பாம்பு கடித்த விரலை வெட்டி வீசிய விவ­சாயி!

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

சீனா­வில் ஜெஜி­யாங் மாநி­லத்­தில் உள்ள ஷாங்க்யூ மாவட்­டத்தை சேர்ந்­த­வர் அறு­பது வய­தான விவ­சாயி ஜாங். இவர் மலைப்­ப­கு­தி­யில் விறகு வெட்­டிக் கொண்­டி­ருந்­தார். அப்­போது மரத்­தில் இருந்த ஒரு பாம்பு விவ­சா­யி­யின் விர­லில் கடித்­துள்­ளது.

உடனே சிறி­தும் தாம­திக்­கா­மல் பாம்பு கடித்த விரலை கோடா­ரி­யால் வெட்டி எறிந்­துள்­ளார். அதன் பிறகு 50 மைல் தூரத்­தில் உள்ள ஹாங்க்சோ மருத்­து­வ­ம­னைக்கு வந்­துள்­ளார்.

மருத்­து­வ­ம­னைக்கு சென்ற பிறகு தான் வெட்­டிய விரலை மலைப்­ப­கு­தி­யில் வீசி­யது நினை­வுக்கு வந்­துள்­ளது. இத­னால் விரலை மருத்­து­வர்­க­ளால் கையு­டன் இணைக்க முடி­யா­மல் போனது. மருத்­து­வர்­கள் அந்த பாம்பு அதிக விஷம் இல்­லாத பாம்பு என­வும், அவ­ச­ரப்­பட்டு விரலை வெட்­டி­யி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்­றும் கூறி­யுள்­ள­னர்.