ராம ஜென்மபூமி தீர்ப்பு :காங்கிரஸ் நிர்வாகக்குழு வரவேற்பதாக தீர்மானம்

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019 14:54

புதுடெல்லி

ராம ஜென்மபூமி தொடர்பான உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக புதுடெல்லியில் இன்று நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

செயற்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரான சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

 உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தனது தனது தீர்மானத்தில் கூறியுள்ளது .

மதச்சார்பற்ற மதிப்பீடுகள், சகோதரத்துவ உணர்வு ஆகியவை நமது அரசியல் சட்டத்தின் பொதிந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் அமைதி மற்றும் இணக்கமான சூழ்நிலையை பராமரிக்க எல்லா கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது . நம்முடைய பாரம்பரியத்தில் பரஸ்பரம் மதிப்பு வழங்குவதும் ஒற்றுமையை பேணிப் பாதுகாப்பதும் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. .இத்தகைய பொறுப்புணர்வுடன் எல்லாக் கட்சிகளும் தொடர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அமைதி இணக்கமான சகோதரத்துவ சூழ்நிலை நிலவ உதவ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். .அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு ,ஆமாம் காங்கிரஸ் முழுமனதோடு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை வரவேற்கிறது என்று சுர்ஜேவாலா கூறினார் .

ராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சிலருக்கு பாராட்டு சிலருக்கு அவமதிப்பு என்ற நிலையை எந்த அரசியல் கட்சியும் அமைப்பும் குழுக்களும் வகுப்பினரும் மேற்கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் பேச்சாளர் சுர்ஜே லாலா கேட்டுக்கொண்டார்.