கர்தார்பூர் சீக்கியர் கோவிலில் இந்தியா வீசியதாக குண்டு ஒன்றை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 17:28

கர்தார்பூர்

பாகிஸ்தான் கர்தார்பூர் சாஹிப் சீக்கிய கோவிலில் பிந்தரன்வாலே படத்தை காட்சிக்கு வைத்த பாகிஸ்தான் அரசு, அத்துடன் இப்பொழுது 1971ஆம் ஆண்டு கர்தார்பூர் சாஹிப் சீக்கிய கோவிலின் மீது இந்திய போர் விமானம் வீசியதாக குண்டு ஒன்றை காட்சிக்கு வைத்துள்ளது.

அதன் அருகிலேயே போஸ்டர் ஒன்றும் உருது மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் 1971 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் கர்தார்பூர் சாஹிப் சீக்கிய கோயில் மீது குண்டு வீசின .அந்த குண்டு அதிர்ஷ்டவசமாக கோவிலில் விழாமல் அருகில் இருந்த கிணற்றில் விழுந்துவிட்டது . அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து தான் சிக்கிய தலைவர் குருநானக் தன்னுடைய வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சியதாக கூறப்படுகிறது .

அந்த புனித கிணற்றில் விழுந்த குண்டு எடுக்கப்பட்டு இப்பொழுது காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

 கண்ணாடிக் கூண்டு ஒன்றுக்குள் சிறிய குண்டு ஒன்று கர்தார்பூர் கோவில்

செல்லும் வழியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .

கர்தார்பூர் கோவிலில் ஏற்பட்ட சிறிய பழுதுகளை பாகிஸ்தான் ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு சீர் செய்ய நியமிக்கப்பட்டது,

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அந்த இன்ஜினியரிங் பிரிவு குண்டு வைக்கும் வேலையை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கர்தார்பூர் சாகிப் கோவிலிலிருந்து இந்தியாவில் உள்ள தேரா பாபா நானக் தர்பார்  கோவிலுக்கு கர்தார்பூர் தாழ்வாரம் அமைக்கும் பணியை செய்ததன் மூலம் சுற்றுலா பயணிகள் மூலமாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையும் அபிப்பிராயத்தையும் சீக்கியர்கள் மத்தியில் விதைக்கவும் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன என்று கூறலாம்.

காலிஸ்தான் ஆதரவு சக்திகளை ஊக்குவிப்பதையும் பாகிஸ்தான் தன்னுடைய நோக்கமாக கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லியில் இருந்து பாகிஸ்தான் கர்தார்பூர் சாகிப் கோயிலுக்கு யாத்திரை செல்ல விரும்பும் டில்லியைச் சேர்ந்த முதியோர்களுக்கு அனைத்துச் செலவையும் டெல்லி அரசு ஏற்றுக்கொள்ளும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அறிவித்தார்.

இன்று நடந்த டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.