ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

அஜய் பக­தூர் சிங் டாக்­ட­ராக வேண்­டும் என்று நினைத்­தார். அவ­ரது குடும்ப பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக அவ­ரால் டாக்­ட­ராக முடி­ய­வில்லை. இப்­போது அவர் ஒடிசா மாநி­லத்­தில் புவ­னேஸ்­வர் நக­ரத்­தைச் சேர்ந்த ஏழை மாணவ, மாண­வி­களை டாக்­டர்­க­ளாக உரு­வாக்கி வரு­கி­றார்.

அஜய்க்கு பதி­னெட்டு வய­தாக இருக்­கும் போது மருத்­துவ கல்வி நுழைவு தேர்வு எழுத தயார் படுத்­திக் கொண்­டி­ருந்­தார். அப்­போது ஜார்­கண்ட் மாநி­லத்­தில் நீர்ப்­பா­சன துறை­யில் பொறி­யா­ள­ராக வேலை செய்து கொண்­டி­ருந்த அவ­ரது தகப்­ப­னா­ருக்கு திடீ­ரென உடல்­நல குறைவு ஏற்­பட்­டது. அவ­ருக்கு சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை செய்­தால் மட்­டுமே பிழைக்க முடி­யும் என்ற நிலை உரு­வா­கி­யது. அவர்­க­ளது சொந்த வீட்டை விற்­பனை செய்து, சென்­னை­யில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை செய்­த­னர். குடும்ப பொரு­ளா­தார சூழ்­நிலை கார­ண­மாக அஜய் டாக்­ட­ராக வேண்­டும் என்ற ஆசையை கைவிட வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.

தகப்­ப­னா­ரின் மருத்­துவ செலவு, குடும்ப செலவு ஆகி­ய­வற்றை சமா­ளிக்க அஜய் டியூ­சன் எடுக்க தொடங்­கி­னார். அவ­ரது சொந்த கிரா­ம­மான தியோ­க­ரில் (ஜார்­கண்­டில்),டீ, குளிர்­பா­னங்­களை விற்­பனை செய்­யும் கடை­யை­யும் திறந்­தார். பட்­ட­ப­டிப்பை படித்­துக் கொண்டே பகு­தி­நே­ர­மாக சோடா தயா­ரிக்­கும் இயந்­தி­ரங்­க­ளை­யும் விற்­பனை செய்­தார்.

அவர் 1996ல் பாட்­னா­வில் கார்­டர் கோச்­சிங் சென்­டரை தொடங்­கி­னார். இங்கு மாண­வர்­க­ளுக்கு வங்கி, ரயில்வே, மத்­திய அர­சின் ஊழி­யர் தேர்வு போன்­ற­வை­க­ளுக்கு தயார்­ப­டுத்­திக் கொள்ள பயிற்சி கொடுக்க தொடங்­கி­னார். அதற்கு அடுத்த வரு­டம் அட­யன்ட் கல்வி மற்­றும் அறக்­கட்­டளை சார்­பில் பதி­னென்­டாம் வகுப்பு படிக்­கும் மாண­வர்­க­ளுக்­காத தனி­யார் பயிற்சி பள்­ளியை தொடங்­கி­னார். பாட்­னா­வில் ஐ.ஐ.டி போன்­ற­வை­க­ளுக்கு மாண­வர்­களை தயார்­ப­டுத்­தும் ‘சூப்­பர் 30’ பயிற்சி பள்­ளியை முன்­மா­தி­ரி­யாக கொண்டு, இதன் நிறு­வ­னர் ஆனந்த் குமா­ரின் வழி­காட்­டு­தன் பேரில், அஜய் ‘அடாம் 50’ என்ற பெய­ரில் பயிற்சி பள்­ளியை தொடங்­கி­னார். இதன் நோக்­கம் சமு­தா­யத்­தில் ஏழை குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள், தாழ்த்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­னர் ஆகிய பிரி­வைச் சேர்ந்த நன்கு படிக்க கூடிய மாண­வர்­கள், மருத்­து­வ­கல்­லூ­ரி­கள், பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் சேர தேவை­யான பயிற்சி அளித்து, கல்­லூ­ரி­க­ளில் சேர உதவி செய்­வதே.

