சரியான முடிவு!

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

ஹரி­யானா  சட்­ட­சபை தேர்­தல் சென்ற மாதம் (அக்­டோ­பர்) 21ம் தேதி நடை­பெற்­றது. முடி­வு­கள் அக்­டோ­பர் 24ம் தேதி அறி­விக்­கப்­பட்­டது. சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் எண்­ணிக்கை 90. ஆளும் கட்­சி­யாக இருந்த பார­திய ஜனதா 40 இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. எதிர்­கட்­சி­யாக இருந்த காங்­கி­ரஸ் 31 இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. ஜன்­நா­யக் ஜனதா கட்சி பத்து இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்­திய தேசிய லோக்­த­ளம் ஒரு இடத்­தி­லும், மற்ற கட்­சி­கள், சுயேட்­சை­கள் எட்டு இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர்.  

பார­திய ஜனதா, ஜன்­நா­யக் ஜனதா கட்­சி­யு­டன் கூட்­டணி அமைத்து ஆட்சி அமைத்­துள்­ளது. முதல்­வ­ராக பா.ஜ.,வைச் சேர்ந்த மனோ­கர் லால் கட்­டார் பத­வி­யேற்­றுள்­ளார். துணை முதல்­வ­ராக ஜன்­நா­யக் ஜனதா கட்சி சேர்ந்த துஷ்­யந்த் சவு­தாலா பத­வி­யேற்­றுள்­ளார். 31 வயது இளை­ஞ­ரான துஷ்­யந்த் சவு­தாலா, முன்­னாள் துணை பிர­த­மர் தேவி­லா­லின் கொள்­ளுப் பேரன். ஹரி­யானா முன்­னாள் முதல்­வர் ஓம் பிர­காஷ் சவு­தா­லா­வின் பேரன். அஜய் சவு­தா­லா­வின் மகன். அதா­வது அர­சி­யல் குடும்­பத்­தில் இருந்து வந்த வாரிசு. ஹரி­யா­னா­வில் ஆசி­ரி­யர்­களை பணி­யில் அமர்த்­தி­ய­தில் நடை­பெற்ற ஊழல் வழக்­கில் தாத்­தா­வும், தந்­தை­யும் தண்­டனை பெற்று திகார் சிறை­யில் உள்­ள­னர். தேவி­லால் நிறு­விய இந்­திய தேசிய லோக்­த­ளத்­தில் இருந்து பத்து மாதத்­திற்கு முன் பிரிந்து ஜன்­நா­யக் ஜனதா கட்­சியை ஆரம்­பித்­த­வர் துஷ்­யந்த் சவு­தாலா.

ஹரி­யா­னா­வின் மக்­கள் தொகை­யில் சுமார் 26 சத­வி­கி­தம் உள்ள ஜாட் சமு­தா­யத்தை மைய­மாக வைத்து இயங்­கிய கட்­சி­தான் இந்­திய தேசிய லோக்­த­ளம். இந்த சட்­ட­சபை தேர்­த­லில் சுமார் 15 சத­வி­கித ஜாட் சமு­கத்­தி­ன­ரின் வாக்­கு­களை பெற்று, பத்து இடங்­க­ளில் வெற்றி பெற்று ஜாட் சமூ­கத்­தின் உண்­மை­யான பிர­தி­நிதி என்ற அந்­தஸ்தை ஜன்­நா­யக் ஜனதா கட்சி பெற்­றுள்­ளது. துணை முதல்­வ­ராக பத­வி­யேற்­றுள்ள துஷ்­யந்த் சவு­தாலா, 2014ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் ஹரி­யானா முன்­னாள் முதல்­வர் பஜன்­லா­லின் மகன் குல்­தீப் பசா­னியை ஹிச்­சார் தொகு­தி­யில் எதிர்த்து போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர். இவர் மிக இளம் வய­தில், 26 வய­தில் லோக்­சபா உறுப்­பி­ன­ராக ஆன­வர். கலி­போர்­னியா ஸ்டேட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நிர்­வாக இயல் பட்­டம் பெற்­ற­வர்.  

இந்­திய தேசிய லோக்­த­ளம் 2000ம் ஆண்டு முதல் 2004வரை ஹரி­யா­னா­வில் ஆளும் கட்­சி­யாக இருந்­தது. அதற்கு பிறகு பிர­தான எதிர்­கட்­சி­யாக மாறி­யது. அஜய் சவு­தா­லு­வுக்­கும், அவ­ரது தம்பி அபய் சவு­தா­லா­வுக்­கும் இடையே ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக கட்­சி­யில் பிளவு ஏற்­பட்­டது. அஜய் சலு­தா­லாவை, தம்பி அபய் சவு­தாலா கட்­சியை விட்டு நீக்­கி­னார். இதன் பிறகு 2018, டிசம்­ப­ரில் துஷ்­யந்த் சவு­தாலா ஜன்­நா­யக் ஜனதா கட்சி என்ற தனி கட்­சியை தொடங்­கி­னார்.

