பெற்ற தாயை பட்­டினி போட்டு கொன்ற மக­னுக்கு 10 வருட சிறை தண்­டனை

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019


துபா­யில் மனை­வி­யு­டன் சேர்ந்து பெற்ற தாயை கொடு­மைப்­ப­டுத்தி, பட்­டினி போட்டு கொன்ற மக­னுக்­கும், மரு­ம­க­ளுக்­கும் பத்து வருட சிறை தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வைச் சேர்ந்த 29 வய­தான ஒரு­வர், 28 வய­தான மனைவி, மக­ளு­டன் துபா­யில் வசித்து வந்­துள்­ளார். இவர் சென்ற வரு­டம் மகளை கவ­னித்­துக் கொள்­வ­தற்­காக இந்­தி­யா­வில் இருந்து தாயை துபாய்க்கு அழைத்து வந்­துள்­ளார். அங்கு மகளை 50 வய­தான தாய் சரி­யாக கவ­னிக்­க­வில்லை என்று தெரி­கி­றது. உடை­களை மாற்­றாத கார­ணத்­தால், அந்த குழந்­தைக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த மக­னும், மரு­ம­க­ளும் சேர்ந்த, அந்த தாயை பட்­டினி போட்டு கொடு­மைப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ள­னர். ஒரு நாள் பக்­கத்து வீட்­டைச் சேர்ந்­த­வர், உட­லில் தீக்­கா­யங்­க­ளு­டன் தரை­யில் படுத்­தி­ருந்த வய­தான பெண்ணை பார்த்து விசா­ரித்­துள்­ளார்.

அவர் உடனே கட்­டட பாது­கா­வ­ருக்கு தெரி­வித்து ஆம்­பு­லன்ஸ்­சை­யும் வர­வ­ழைத்­துள்­ளார். அதி­கா­ரி­கள் விரைந்து வந்து விசா­ரணை செய்­த­னர். எவ்­வித பதற்­ற­மும் இன்றி நின்று கொண்­டி­ருந்த மகன், சுடு­தண்­ணீரை உட­லில் ஊற்­றிக் கொண்­ட­தால் தீக்­கா­யம் ஏற்­பட்­ட­தாக பொய் கூறி­யுள்­ளார். தனது தாயை ஆம்­பு­லன்ஸ்­சில் ஏற்ற உதவி செய்­யா­மல் வேடிக்கை பார்த்­துக் கொண்­டுள்­ளார். பக்­கத்து வீட்­டைச் சேர்ந்­த­வர்­கள் விரைந்து வந்து அந்த முதிய பெண்ணை ஆம்­பு­லன்­சில் ஏற்ற உதவி செய்­துள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அந்த பெண், ஒரு மாதம் கழித்து உயி­ரி­ழந்­தார். பிரேத பரி­சோ­த­னை­யில் அந்த பெண்­ணின் உடம்­பில் பல காயங்­க­ளும், எலும்பு முறி­வு­க­ளும் இருப்­பது தெரிய வந்த்து. அத்­து­டன் மிக மெலிந்து 29 கிலோ எடை மட்­டுமே இருந்­துள்­ளார்.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி, தம்­ப­திக்கு பத்து ஆண்­டு­கள் சிறை தண்­டனை விதித்­தார். சிறை தண்­டனை முடிந்து உடன் , இரு­வ­ரை­யும் நாடு கடத்த வேண்­டும் என­வும் உத்­த­ர­விட்­டார்.