சூப்­பர் 30 நிறு­வ­னர் ஆனந்த் குமார் பனி­ரென்­டாம் வகுப்­பில் தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­கின்­றார். ‘அடாம் 50’ நிறு­வ­னர் அஜய் பத்­தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­து­டன், வச­தி­யில்­லாத மாண­வர்­க­ளுக்கு பனி­ரென்­டாம் வகுப்பு படிக்­க­வும் உதவி செய்­கின்­றார். கடந்த பல ஆண்­டு­க­ளில் அடாம் 50ல் பயிற்சி பெற்ற பல மாண­வர்­கள் மாண­வர்­கள் மருத்­து­வ­கல்­லூரி. பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் சேர்ந்து படிக்­கின்­ற­னர்.

ஒரு முறை அஜய் பூரி­யில் உள்ள ஜெகன்­னா­தர் ஆல­யத்­திற்கு சென்று இருந்­தார். அங்கு ஒரு சிறுமி கையில் இயற்­பி­யல் (பிசிக்ஸ்) பாட புத்­தக்­கதை வைத்து படித்­துக் கொண்டே, பூஜை பொருட்­களை விற்­பனை செய்து கொண்­டி­ருந்­தார். அந்த சிறுமி படிக்க ஆசைப்­பட்­டா­லும், அவ­ரது தகப்­ப­னா­ருக்கு வரு­மா­னம் இல்­லாத கார­ணத்­தால் படிக்­க­வைக்க முடி­யா­மல் இருப்­பதை அறிந்­தார்.

இது போன்ற படிப்­பில் ஆர்­வம் உள்ள ஏழை மாணவ,மாண­வி­களை படிக்க வைக்க, 2017ல் ஜிந்­தாகி அறக்­கட்­ட­ளையை தொடங்­கி­னார். இதன் நோக்­கம் படிப்­பில் ஆர்­வம் உள்ள பொரு­ளா­தார வசதி இல்­லாத குடும்­பத்­தைச் சேர்ந்த மாணவ, மாண­வி­க­ளுக்கு மருத்­துவ கல்­லூ­ரி­யில் சேர்ந்து படிக்க போதிய பயிற்சி அளிப்­பதே. இதற்கு தேவை­யான பணத்தை, அடா­யன்ட் சயின்ஸ் கல்­லூரி, மற்ற பயிற்சி நிலை­யங்­க­ளில் இருந்து கிடைக்­கும் வரு­மா­னத்­தில் அஜய் செல­வ­ழிக்­கின்­றார்.

2017, முதல் வரு­டம் மருத்­துவ கல்­லூரி நுழைவு தேர்­வான நீட் தேர்­வுக்கு இரு­பது பேருக்கு பயிற்சி அளித்­தார். அதில் 18 பேர் நீட் தேர்­வில் தேர்ச்சி பெற்­ற­னர். 12 பேர் மருத்­துவ கல்­லூ­ரி­யில் சேர்ந்து படிக்­கின்­ற­னர். இரண்­டாம் வரு­டத்­தில் (2018) ஜிந்­தாகி அறக்­கட்­ட­ளை­யில் படித்த 14 பேர் நீட் தேர்­வில் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர். இந்த வரு­டம் 19 பேர் நீட் தேர்­வுக்­காக பயிற்சி பெற்று வரு­கின்­ற­னர்.

“நான் எல்லா அரசு பள்ளி ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும், மாண­வர்­க­ளுக்கு எங்­கள் பயிற்சி பள்­ளியை பற்றி தெரி­வி­யுங்­கள். நன்கு படித்த ஏழை மாண­வர்­களை எங்­க­ளுக்கு அறி­மு­கம் செய்து வையுங்­கள் என்று கேட்­டுக் கொண்­டுள்­ளேன். நாங்­கள் நுழைவு தேர்வு, நேர்­முக தேர்வு நடத்தி மாண­வர்­களை தேர்ந்­தெ­டுக்­கின்­றோம். நுழைவு தேர்­வில் வெற்றி பெற்ற மாண­வர்­க­ளின் குடும்ப சூழ்­நிலை, பொரு­ளா­தார வச­தியை பற்றி அறிந்து கொள்ள நேர்­முக தேர்வு நடத்தி, ஏழை மாண­வர்­களை தேர்ந்­தெ­டுக்­கின்­றோம்” என்று அஜய் தெரி­வித்­தார்.

