ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘டிராகன் பெண்’ என அழைக்கப்படும் ஆம்பர் லூக் (24)க்கு பச்சை குத்திக் கொள்வது என்றால் வெறி. இவர் 26 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் செலவு செய்து தலை முதல் கால் வரை பச்சை குத்திக் கொண்டுள்ளார். இவர் தனது கண்களையும் நிறம் மாற்றிக் கொள்ள முடிவு செய்தார். கண்களில் பச்சை குத்திக் கொள்வது என முடிவெடுத்தார் ஆம்பர் லூக். இவரது கண்களுக்கு 40 நிமிடங்கள் ஆபத்தான சிகிச்சை மூலம் நீல நிற சாயம் பூசப்பட்டது.
அப்போது கண்களுக்குள் உடைந்த கண்ணாடி துண்டுகளை தேய்ப்பது போல் இருந்தது. வலியால் துடித்துப் போனார் ஆம்பர் லூக். அத்துடன் அவரால் பார்க்க முடியவில்லை. மூன்று வாரங்கள் கழித்து பார்வை திரும்பியது. கண்களை நீல நிறமாக மாற்றிக் கொண்ட இந்த வெள்ளை டிராகன் பெண், நீலக் கண்களை சிமிட்டியபடியே, இப்படி செய்து கொண்டதால் தான் வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.