நாகாலாந்து பேச்சுவார்த்தை இழுபறி!

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் ஒன்­றான நாகா­லாந்­தில், மத்­திய அர­சுக்­கும் தனி நாடு கேட்டு போராடி வந்த பிரி­வி­னை­வா­தி­க­ளுக்­கும் இடையே நீண்­ட­கா­ல­மாக பேச்­சு­வார்த்தை நடந்து வந்­தது. இந்த பேச்­சு­வார்த்தை முடி­வுக்கு வந்து அக்­டோ­பர் 31ம் தேதி இறுதி உடன்­ப­டிக்கை ஏற்­பட கெடு விதிக்­கப்­பட்­டது. ஆனால் இது வரை உடன்­ப­டிக்கை ஏற்­ப­ட­வில்லை.

மத்­திய அர­சுக்­கும், நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரி­வுக்­கும் இடையே 2015, ஆகஸ்ட் 3ம் தேதி ஒரு ‘முன்­மா­திரி உடன்­ப­டிக்கை’ ஏற்­பட்­டது. இந்த உடன்­ப­டிக்கை ஏற்­பட மத்­திய அரசு சார்­பில் ஆர்.என். ரவி பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டார். அதே நேரத்­தில் முன்­மா­திரி உடன்­ப­டிக்­கை­யின் அம்­சங்­கள் குறித்து வெளிப்­ப­டை­யாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது ஆர்.என்.ரவி நாகா­லாந்து கவர்­ன­ராக உள்­ளார்.

நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) உடன் மட்­டும் மத்­திய அரசு பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. மற்ற ஆறு குழுக்­க­ளு­ட­னும் பேச்­சு­வார்த்தை நடத்­து­கின்­றது. இந்த ஆறு குழுக்­க­ளும் ஒன்று சேர்ந்து ‘நாகா தேசிய அர­சி­யல் குழு’ என்ற பெய­ரில் இயங்­கு­கின்­ற­னர்.

நாகா தேசிய அர­சி­யல் குழு­வில், நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (குடோவி ஜிமோமி) பிரிவு, நாகா தேசிய கவுன்­சில், நாகா­லாந்து மத்­திய அரசு, நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (சீர்­தி­ருத்­தம்) நாகா­லாந்து ஜன­நா­யக குடி­ய­ரசு ஆகிய குழுக்­கள் இணைந்­துள்­ளன.  

நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா), நாகா­லாந்­தின் அண்டை மாநி­லங்­க­ளான அஸ்­ஸாம், அரு­ணா­சல பிர­தே­சம், மணிப்­பூர் ஆகிய மாநி­லங்­க­ளில் நாகா இன மக்­கள் வாழும் பகு­தி­யை­யும் உள்­ள­டக்­கிய ‘பரந்த நாகா­லாந்து’ அமைக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கி­றது. அதா­வது இந்த மாநி­லங்­க­ளில் நாகா இன மக்­கள் வாழும் பகு­தியை பிரித்து நாகா­லாந்­து­டன் இணைக்க வேண்­டும் என்­பதே.

நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரிவு சில வரு­டங்­க­ளுக்க முன் பரந்த நாகா­லாந்து வரை படத்தை வெளி­யிட்­டது. அதில் 1 லட்­சத்து 3 ஆயி­ரத்து 473 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ளவு காண்­பிக்­கப்­பட்டு இருந்­தது. இதில் அரு­ணா­ச­ல­பி­ர­தேச்­தைச் சேர்ந்த அன்­ஜாவ், சாங்­லாங், லோகிட், லாங்­டிங், திராப் மாவட்­டங்­கள் சேர்க்­கப்­பட்டு இருந்­தன. அதே போல் அஸ்­ஸாம் மாநி­லத்­தைச் சேர்ந்த திமா ஹசோ, கர்பி அன­லாங் மாவட்­டங்­கள், திப்­ரு­கர்க், கோலா­காட், ஜோர்­கட், சிவ­சா­கர், துனிஷ்­கியா மாவட்­டங்­க­ளின் சில பகு­தி­கள் சேர்க்­கப்­பட்டு இருந்­தன. மணிப்­பூர் மாநி­லத்­தின் சனி­டில், காம்­ஜோங், காங்­போக்பி, சேனா­படி, தமிங்­லாங், டெங்­னா­பால், உக்­ருல் ஆகிய மாவட்­டங்­க­ளும் சேர்க்­கப்­பட்டு இருந்­தன. நாகா­லாந்­தின் அண்டை மாநி­லங்­க­ளான அஸ்­ஸாம், அரு­ணா­ச­ல­பி­ர­தே­சம், மணிப்­பூர் ஆகிய மாநி­லங்­க­ளில் நாக இன மக்­கள் வாழும் மேற்­கண்ட பகு­தி­யை­யும் சேர்த்து ‘பரந்த நாகா­லாந்து’ என்று அழைக்­கின்­ற­னர்.  நாகா­லாந்து மாநி­லத்­தின் பரப்­ப­ளவு 16,527 சதுர கிலோ­மீட்­டர் மட்­டுமே.  