தனி கட்சி தொடங்­கும் முன் அஜய் சவு­தாலா மகன் துஷ்­யந்த் சவு­தா­லா­வுக்கு, உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் அகி­லேஷ் யாதவ் போல், கட்­சி­யின் சின்­னம், கொடிக்கு உரிமை கொண்­டாடி சண்டை போட வேண்­டாம். புதிய கட்­சியை தொடங்கி, புதிய சின்­னத்­தில் போட்­டி­யிட்டு மக்­கள் ஆத­ரவு பெறும்­படி அறி­வு­றுத்­தி­னார்.  

இந்த முறை ஹரி­யானா சட்­ட­சபை தேர்­த­லில் ஆளும் கட்­சி­யாக இருந்த பார­திய ஜனதா கட்சி உட்­பட எந்த கட்­சி­யும் தனித்து ஆட்சி அமைக்­கும் அள­வுக்கு பெரும்­பான்­மையை பெற­வில்லை. அதிக இடங்­களை பெற்ற பார­திய ஜனதா, சுயேச்­சை­கள், மற்ற சிறிய கட்­சி­களை தவிர்த்து, தேர்­தல் களத்­தில் எதி­ரும் புதி­ரு­மாக போட்­டி­யிட்ட ஜன்­நா­யக் ஜனதா கட்­சி­யு­டன் சேர்ந்து ஆட்சி அமைக்­கும் முயற்­சி­களை மேற்­கொண்­டது. சென்ற சட்­ட­சபை தேர்­த­லில் 15 இடங்­க­ளில் வெற்றி பெற்று இருந்த காங்­கி­ரஸ், இந்த தேர்­த­லில் 31 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. காங்­கி­ரஸ் கட்சி துஷ்­யந்த் சவு­தா­லா­வின் ஆத­ரவு, மற்ற சுயேச்­சை­க­ளின் ஆத­ர­வு­டன் ஆட்சி அமைக்­கும் முயற்­சி­யி­லும் இறங்­கும் என எதிர்­பார்த்­த­னர். ஆனால் பார­திய ஜனதா தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டும் நாளன்றே, பஞ்­சாப் முன்­னாள் முதல்­வர் பிர­காஷ் சிங் பாதல் மூலம் துஷ்­யந்த் சவு­தா­லாவை தொடர்பு கொண்­டது. அத்­து­டன் மத்­திய நிதி இணை அமைச்­சர் அனு­ராக் தாகூர், அமித்ஷா சார்­பில் துஷ்­யந்த் சவு­தா­லாவை தொடர்பு கொண்டு கூட்­டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த தொடங்­கி­னார்.

திகார் சிறை­யில் தாத்தா ஓம் பிர­காஷ் சவு­தா­லா­வு­டன் அடைக்­கப்­பட்­டுள்ள தகப்­ப­னார் அஜய் சவு­தா­லாவை நேரில் துஷ்­யந்த் சவு­தாலா சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த பூபேந்­தர் சிங் ஹுடா­வு­டன் கூட்­டணி சேர்­வது, ஜாட் சமூ­தா­யத்­தின் ஏக பிர­தி­நிதி என்ற அந்­தஸ்தை இழக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­ப­டும். பூபேந்­தர் சிங் ஹுடா ஜாட் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர். ஜாட் மக்­கள் மத்­தி­யல் பா.ஜ. முதல்­வர் மனோ­கர் லால் கட்­டார் மீதுள்ள வெறுப்பை பயன்­ப­டுத்தி காங்­கி­ரஸ் அதிக இடங்­க­ளில் (15ல் இருந்து 31. இதில் ஒன்­பது பேர் ஜாட் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள்) வெற்றி பெற கார­ண­மாக இருந்­த­வர் என்­பதை விளக்­கி­னார்.

