கண்­க­ளில் பச்சை குத்­திக் கொண்ட டிரா­கன் பெண்

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த ‘டிரா­கன் பெண்’ என அழைக்­கப்­ப­டும் ஆம்­பர் லூக் (24)க்கு பச்சை குத்­திக் கொள்­வது என்­றால் வெறி. இவர் 26 ஆயி­ரம் ஆஸ்­தி­ரே­லிய டாலர் செலவு செய்து தலை முதல் கால் வரை பச்சை குத்­திக் கொண்­டுள்­ளார். இவர் தனது கண்­க­ளை­யும் நிறம் மாற்­றிக் கொள்ள முடிவு செய்­தார். கண்­க­ளில் பச்சை குத்­திக் கொள்­வது என முடி­வெ­டுத்­தார் ஆம்­பர் லூக். இவ­ரது கண்­க­ளுக்கு 40 நிமி­டங்­கள் ஆபத்­தான சிகிச்சை மூலம் நீல நிற சாயம் பூசப்­பட்­டது.

அப்­போது கண்­க­ளுக்­குள் உடைந்த கண்­ணாடி துண்­டு­களை தேய்ப்­பது போல் இருந்­தது. வலி­யால் துடித்­துப் போனார் ஆம்­பர் லூக். அத்­து­டன் அவ­ரால் பார்க்க முடி­ய­வில்லை. மூன்று வாரங்­கள் கழித்து பார்வை திரும்­பி­யது. கண்­களை நீல நிற­மாக மாற்­றிக் கொண்ட இந்த வெள்ளை டிரா­கன் பெண், நீலக் கண்­களை சிமிட்­டி­ய­ப­டியே, இப்­படி செய்து கொண்­ட­தால் தான் வருத்­தப்­ப­ட­வில்லை என்­றும் கூறி­யுள்­ளார்.