மத்­திய அர­சுக்­கும், நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரிவு, புதி­தாக உரு­வா­கி­யுள்ள நாகா தேசிய அர­சி­யல் குழு ஆகி­ய­வற்­று­டன் உடன்­பாடு ஏற்­ப­டும் போது, தங்­கள் மாநி­லத்­தின் எந்த பகு­தி­யை­யும் விட்­டுக் கொடுக்க மாட்­டோம் என்று அண்டை மாநி­லங்­கள் அறி­வித்­துள்­ளன. அரு­ணா­சல பிர­சே­தம், அஸ்­ஸாம், மணிப்­பூர் மாநில அர­சு­க­ளும், மக்­கள் அமைப்­பு­க­ளும் எந்த கார­ணத்தை முன்­னிட்­டும் தங்­கள் மாநி­லத்தை சேர்ந்த பகு­தியை பிரிக்க அனு­ம­திக்க மாட்­டோம் என்று தெளி­வாக அறி­வித்­துள்­ளன.

இதற்கு முன் 2001ல் மத்­திய அர­சுக்­கும், நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரி­வுக்­கும் இடையே போர்­நி­றுத்த உடன்­ப­டிக்கை ஏற்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யில் இனி ஆயுத மோதல் நடத்­து­வ­தில்லை என்று முடிவு செய்­யப்­பட்­டது. அப்­போது மத்­திய அரசு அண்டை மாநி­லங்­க­ளில் நாக இன மக்­கள் வாழும் பகு­தி­களை கொடுக்க சம்­ம­தித்து இருப்­பது போல் கருதி, மணிப்­பூ­ரில் பெரிய அளவு கல­வ­ரம் வெடித்­தது.

நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரிவு பரந்த நாகா­லாந்து கேட்­ப­து­டன் மட்­டு­மல்­லா­மல், நாகா­லாந்து மாநி­லத்­திற்கு என தனி கொடி, அர­சி­யல் சட்­டம், தன்­னிச்­சை­யான நிர்­வா­கம் வேண்­டும் என்­றும் வற்­பு­றுத்தி வரு­கி­றது.

நாகா­லாந்து கவர்­னர் ரவி வெளி­யிட்ட அறிக்­கை­யில், “இந்த பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டுள்ள எல்லா அமைப்­பு­க­ளும் மக்­க­ளின் விருப்­பத்தை புரிந்து கொண்டு, குறிப்­பிட்ட கால­வ­ரை­ய­றுக்­குள் பேச்சு வார்த்­தையை முடி­வுக்கு கொண்டு வர வேண்­டும். மத்­திய அர­சின் நிலையை அறிந்­தும் கூட, தனி கொடி, தனி அர­சி­யல் சட்­டம் என வலி­யு­றுத்­து­வது பேச்­சு­வார்த்­தையை தாம­தப்­ப­டுத்­தம் முயற்­சியே என்று கூறி­யி­ருந்­தார். இதற்கு பதி­ல­ளிக்­கும் வகை­யில் நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரிவு தலை­வர் துச்சு, “தனி கொடி, தனி அர­சி­யல் சட்­டம் இல்­லா­மல் செய்­யும் உடன்­ப­டிக்கை முற்­றுப் பெரு­வ­தாக இருக்­காது. இது எதிர்­கா­லத்­தில் பெரிய தலை­வ­லியை ஏற்­ப­டுத்­தும்” என்று பதி­ல­ளித்து இருந்­தார்.  

