கள். நீங்­கள் திரை­யில் கூற நினைக்­கும் கதையை எழு­துங்­கள். இந்த வகை­யில் நீங்­கள் எழு­தும்­போது உங்­க­ளுக்கு சந்­தே­கங்­கள் வர­லாம்,   நீங்­கள் எழு­தும் கதை உங்­க­ளுக்கே பிடிக்­கா­மல் போக­லாம்... ஆனால் எக்­கா­ர­ணம் கொண்­டும் எழு­து­வதை நிறுத்­தா­தீர்­கள்...எப்­ப­டி­யே­னும் கதையை எழுதி முடி­யுங்­கள்...இந்த முறை­யில் நீங்­கள் எழு­திய திரைக்­க­தையை நீங்­கள் மீண்­டும் மீண்­டும் செப்­ப­னிட,  திரைப்­ப­டம் உரு­வாக்­கும் உங்­க­ளு­டைய ஆற்­றல் வள­ரும்,’’ என்­றார் குரோ­சாவா.

இது­போன்ற ஒரு உத்­தி­யைத்­தான் தன்­னு­டைய முதல் பட­மான ‘மாந­க­ர’த்­தில் கவ­னத்தை ஈர்த்த லோகேஷ் கன­க­ராஜ் கடை­பி­டித்­தி­ருக்­க­வேண்­டும். ஏனென்­றால் முதல் பட­மான ‘மாந­க­ர’மே பல பரி­மா­ணங்­கள் கொண்ட கதை­யாக இருந்­தது.

‘மாந­க­ரம்’ படத்தை வெறும் மசாலா பட­மாக எடுக்­கா­மல், சென்­னைக்­குப் பல­வித அபி­லா­ஷை­க­ளு­டன் வரும்  நபர்­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளைக் குறுக்­குப் பாய்ச்­ச­லாக வரும் கதை இழை­க­ளைக்­கொண்டு நிறு­வி­யி­ருந்­தார் லோகேஷ்.

இப்­போது, இரண்­டா­வது பட­மான ‘கைதி’­யில் சில அப்­பட்­ட­மான புது­மை­க­ளு­டன் ஒரு ஆக் ஷன் த்ரில்­லரை அசத்­த­லாக முன்­வைத்­தி­ருக்­கி­றார்.

ஒரே இர­வில் நடக்­கும் சம்­ப­வங்­களை அதி­வே­க­மாக அடுக்­கு­கி­றது, ‘கைதி’. நமக்­குப் பழக்­கப்­பட்ட விதத்­தில் அமைந்த ஒரு பாடல் கூட அதில் இல்லை. கதா­நா­யகி என்று கூறக்­கூ­டிய ஒரு பாத்­தி­ர­மும் படத்­தில் இல்லை! இப்­ப­டி­யெல்­லாம் இருந்­தா­லும்,  தாய்­மார்­கள், சிறு­வர்­கள், இளை­ஞர்­கள், பெரி­ய­வர்­கள் என்று எல்­லோ­ரும் பார்க்­கக்­கூ­டிய பட­மாக இருக்­கி­றது!

இதற்­கெல்­லாம் கார­ணம், ஆக் ஷன்  படத்தை உணர்­வு­க­ளோடு கட்­டிப்­போ­டும் வகை­யில், லோகேஷ் கதையை அமைத்­தி­ருக்­கிற அரு­மை­யான முறை.

அனாதை இல்­லத்­தில் உற­வின் கரம் கிடைக்­காதா என்ற ஏக்­கத்­து­டன் காத்­தி­ருக்­கும் சிறுமி....

பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அவ­ளைக் காண வந்­து­கொண்­டி­ருக்­கும் அவ­ளு­டைய ஆயுள் கைதி அப்பா....

இவர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இடையே நீண்டு கிடக்­கும் பாதை...அதில் கப்­பி­யி­ருக்­கும் இருள்...

அந்த அர்த்­த­ஜாம இரு­ளிலே, கய­வர்­க­ளுக்­கும் காவ­லர்­க­ளுக்­கும் இடையே ஒரு அபா­ய­க­ர­மான ‘ஓடிப்­பு­டிச்சு’ விளை­யாட்டு.

