புடவை தாவணியான கதை!

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019

சென்னை, தி.நகர், சாரதா வித்யாலயா பள்ளியில், 1952ல், 9ம் வகுப்பு படித்த போது, மாணவியர், கட்டாயம் தாவணி அணிய வேண்டும்.

எங்கள் வகுப்பில், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த, இரண்டு மாணவியர், தாவணி வாங்க முடியாமல் தவித்தனர்.

இதை அறிந்த வகுப்பு ஆசிரியை ஜெயலட்சுமி, உடனே உதவ முன்வந்தார். அவரது, புதிய புடவைகளை கிழித்து, ஓரம் தைத்து, தாவணிகளாக்கி, அந்த மாணவியருக்கு அளித்தார். மகிழ்ச்சியுடன் அணிந்து வந்தனர்.

எளிய குடும்பத்தை சேர்ந்த அந்த ஆசிரியையின் உன்னதமான செயல், என் மனதில் பதிந்தது.

எனக்கு, 75 வயதாகிறது. இச்சம்பவம் நடந்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதை, இன்று நினைத்தாலும் நெகிழ்ந்து விடுகிறேன்.

– ரா.ஜெயலட்சுமி, கோவை.