இதற்கு பிறகு தனது எம்.எல்.ஏ.,க்களி­டம் பார­திய ஜன­தா­வு­டன் சேர்ந்து ஆட்­சி­யில் பங்­கேற்­பது பற்றி துஷ்­யந்த் சவு­தாலா கூறி­னார். இதன் பிறகு அனு­ராக் தாகூரை தொடர்பு கொண்டு, துணை முதல்­வர் பதவி, அமைச்­சர், இணை அமைச்­சர் பத­வி­கள் பற்­றிய நிபந்­த­னை­களை தெரி­வித்­தார். இரு­வ­ரும் சேர்ந்து அமித்ஷா வீட்­டிற்கு சென்­ற­னர். அங்கு கூட்­டணி அர­சுக்­கான பேச்­சு­வார்த்தை இறு­தி­யாக்­கப்­பட்­டது.  தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்டு மூன்று நாட்­கள் கழித்து சென்ற மாதம் 27ம் தேதி இரண்­டா­வது முறை­யாக முதல்­வ­ராக மனோ­கர் லால் கட்­டா­ரும், துணை முதல்­வ­ராக துஷ்­யந்த் சவு­தா­லா­வும் பதவி ஏற்­றுக் கொண்­ட­னர். பத­வி­யேற்பு விழாவை காண துஷ்­வந்த் சவு­தா­வின் தந்தை அஜய் சவு­தா­லா­வுக்கு திகார் சிறை­யில் இருந்து 15 நாட்­கள் பரோ­லில் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டது.

சட்­ட­சபை தேர்­த­லில் பார­திய ஜனதா, ஜாட் சமூ­கத்தை தவிர, மற்ற எல்லா சமூ­கத்­தை­யும் தனக்கு ஆத­ர­வாக ஓர­ணி­யில் திரட்­டி­யது. ஆனால் எதிர்­பார்த்த அளவு வெற்றி கிடைக்­க­வில்லை. 2014ல் நடை­பெற்ற தேர்­த­லில் 47 இடங்­க­ளில் வெற்றி பெற்று இருந்த பா.ஜ., இந்த தேர்­த­லில் 40 இடங்­க­ளில் மட்­டுமே வெற்றி பெற­மு­டிந்­தது. இதற்கு முக்­கிய கார­ணம் ஜாட் இட­ஒ­துக்­கீடு போராட்­டத்­தின் போது நடை­பெற்ற சம்­ப­வங்­களே. இத­னால் ஜாட் சமூ­கத்­தி­னர் மத்­தி­யில் கட்­டார் அரசு மீது வெறுப்பு இருந்­தது. இதை காங்­கி­ரஸ் கட்சி, குறிப்­பாக ஜாட் சமூ­கத்­தைச் சேர்ந்த பூபேந்­தர் சிங் ஹுடா சரி­யாக பயன்­ப­டுத்­திக் கொண்­டார்.

இதை சரிக்­கட்ட பா.ஜ.,தலைமை துஷ்­யந்த் சவு­தாலா உடன் கூட்­டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்­தது. ஒரு புறம் ஹரி­யா­னா­வில் கணி­ச­மாக உள்ள ஜாட் சமூ­கத்­தி­ன­ரின் ஆத­ரவை பெற­லாம். மறு புறம், வரும் டில்லி சட்­ட­சபை தேர்­த­லில் இவர்­க­ளின் வாக்­கு­களை பெற­வும் உத­வி­யாக இருக்­கும். டில்­லி­யில் மட்­டும் 25 லட்­சம் ஜாட் சமூ­கத்­தி­னர் வாழ்­கின்­ற­னர். குறிப்­பாக ஹரி­யானா எல்­லையை ஒட்டி உள்ள பகு­தி­க­ளில் வெற்றி, தோல்­வியை நிர்­ண­யிக்­கும் சக்­தி­யா­க­வும் உள்­ள­னர். எனவே ஹரி­யா­னா­வில் கூட்­டணி ஆட்சி அமைப்­பது ஆட்­சிக்கு ஸ்திரத்­தன்மை கிடைப்­ப­து­டன், வரும் டில்லி சட்­ட­சபை தேர்­த­லுக்­கும் உத­வி­யாக இருக்­கும். சுயேட்­சை­க­ளின் ஆத­ரவை பெற்று ஆட்சி அமைப்­பது எளி­தாக இருந்­தா­லும், இவர்­கள் நாள­டை­வில் தலை­வ­லி­ய­கா­வும் மாற வாய்ப்­புள்­ளது. ஏனெ­னில் சுயேட்­சை­யாக வெற்றி பெற்­ற­வர்­கள், பா.ஜ., காங்­கி­ரஸ் கட்­சி­க­ளைச் சேர்ந்­த­வர்­களே. இவர்­கள் கட்­சி­யில் தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­கா­மல் சுயேச்­சை­யாக நின்று வெற்றி பெற்­ற­வர்­கள்.

