மொக்க ஜோக்ஸ்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019


‘‘புறா துாது வந்திருக்கான்னு

மன்னர் கேட்கிறாரே... ஏன்?’’

‘‘மன்னரை புறா கறி சாப்பிட சொல்லியி ருக்கிறாராம்

அரண்மனை

வைத்தியர்!’’

– கவிதா, நெல்லை.

‘‘கட்சிக்காரங்க எல்லாம், ஆடு, கோழிகளை இழுத்து வந்து, கட்சி ஆபீஸ்ல வெட்டுறாங்களே... ஏன்?’’

‘‘ரத்தம் சிந்தி, கட்சிய வளர்க்கணும்னு நீங்க சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டாங்க தலைவரே!’’

– கீதாஞ்சலி, மாரத்தாண்டம்.


‘‘அமைச்சரே... உடைவாளின் முனை மழுங்கி விட்டது; பிடியும் இளகி விட்டது...’’

‘‘சுற்றி வளைக்காமல் பேரீச்சம் பழம் வேண்டும் என்று கேளுங்கள் மன்னா!’’

– அஜீத், திசையன்விளை.


‘‘எம்.எல்.ஏ.வுக்கு ஆப்ரேஷன் செய்ற டாக்டர் எலெக்க்ஷன் கமிஷனுக்கு

தகவல்

தந்தாரே.... எதுக்கு?’’

‘‘தொகுதி காலின்னு அறிவிக்கதான்!’’

– முருகன், கழுகுமலை.