ஊரையே போதை மருந்­தில் மூழ்­க­டித்து அதில் பல நூறு கோடி­க­ளைப் பார்க்க நினைக்­கும் கய­வர்­கள் கூட்­டம் துரத்­திக்­கொண்டு வரு­கி­றது..அவர்­க­ளின் சூழ்ச்­சிக்கு ஆளாகி நினைவு தப்­பிய காவல் அதி­கா­ரி­கள் ஏற்­றப்­பட்ட லாரி­யில், ஒரு கையு­டைந்த காவல் அதி­கா­ரி­யும் (நரேன்), லாரியை ஓட்­டும் கைதி­யும் (கார்த்தி) அவர்­க­ளுக்கு வழி காட்­டும் லாரி உரி­மை­யா­ள­னான அரை­வேக்­காட்டு இளை­ஞ­னும் (தீனா).

இத்­த­னைக்­கும் நடு­விலே, போலீஸ் கமி­ஷ­னர் அலு­வ­ல­கத்தை நிரா­த­ர­வாக விட்டு, தாக்­கு­த­லுக்­குப் பயந்து ஓடி­வி­டும் கீழ்­மட்ட காவ­லர்­கள். அங்கே, குடித்து விட்டு கார் ஓட்­டிய கேசில் மாட்­டிக்­கொண்ட வாலி­பர்­க­ளு­டன் இணைந்து, டூட்­டி­யில் இன்­னும் ஜாயின் ஆகாத ஒரு காவ­லர் (ஜார்ஜ் மர்­யான்) காட்­டும்  கடமை உணர்வு, வீர­சா­க­சம்!

உணர்­வற்­றுக் கிடக்­கும் போலீஸ்­கா­ரர்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்­வு­டன் கய­வர்­க­ளுக்கு உளவு சொல்­லும் கறுப்பு ஆடு காவ­லர் ஒரு­வர். இதற்கு எதிர் மறை­யாக, கய­வர் கூட்­டத்­தில் போலீ­ஸýக்கு உள­வா­ளி­யாக செயல்­பட்டு, செய்­ய­வேண்­டி­ய­தெல்­லாம் எல்­லாம் வெற்­றி­க­ர­மாக செய்து முடித்­து­விட்டு தப்­பிக்­கும் தறு­வா­யில் சாயம் வெளுத்­த­தால் உயிரை இழக்­கும் ஒரு கடமை வீரன். இப்­படி பற்­பல கதா­பாத்­தி­ரங்­கள், ஒன்­றோடு ஒன்று பிணைந்­தி­ருக்­கும் சம்­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றை­யெல்­லாம் மணி­க­ளைப்­போல் இணைத்து மாலை­யாக்கி தந்­தி­ருக்­கி­றார் லோகேஷ்! அத்­தோடு, கோடம்­பாக்­கத்து ஸ்டன்ட் மாஸ்­டர்­கள், நடன மாஸ்­டர்­கள், காமெடி டிராக் எழுத்­தா­ளர்­கள் என்று  இன்­ன­பிற வழக்­க­மா­ன­வர்­க­ளி­டம் வேலையை செவ்­வனே சமர்ப்­பித்­து­விட்டு சும்மா உட்­கா­ரா­மல், தன்­னு­டைய  திரைக்­க­தை­யின் பல பரி­மாண அடுக்­கு­க­ளைத் தானே திறம்­பட  திரைக்­காட்­சி­க­ளாக தொடுத்­தி­ருக்­கி­றார்.

சினிமா என்­பது விஷு­வல் மீடி­யம் என்­ப­தால் லோகே­ஷுக்­குப் படத்­தில் மிக முக்­கி­ய­மான துணை­யாக செயல்­பட்­டி­ருக்­கி­றார், அவ­ரு­டைய  கேமரா டைரக்­டர், ‘தீரன்’ புகழ் சத்­யன் சூர்­யன்.

பி.சி.ஸ்ரீரா­மி­டம் எட்டு வருட குரு­கு­ல­வா­சத்­திற்­குப் பிறகு, ‘யுத்­தம் செய்’, ‘மாயா’, ‘தீரன்’ போன்ற வித்­தி­யா­ச­மான படங்­க­ளுக்கு வெவ்­வேறு வித­மான பாணி­க­ளில் கேமரா இயக்­கி­ய­வர் இவர். ஓவி­யக்­கல்­லூரி பட்­ட­தாரி என்­ப­தால், ஓவி­யங்­க­ளில் உள்ள கலை நேர்த்தி இவ­ரு­டைய ஷாட்­டு­க­ளில் காண முடி­கி­றது.