நீட் பயிற்­சிக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் மாண­வர்­கள், பயிற்சி பள்­ளிக்கு அரு­கா­மை­யில் உள்ள விடு­தி­யில் தங்கி படிக்க வேண்­டும். நாங்­கள் அளிக்­கும் பயிற்சி கூடு­த­லாக உதவி செய்­வ­தற்கே. நீங்­கள் சுய­மாக படிப்­பதே முக்­கி­யம் என்­பதை மாண­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­து­கின்­ற­னர். தற்­ச­ம­யம் ஒடிசா மாநி­லத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு மட்­டும் பயிற்சி அளிக்­கின்­ற­னர். மற்ற மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

டில்­லி­யில் உள்ள இந்­தி­யன் இன்ஷ்­டி­யூட் ஆப் லா அண்ட் மேனெஜ்­மென்ட் கல்வி நிறு­வ­னத்­தின் முன்­னாள் மாண­வர் ஷிவன் சிங் சவுத்ரி, கடந்த ஒரு வரு­டத்­திற்­கும் அதி­க­மாக ஜிந்­தாகி அறக்­கட்­ட­ளை­யின் ஒருங்­கி­னைப்­பா­ள­ராக சேவை­யாற்றி வரு­கி­றார்.

“நான் முதல் இரண்டு மாதம் தின­சரி மாண­வர்­களை சந்­திப்­பேன். அவர்­க­ளுக்கு தன்­னம்­பிக்கை ஊட்­டும் வித­மாக ஊக்­கம் அளிக்­கும் வகை­யில் பேசு­வோம். ஆங்­கில மொழி பயிற்சி அளிப்­போம். இத­னால் அவர்­க­ளுக்கு தன்­னம்­பிக்கை பிறக்­கி­றது” என்று  ஷிவன் சிங் சவுத்ரி தெரி­வித்­தார்.

இங்கு பயிற்சி பெறும் மாண­வர்­கள் ஒரு வரு­டம் தங்கி படிக்க வேண்­டும். விடு­மு­றை­யின் போது வீட்­டிற்கு செல்ல கூடாது. நீட் தேர்வு எழுதி முடித்த பிறகே, வீட்­டிற்கு செல்ல வேண்­டும். செல்­போன் வைத்­துக் கொள்ள கூடாது. அவர்­களை ஷவன் எப்­போ­தா­வது சினி­மா­விற்கோ அல்­லது மற்ற பொழுது போக்கு இடங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­கின்­றார். எல்லா பண்­டி­கை­க­ளை­யும் ஒன்று சேர்ந்து கொண்­டா­டு­கின்­ற­னர். தற்­ச­ம­யம் இந்த நீட் தேர்வு பயிற்சி நிலை­யத்­தில் நான்கு ஆசி­ரி­யர்­கள் பயிற்சி அளிக்­கின்­னர். 20 மாண­வர்­கள் பயிற்சி பெறு­கின்­ற­னர்.

இங்கு விலங்­கி­யல் பாடத்­தில் மேற்­பட்­ட­ப­டிப்பு படித்த துர்கா பிர­சாத் என்­ப­வ­ரும் பயிற்சி அளிக்­கின்­றார். இவர் இதற்கு முன் ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­க­ளில் பல போட்டி தேர்­வு­க­ளுக்கு மாண­வர்­க­ளுக்கு எட்டு வரு­டங்­கள் பயிற்சி அளித்த அனு­ப­வம் உள்­ள­வர்.

