சோனியா காந்தி குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாவல் குழுவிற்கு பதிலாக ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 18:07

புதுடெல்லி

ராகுல் காந்தி குடும்ப உறுப்பினர்களுக்கு இதுவரை மத்திய அரசின் சார்பில் சிறப்பு பாதுகாவல் குழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதற்கு பதிலாக இன்று முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி-களுக்கான பாதுகாவல் குறித்து ஆய்வு செய்து வரும் உயர்நிலை பாதுகாப்பு பரிசீலனைக் குழுவினர் இந்த மாற்றம் குறித்து பரிந்துரை செய்தனர் என கூறப்படுகிறது. இந்த உயர்நிலை பாதுகாவல் குழு பரிந்துரைத்த மாற்றத்தை அமல் செய்வதற்கான உத்தரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

காந்தி குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாவல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.