இதற்கு பதி­லாக பத்து உறுப்­பி­னர்­களை கொண்ட ஜன்­நா­யக் ஜனதா கட்­சி­யு­டன் கூட்­டணி அமைத்து ஆட்சி அமைப்­பதே சிறந்­தது. இது ஆட்சி பல­மாக இருக்­க­வும், மனோ­கர் லால் கட்­டார் அர­சுக்கு எதி­ராக இருந்த ஜாட் சமூ­கத்­தி­னரை அர­வ­ணைத்­துச் செல்­ல­வும் உத­வி­யாக இருக்­கும்.

தற்­போது பா.ஜ.,வுடன் கூட்­டணி சேர்ந்து ஆட்சி அமைப்­ப­தற்­கும், அர­சில் பங்­கேற்­ப­தற்­கும் துஷ்­யந்த் சவு­தலா மீது ஒரு தரப்பு ஜாட் சமூ­கத்­தி­ன­ரின் மத்­தி­யில் விமர்­ச­னங்­கள் உள்­ளன. இது போன்ற விமர்­ச­னங்­கள் இருந்­தா­லும், பா.ஜ.,வுடன் கூட்­டணி சேர எடுத்த முடிவு சரி­யா­ன­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. பா.ஜ.,வுடன் கூட்­டணி சேரா­மல் இருந்­தா­லும், எப்­ப­டி­யும் ஏழு சுயேட்­சை­க­ளின் ஆத­வு­டன் பா.ஜ., ஆட்சி அமைக்­கும். எதிர்­கட்சி வரி­சை­யில் அமர்ந்து வேடிக்கை பார்க்க வேண்­டும். அத்­து­டன் எதிர்­கா­லத்­தில் தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாற­மாட்­டார்­கள் என்­பதை உறு­தி­யாக கூற­வும் இய­லாது. நல்ல வாய்ப்பை பயன்­ப­டுத்­திக் கொண்டு ஆளும் கட்சி பக்­கம் தாவ­வும் வாய்ப்பு உள்­ளது.

 இதற்கு முன் 2009ல் காங்­கி­ரஸ் ஆட்சி அமைத்­தது. முதல்­வ­ராக பூபேந்­தர் சிங் ஹுடா பத­வி­யேற்­றார். காங்­கி­ர­சில் இருந்து பிரிந்து சென்று ஹரி­யானா ஜன்­ஹிட் காங்­கி­ரஸ் என்ற  தனிக்­கட்­சியை பஜன்­லால் தொடங்­கி­னார். இவ­ரது கட்சி சார்­பில் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் இருந்­த­னர். இதில் ஐந்து பேர் கட்சி தாவி, காங்­கி­ரஸ் அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர். இது போல் நடக்­காது என கூற­வும் இய­லாது. இதை விட பா.ஜ.,வுடன் கூட்­டணி அர­சில் பங்­கேற்­பதே சிறந்­தது என்ற கருத்­தும் ஜாட் சமூ­கத்­தி­னர் மத்­தி­யில் நில­வு­கி­றது. அத்­து­டன் காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஆத­ர­வு­டன் ஆட்சி அமைப்­பது, அல்­லது ஆட்­சி­யில் பங்­கேற்­பது என்­பது எந்த அளவு சரி­யாக இருக்­கும் என்­றும் கூற இய­லாது. ஏனெ­னில் கர்­நா­டா­கா­வில் மதச்­சார்­பற்ற ஜனதா தளம், காங்­கி­ரஸ் உடன் கூட்­டணி அமைத்து பட்ட பாடு பற்றி எல்­லோ­ருக்­கும் தெரி­யும். எனவே ஹரி­யா­னா­வில் பா.ஜ.,வுடன் ஆட்­சி­யில் ஜன்­நா­யக் ஜனதா கட்சி பங்­கேற்று இருப்­பதே சரி­யான முடிவு


ஜன்­நா­யக் ஜனதா கட்சி

ஹரி­யா­னா­வில் துஷ்­யந்த் சவு­தாலா தொடங்­கிய கட்­சி­யின் பெயர் ஜன்­நா­யக் ஜனதா கட்சி. இவ­ரது கொள்ளு தாத்தா முன்­னால் துணை பிர­த­மர் தேவி­லால், மக்­க­ளால் அன்­பாக ‘ஜன் நாயக்’ (மக்­கள் தலை­வர்) என்று அழைக்­கப்­பட்­ட­வர். அவ­ரது சிறப்பு பெய­ரில் ‘ஜன்­நா­யக் ஜனதா கட்சி’ (மக்­கள் தலை­வர் மக்­கள் கட்சி) என்று கட்­சி­யின் பெயரை வைத்­துள்­ளார்.