இங்கு அளிக்­கப்­ப­டும் பயிற்சி பற்றி துர்கா பிர­சாத் விளக்­கு­கை­யில், “நாங்­கள் ஒவ்­வொரு பாடப்­பி­ரி­வு­க­ளி­லும் அடிப்­படை விஷ­யங்­களை சொல்­லிக் கொடுக்­கின்­றோம். அடிப்­படை தெரி­யா­விட்­டால் நீங்­கள் யோசித்து பதி­ல­ளிக்க முடி­யாது. அதற்கு பிறகு நீட் தேர்வு வினாத்­தாள் போன்ற வடி­வில் வினாத்­தாள் கொடுக்­கின்­றோம். ஆனால் அதே மாதி­ரி­யா­ன­தல்ல. சிந்­தித்து பதில் அளிக்­கும் வகை­யில் உள்ள வினாக்­கள். மனப்­பா­டம் செய்­வது, அறிவை புகுத்­து­வது போன்று அல்ல. அவர்­கள் புரிந்து கொண்­டால் நீட் தேர்­வில் எளி­தாக பதி­ல­ளிக்க முடி­யும் என்று கூறி­னார்.

இந்த ஜிந்­தாகி அறக்­கட்­டளை பயிற்சி வகுப்­பில் புவ­னேஸ்­வர் நக­ரைச் சேர்ந்த கொத்­த­னா­ரின் ஒரே மகள் கிருஷ்ணா மொகந்தி என்ற மாணவி படித்து நீட் தேர்­வில் வெற்றி பெற்­றுள்­ளார். இந்த மாணவி 12ம் வகுப்­பில் 90 சத­வி­கித மதிப்­பெண் எடுத்து தேறி­னார். ஒரு வரு­டம் நீட் பயிற்சி பெற்று தேர்­வில் வெற்றி பெற்று, அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படிக்­கின்­றார்.

“டாக்­டர் ஆக வேண்­டும் என்­பது எனது சிறு வயது கனவு. நான் மருத்­துவ கல்­லூ­ரி­யில் சேர ஜிந்­தாகி அறக்­கட்­டளை உதவி செய்­தது என்று கிருஷ்ணா மொகந்தி கூறி­னார்.

கான்­பூ­ரில் அரசு பள்­ளி­யில் படித்த அனி­ருதா நாயக் என்ற மாண­வ­னும், ஜிந்­தாகி அறக்­கட்­டளை பயிற்சி பள்­ளி­யில் படித்து வரு­கின்­றான்.இந்த மாண­வன் பனி­ரெண்­டாம் வகுப்­பில் 82 சத­வி­கித மதிப்­பெண் பெற்று தேர்ச்சி பெற்­றான். தனி­யார் நீட் பயிற்சி மையத்­தில் சேர்ந்து படித்­தான். பணம் கட்ட முடி­யாத கார­ணத்­தால் பயிற்சி வகுப்­பில் தொடர முடி­ய­வில்லை. நீட் தேர்­வில் பத்து மதிப்­பெண்­க­ளில் தோல்வி அடைந்­தார். அதன் பிறகு ஜிந்­தாகி அறக்­கட்­டளை பயிற்சி மையத்­தில் படித்து நீட் தேர்­வில் தேர்ச்சி பெற்­றார். தற்­போது கட்­டாக்­கில் உள்ள மருத்­துவ கல்­லூ­ரி­யில் மருத்­து­வம் படிக்­கின்­றார். அஜய் வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம், மாண­வர்­களை படிக்க ஊக்­க­ம­ளிக்­கின்­றார். கடி­ன­மாக படித்து, குறிக்­கோளை நிறை­வேற்­றிக் கொள்ள ஊக்­கு­விக்­கின்­றார்.

நீங்­கள் எந்த சூழ்­நி­லை­யில் இருந்து படிக்க வந்­துள்­ளீர்­கள். என்ன சாதிக்க வந்­துள்­ளீர்­கள் என்­பதை நினை­வில் கொள்­ளுங்­கள். நீங்­கள் சமு­தா­யத்தை மாற்ற பிறந்­த­வர்­கள் என்று அழுத்­தம் திருத்­த­மாக மாண­வர்­க­ளி­டம் அஜய் வலி­யு­றுத்தி கூறு­கின்­றார்.

நன்றி: ரீ டிப் இணை­ய­த­ளத்­தில்

கணேஷ் நாடார்