தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 , பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019 19:55

சென்னை,

தமிழகத்தில் பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் வரும் டிசம்பர் 11 ம்தேதி முதல் தொடங்கும் என்றும் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 13 ம்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் மாதம் 13 ம்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முதல் நாளில் மொழிப்பாடத்துடன் தேர்வு தொடங்கும் என்றும்
16 ம்தேதி  ஆங்கிலம் , 17 ம்தேதி சிறப்பு மொழிப்பாடத்திற்கான தேர்வும்
 18ம்தேதி கணிதம்,
 20 ம்தேதி அறிவியல் ,
 23 ம்தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் வரும் டிசம்பர் 11 ம்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது,

காலையில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் ஆரம்பமாகும்,

பிளஸ் 1 தேர்வுகள் பிற்பகலில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

பிளஸ் 2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும் காலை 10 மணி முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாள்களை படிப்பதற்கு அவகாசம் வழங்கப்படும், அதைத்தொடர்ந்து காலை 10-15 மணி முதல் பகல் 1.15 மணி வரை விடைத்தாள்களை எழுதுவதற்கு அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, 

பிளஸ் 1 தேர்வு எழுதுவதற்கு பகல் 2.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை அவகாசம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, முன்னதாக பிற்பகல் 2 மணி முதல் 2-15 மணி வரை கேள்வித்தாள்களை படிப்பதற்காகவும் அவகாசம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வு கட்டணம்

 பிளஸ் 2 பொது தேர்வுக்கான கட்டணங்களை, நவம்பர் 29ம் தேதிக்குள் செலுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், செய்முறை பாடங்கள் இருந்தால், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழுக்கு, 20; சேவை கட்டணம், 5 என, 225 ரூபாய் செலுத்த வேண்டும். 

செய்முறை இல்லாத பாடங்களுக்கு, 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்கள், இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம். 

மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் பெறப்படும் கட்டணத்தை, 29ம் தேதிக்குள், 'ஆன்லைன்' வழியே, தேர்வு துறைக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.