பத்­தி­ரி­கை­க­ளில் நிழற்­பட நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றும் போது, சத்­யன் சூர்­ய­னுக்கு சட்­டு­புட்டு என்று படம்­பி­டிக்­கும் திற­மையை வளர்த்­துக்­கொள்ள முடிந்­தி­ருக்­கி­றது.  நடி­கர் கார்த்தி கொடுத்த முப்­பது நாட்­கள்  கால்­ஷீட்­டில் அட்­ட­கா­ச­மான ஆக் ஷன்  காட்­சி­களை எடுத்து அசத்த முடிந்­தது இந்த எக்ஸ்­பி­ரஸ் வேகத்­தால்­தான். மற்­ற­படி, உண்­ணும் சோறும் பரு­கும் நீரும் தின்­னும் வெத்­த­லை­யும்  எல்­லா­மு­மா­கக் கட­மையை நினைத்து இரவு பக­லாக உழைத்­த­தன் விளை­வு­தான் ‘கைதி’­யில் கிடைத்­தி­ருக்­கும் அட்­ட­கா­ச­மான காட்­சி­கள். படத்­தின் பெரும் பகுதி, இர­வில், அது­வும் வெளிப்­பு­றத்­தில் நிகழ்­கி­றது.  ஒரு லாரி இரவு நேரத்­தில் நெடுஞ்­சா­லை­யில் விரைந்­து­கொண்­டி­ ருப்­பதை நாம் ஏரி­யல் ஷாட்­டுக்­க­ளில் காண்­கி­றோம். இது­போன்ற காட்­சி­க­ளில் ராட்­சத விளக்­கு­க­ளால் இர­வின் போர்­வையை தாறு­மா­றாக  ஊடு­ரு­வா­மல், இரு­ளின் ஸ்பரி­சத்தை நாம் தெளி­வாக உண­ரும்­படி காட்­சிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் சத்­யன் சூரி­யன்.

பெட்­ரோல் பங்க்­க­ருகே, மூங்­கில் காட்­டிற்­குள்ளே, மலைப்­பாங்­கான பகு­தி­யிலே, சாலையை இடை மறிக்­கும் அத்­வா­னத்­திலே, போலீஸ் கமி­ஷ­னர் அலு­வ­ல­கத்­தின் வெளியே, உள்ளே (இது ஆர்ட் டைரக்­டர் சதீஷ் குமார் அழ­காக அமைத்த செட்) என்று அடி­தடி காட்­சி­கள் சர­மா­ரி­யாக குவி­கின்­றன.

மூங்­கில் கொம்­பு­க­ளால் அமைக்­கப்­பட்ட தடை­க­ளைத் தட­த­ட­த­ட­வென்று அடிப்­பட்­டுத் தாண்­டு­கி­றது லாரி. சர­மா­ரி­யாக வரும் பாட்­டில் கணை

­க­ளின் அதிர்ச்­சித்   தாக்­கு­த­லில், கிழித்­துக் கொண்­டு­போ­கும் கண்­ணாடி சில்­லு­க­ளில் அலை­மோ­து­கி­றது.  நெருப்­புப் பற்ற வைக்­கப்­பட்டு உருண்டு வரும் கட்டை வண்­டியை எதிர்­கொள்­கி­றது. மலை­யின் விளிம்­பிற்­குச் சென்று மரண உருண்­டோட்­டத்­தி­லி­ருந்து மயி­ரி­ழை­யில் தப்­பு­கி­றது. இவை போன்ற திகில் காட்­சி­க­ளில் படம் பார்ப்­ப­வர்­களை இருக்­கை­யின் விளிம்­பிற்­குக் கொண்­டு­வ­ரக்­கூ­டி­ய­வை­யாக இருக்­கின்­றன.

அடி­த­டி­யில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளின் ஒவ்­வொரு அசை­வை­யும் இயக்­கு­வது ஸ்டண்ட் மாஸ்­டர்­க­ளின் வேலை (அன்­ப­ரிவ் இரட்­டை­யர்). இந்த வகை­யில் நடக்­கும் மோதல் காட்­சி­க­ளைப் பல கேம­ராக்­கள் கொண்டு  விம­ரி­சை­யா­கப் பட­மாக்­கி­யி­ருக்­கி­றார் கேமரா டைரக்­டர்.

