டிக்கெட் இல்­லாத பய­ணி­களை ஓடும் ரயில் இருந்து குதிக்­க­வைத்த டிக்கெட் பரி­சோ­த­கர்

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

எகிப்­தில் அலெக்­சான்­டி­ரி­யா­வில் இருந்து லக்­சர் என்ற நக­ருக்கு ரயில் சென்று கொண்டு இருந்த்து. அதில் டிக்கெட் பரி­சோ­த­கர் பய­ணி­க­ளி­டம் டிக்கெட்டை பரி­சோ­தித்து வந்­தார். அப்­போது முக­மது இத், அக­மது முக­மது என்ற இரண்டு பேரும் டிக்கெட் இல்­லா­மல் பிர­யா­ணம் செய்­வது தெரிந்­தது. அவர்­களை பிடித்த டிக்கெட் பரி­சோ­த­கர் அப­ரா­தம் விதித்­துள்­ளார். அவர்­க­ளால் அப­ரா­தம் செலுத்த முடி­ய­வில்லை. உடனை டிக்கெட் பரி­சோ­த­கர் ஓடும் ரயி­லின் கதவை திறந்து, அப­ரா­தம் செலுத்த முடி­யா­விட்­டால் குதித்து ஓடுங்­கள் என்று கத்­தி­யுள்­ளார். இரண்டு இளை­ஞர்­க­ளும் திகைத்து போய் ஓடும் ரயி­லில் இருந்து குதித்­துள்­ள­னர். இதில் முக­மது இட் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளார். அக­ம­து­வின் கால் வெட்டி எடுக்­கப்­பட்­டது.

அந்த டிக்கெட் பரி­சோ­த­கர் நான் எந்த தவ­றும் செய்­ய­வில்லை. ஓடும் ரயி­லில் இருந்து அவர்­க­ளா­கவே குதித்­தார்­கள் என்று கூறி­யுள்­ளார். இவ­ருக்கு ஆத­ர­வாக எகிப்து போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் கமல் ஏ வஜீர், “ அந்த இளை­ஞர்­கள் ஒன்­றும் குழந்­தை­கள் அல்ல. டிக்கெட் வாங்­கா­விட்­டால் என்ன நடக்­கும் என்­பது அவர்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்க வேண்­டும்” என்று கூறி­யுள்­ளார்.

இதனை கேட்டு கொதித்து போன மக்­கள் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் வஜீர் ராஜி­னமா செய்ய வேண்­டும் என்று போராட்­டத்­தில் குதித்­துள்­ள­னர். அந்த ரயி­லின் டிரை­வ­ரும், டிக்கெட் பரி­சோ­த­க­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். எகிப்து அர­சின் ரயில்வே துறை பலி­யான முக­மது இட் குடும்­பத்­திற்கு 4,871 பவுண்­டு­க­ளும், காலை இழந்த அக­மது குடும்­பத்­திற்கு 963 பவுண்­டு­க­ளும் நஷ்­ட­ஈ­டாக வழங்க முன்­வந்­துள்­ளது.