இந்த பேச்­சு­வார்த்­தை­யில், நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (கப்­லாங்) பிரிவு மத்­திய அர­சு­ட­னான பேச்சு வார்த்­தை­யில் பங்­கேற்க மறுத்து வரு­கி­றது. இது பற்றி சுமி ஹோகோ என்ற இன குழு தலை­வர் ஹிக்­கிசி சிசு, நாகா­லாந்து உடன்­ப­டிக்கை கப்­லாங் பிரிவை தவிர்த்து சாத்­தி­யமா என்று கேட்­கின்­றார். அத்­து­டன் சமீ­பத்­தில் கப்­லாங் பிரி­வுக்கு அரசு பணத்தை கொடுத்­தாக நான்கு அதி­கா­ரி­கள் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. இது நல்ல அறி­கு­றி­யல்ல என்­றும் கூறி­யுள்­ளார்.

தனிப்­பட்ட முறை­யில் பேசும் போது, பல நாகா இன குழு தலை­வர்­கள், , நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (கப்­லாங்) பிரிவை இணைத்­துக் கொள்­ளா­மல் ஏற்­ப­டும் உடன்­ப­டிக்கை ஏற்­றுக் கொள்ள கூடி­ய­தாக இருக்­குமா என்ற சந்­தே­கத்தை எழுப்­பு­கின்­ற­னர். கொன்­யாக், சாங், சங்­டாம், கய்­ய­மு­னிங்­கம், யம்­சுங்­கர், போம் ஆகிய நாக இனக்­கு­ழுக்­கள் பங்­கேற்­றுள்ள கிழக்கு நாகா­லாந்து மக்­கள் அமைப்­பின் துணைத் தலை­வர் சசி நாகா, “நாங்­கள் அவர்­களை (கப்­லாங் பிரிவை) பேச்சு வார்த்­தை­யில் பங்­கேற்க சம்­ம­திக்க வைக்க முயற்சி செய்­கின்­றோம். ஆனால் யாரை­யும் வற்­பு­றுத்த முடி­யாது. கப்­லாங் பிரி­வி­ன­ரும் பேச்சு வார்த்­தை­யில் பங்­கேற்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கின்­றோம்” என்று கூறி­னார்.        

இதே கருத்தை நாகா மதர் சங்க தலைவி அபியு மெரு­வும் எதி­ரொ­லிக்­கின்­றார். பேச்­சு­வார்த்­தை­யில் கப்­லாங் பிரி­வை­யும் இணைத்­துக் கொள்­வது அவ­சி­யம் என்று இவர் கூறு­கின்­றார். அவோ சென்சோ என்ற நாகா இன குழு தலை­வர் சுபோ ஜமீர், “கப்­லாங் பிரி­வை­யும் பேச்­சு­வார்த்­தை­யில் சேர்த்­துக் கொள்­வதே சரி­யா­ன­தாக இருக்­கும். அவர்­க­ளும் நாகா இறை­யாண்­மைக்­காக போரா­டி­ய­வர்­கள். அவர்­க­ளை­யும் சேர்த்­துக் கொள்­ள­வில்லை எனில், மத்­திய அரசு எத்­தனை பேரு­டன் உடன்­ப­டிக்­கை­களை செய்து கொள்­ளும்? என்று கேட்­கின்­றார்.

அதே நேரத்­தில் நாகா அர­சி­யல் குழு­வில் இடம் பெற்­றுள்ள அமைப்­பு­கள் கடந்த காலத்­தில் செய்த தவ­று­க­ளுக்கு மன்­னிக்­கின்­றோம் என்று, நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரிவு அதி­கா­ர­பூர்­வ­மாக தெரி­வித்­துள்­ளது. அதே நேரத்­தில் நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரி­வின் தலை­வர்­கள் தனிப்­பட்ட முறை­யில் இவர்­கள் மீது வெறுப்­பா­கவே உள்­ள­னர்.

நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) பிரி­வின் உயர் அமைப்­பான ஸ்டீரிங் கமிட்­டி­யின் கன்­வீ­ன­ரும், இதன் உள்­துறை அமைச்­ச­ரான ரைசிங் கூறு­கை­யில், “நாகா இன மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்கு இல்­லா­த­வர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டதே நாகா அர­சி­யல் குழு. இவர்­கள் பசு தோல் பூர்த்­திய புலி­கள் என்று கூறி­னார்.

அத்­து­டன் கப்­லாங் பிரி­வை­யும் இணைத்­துக் கொள்­ளா­விட்­டால் பேச்­சு­வார்த்தை முற்­றுப் பெறாது என்று கூறு­வதை மறுத்த ரைசிங், “நாங்­களே நாகா இன மக்­க­ளின் அரசு. நாங்­கள் நாகா இன மக்­களை பிர­தி­நி­தித்­து­வப் படுத்­து­கின்­றோம். நாங்­கள் நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சி­லின் ஒரு பிரிவு அல்ல. நாங்­கள் மட்­டுமே நாகா இன மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வம் அரசு. அவர்­கள் (கப்­லாங்   பிரிவு) நேற்று வந்­த­வர்­கள். நாங்­கள் மட்­டுமே நாகா மக்­க­ளுக்­காக போரா­டு­ப­வர்­கள் என்று கூறி­னார்.

நகா­லாந்து பேச்­சு­வார்த்­தையை தற்­போ­தைய கவர்­னர் ரவி­யு­டன் நடத்­திய, நாகா­லாந்து தேசிய சோச­லிச கவுன்­சில் (இசக்–­முய்வா) மூத்த தலை­வர், “நாகா அர­சி­யல் குழு­வில் இடம் பெற்­றுள்ள ஆறு அமைப்­பு­க­ளும் பின்­வா­சல் வழி­யாக வந்து பேச்­சு­வார்த்­தையை சீர்­கு­லைக்­கின்­ற­னர். அவர்­கள் கடந்த காலத்­தில் செய்­ததை நாங்­கள் மறக்­கவே மாட்­டோம். இவர்­கள் இந்­திய உள­வுத்­து­றை­யு­டன் சேர்ந்து எங்­களை ஒழித்­துக்­கட்ட உதவி செய்­த­னர். இவற்றை எல்­லாம் அறி­யா­மல், இவர்­க­ளை­யும் பேச்­சு­வார்த்­தை­யில் சேர்த்­துக் கொள்ள வேண்­டும் என்று மக்­கள் கூறு­கின்­ற­னர். இதை ஏற்­றுக் கொண்டு, அவர்­க­ளை­யும் சேர்த்­துக் கொண்­டுள்­ளோம். அதே நேரத்­தில் கடந்த காலத்­தில் செய்த துரோ­கத்தை மறப்­பது எளி­தல்ல. பேச்­சு­வார்த்­தையை நடத்­தும் ரவி, அவர்­கள் (மத்­திய அரசு) கூறு­வதை ஏற்­றுக் கொள்ள வேண்­டும் என்று நிர்ப்­பந்­தித்­தால், நாங்­கள் எங்­கள் வழி­யில் செல்­வோம் என்று எச்­ச­ரிக்­கும் தொனி­யில் கூறி­னார்.

மத்­திய அரசு சார்­பில் நாக­லாந்து பேச்சு வார்த்­தையை நடத்­தும் ரவி, நாகா தலை­வர்­கள் நேர­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்த முன்­வர வேண்­டும். என்னை புண்­ப­டுத்­தி­யதை பற்றி கவ­லைப்­பட வேண்­டாம். நேர்­மை­யாக பேச்­சு­வார்த்தை நடத்த வாருங்­கள். நானும் அப்­ப­டியே நடந்து கொள்­வேன். கப்­லாங் பிரி­வி­ன­ரும் பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்க வேண்­டும். இறுதி உடன்­ப­டிக்கை எல்லா தரப்பு மக்­க­ளா­லும் ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும்.அந்த தரு­ணம் எல்லா தரப்பு நாகா இன மக்­க­ளும் கொண்­டாட கூடி­ய­தாக இருக்க வேண்­டும்” என்று கூறி­னார்.

நன்றி: ஸ்கோரல் இணை­ய­த­ளத்­தில் அரு­ணாப் சைகியா எழு­திய கட்­டு­ரை­யின் உத­வி­யு­டன்.