கர்தார்பூர் யாத்திரைப் பாதையின் துவக்க நாளன்றும் சீக்கிய யாத்ரிகர்களிடம் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திடீர் முடிவு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 17:58

புதுடில்லி,

கர்தார்பூர் யாத்திரை பாதையின் திறப்பு விழாவான நவம்பர் 9ம் தேதி (நாளை) பாகிஸ்தான், கர்தார்பூருக்கு வரும் இந்திய சீக்கியர்களிடம்  20 டாலர் (ரூ.1,425) கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

நவம்பர் 9ம் தேதியும் பாபா குருநானக் பிறந்த நாளான 12ந்தேதியும் கட்டணம் கிடையாது என பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இம்ரான் கானின் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று உறுதி செய்தது. ஆனால் தன் முடிவை இன்று பாகிஸ்தான அரசு அதிரடியாக திரும்ப பெற்றுள்ளது.

கர்தார்பூர் யாத்திரைப் பாதை வழியாக கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கியர்களிடம் 20 டாலர் கட்டணமாக நாளை வசூலிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

நேற்று கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்த நிலையில் இன்று தன் முடிவை அதிரடியாக பாகிஸ்தான் மாற்றியுள்ளது.

இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.