அர்ப்பணிப்போடு செய்தால் வெற்றி நிச்சயம்! – சுமதி

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019

சாப்பாடு என்பது ஒரு  பெரிய விஷயம். ஒரு ஜான் வயித்துக்கு சம்பாதிக்கறோம்.. அதை நல்ல சாப்பாடா சாப்பிடணும்னு பலரும் பேசிக்கறதை கேட்டு இருப்போம்.நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும்னு தேடித் தேடி சாப்பிடுபவர்களை கண்டு இருக்கோம். அவர்களுக்கான ஒரு விஷயமும்.. அதோடு சம்பாதிக்க ஒரு ஆலோசனையுமாக இந்த விஷயத்தை பார்க்கலாம்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் மிகவும் பிரபலமான உணவகம் காமேஸ்வரி உணவகம். எல்லா  ஓட்டல்  மாதிரியும் இலை போட்டு பொரியல் வகையறாக்களுடன் பரிமாறி ஜிஎஸ்டி போட்டு பில் தீட்டுவார்கள் என்று நினைக்காதீர்கள்.

எல்லாம் கலவை சாதம்.. சாம்பார், வத்த குழம்பு, புளியோதரை,எலுமிச்சை, தயிர்சாதம் என்று அனைத்து வகை சத்துங்களும் கிடைக்கும் நல்லா சாப்பிடுபவர்களின் வயிறு கூடமுழுவதுமாக நிறைந்துவிடும்.

35 ரூபாய்க்கு இரண்டு வகை சாதம் வாங்கிக்கலாம். இதில் சிப்ஸ் ஊறுகாய் போன்று தொட்டுக்க தருகிறார்கள். வத்த குழம்பு சாதம், புளியோதரை எல்லாருக்கும் பிடித்த சாதம் என்று சொல்கிறார் உணவு தயாரிப்பில் மும்முரமாக இருக்கு ஸ்ரீமதி.

32 வருஷமாக காலையில் பொங்கல், ,சப்பாத்தி,..வடை மதியம் கலந்த சாத வகைகள், இரவு மூன்று வகை சாதம் இப்படி களைக் கட்டுகிறது காமேஸ்வரி உணவகம்.மதிய லஞ்சுக்கு பிள்ளைகளுக்கு வாங்கி பள்ளியில் கொடுப்பவர்களும் உண்டு.

வரிசை கட்டி நின்று வீட்டு உணவு போல இருக்கும் இந்த உணவு வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுபவர்கள் திருப்தியாக சொல்வது இந்த காமேஸ்வரி உணவகத்தின் ருசி,தரம் சாப்பாட்டின் அளவு வேறு எங்கும் இப்படி கிடைக்காது என்றுதான்.

சப்பாத்திக்கு மொச்சை ,கத்திரிக்காய், உருளைக்கிழங்கு என்று விதம் விதமான சப்ஜி வகைகள்  ஒரு நாளைக்கு ஒன்று என்று அசத்துவர்களாம். சப்பாத்தியின் மிருதுத் தன்மை கூட ரெண்டு சப்பாத்தி சாப்பிட வைக்குமென்று வாடிக்கையாளர்கள்   புகழ்கிறார்கள்.

மனிதனுக்கு மிகமிக அத்தியாவசியத் தேவைகளில் தொழிலைத் தொடங்கி அதை கண்ணும் கருத்துமாக நினைத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி மற்றும்  வெற்றியின் உச்சம் நிச்சயம்.