வேகப்­பந்து வீச்­சா­ளர்  பந்தை வீசப்­போ­கிற காட்சி என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். அவர் பந்தை வீசும் காட்­சியை அவ­ரு­டைய கோணத்­தில், அவரை எதிர்­கொள்­ளும் பேட்ஸ்­மே­னின் பார்­வை­யில், பீல்­டர்­க­ளின் கவ­னிப்­பில், அரங்­கத்­தி­லி­ருந்து மக்­க­ளின் பார்­வை­யில் என்று சில நொடி­க­ளுக்­குள்ளே மாறி மாறி நாம் கோணங்­க­ளைக் கண்­டால் எவ்­வ­ளவு அசத்­த­லாக இருக்­கும்? அந்த வகை­யில் அமைந்­தி­ருக்­கின்­றன அடி­தடி காட்­சி­கள். நேர்த்­தி­யான படத்­தொ­குப்பு, செவிப்­ப­றை­க­ளுக்கு சவால்­வி­டும் பின்­னணி இசை, இது­போன்ற காட்­சி­க­ளுக்கு இன்­னும் செறி­வூட்­டு­வது நித­ரி­ச­னம். இது இணைய யுகம். அதன் கூகிள், பிங், யாஹூ போன்ற தேடு­பொ­றி­கள் (சர்ச் இஞ்­சின்), இந்­தத் தக­வல் யுகத்­தில் கிளைத்­து­வ­ரும் செய்­தி­களை சர­மா­ரி­யாக தேடு­ப­வ­ரின் கவ­னத்­திற்கு கொண்டு வரக்­கூ­டி­யவை.

கணி­னி­யில் ஒரு கட்­டுரை அல்­லது கதையை  எழு­தும் போது, அதில் ஹைபர்­லிங் (மீத்­தொ­டுப்பு) என்ற பெய­ரில், சில இடங்­க­ளில் இன்­னும் கூடு­தல் தக­வல்­க­ளைப் பின்­ன­ணி­யில் அடுக்­க­லாம். இந்த வகை­யில் தன்­னு­டைய தொடுப்­பு­களை செறி­வாக்­கிக்­கொண்டு கதை­யா­டலை செய்­யக்­கூ­டி­ய­வர் கதா­சி­ரி­யர், இயக்­கு­நர் லோகேஷ்.

இந்த நிலை­யில், ‘கைதி’ என்ற மாஸ் படத்­தில் நேர்த்­தி­யான வேற்று அம்­சங்­க­ளை­யும் துணைப் பாத்­தி­ரங்­க­ளை­யும் சிறப்­பாக அமைத்து வெற்றி கண்­டி­ருக்­கி­றார். ஒரு பெரிய மரத்­தின் நிழ­லிலே வேறெ­து­வும் வள­ராது என்­பார்­கள். அந்­தக் கூற்­றைப் பொய்­யாக்­கி­யி­ருக்­கி­றார். சூரி­யன் தெரி­கிற வானத்­தில், வேறு சிறிய நட்­சத்­தி­ரங்­க­ளை­யும் காட்­டும் விந்­தையை செய்து முடித்­தி­ருக்­கி­றார்.

‘கைதி’யை வெளியே விட்டு தன்­னு­டைய பிகிலை ஊதி­ய­வர்,   தள­பதி 64க்கும்   பிகிலை ஊதப் போயி­ருக்­கி­றார். இந்த மகா பட்­ஜெட் தயா­ரிப்­பில் அவ­ருக்கு சத்­யன் சூரி­ய­னும் ‘கைதி’­யின் படத்­தொ­குப்­பைக் கவ­னித்த பிலோ­மின் ராஜும் இருக்­கி­றார்­கள்.  முதல் இரண்டு எட்­டில் சிக­ரத்தை எட்­டிய ஒரு இளம் இயக்­கு­நர் மீண்­டும் எவ­ரெஸ்­டில் வெற்­றிக் கொடி­யைப் பறக்­க­வி­டு­வாரா என்­பது கேள்வி. அவ­ரு­டைய திற­மை­யை­யும் அவ­ரு­டைய கூட்­டா­ளி­க­ளின் திற­மை­யை­யும் பார்க்­கும் போது வெற்றி பெறு­வார் என்­று­தான் தோன்­று­கி­றது.

(தொட­ரும்)