மழைக்காலத்தில் பெண்களுக்கு ஏற்ற உடை எது..! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019

தற்­போது மழைக்­கா­லம் என்­ப­தால் தின­மும் வேலை, கல்­லூ­ரிக்­குச் செல்­வது சிர­ம­மாக இருக்­கும். இந்த சூழ்­நி­லை­யில் எப்­படி உடை­ய­ணிந்து சென்­றா­லும் மழை­யில் நனை­யக் கூடும். எனவே மழைக்­கா­லத்­தில் சாதா­ரண நாட்­க­ளைக் காட்­டி­லும் உடை அணி­வ­தில் கூடு­தல் கவ­னம் செலுத்­து­வது அவ­சி­யம். அதை எவ்­வாறு என்­பதை விவ­ரிக்­கி­றார் பேஷன்

டிசை­னர் செந்­தா­மரை.

எடை குறை­வான, விரை­வில் ஈரத்தை உறிஞ்­சக் கூடிய உடையை தேர்வு செய்­யுங்­கள். இந்த சம­யத்­தில் ஜீன்ஸ், அதிக எடை நிறைந்த அதா­வது பனிக் காலத்­தில் அணி­யக் கூடிய உடை­களை தவி­ருங்­கள். ஒரு­வேளை அப்­படி அணிந்து சென்­றா­லும் ஈரம் விரை­வில் வற்­றா­மல் அந்த ஈரம் உங்­க­ளுக்கு காய்ச்­சல், சளியை உண்­டாக்­க­லாம்.

அதே­போல் அணி­யும் ஆடை டிரான்ஸ்­ப­ரண்­டாக அதா­வது தண்­ணீர் பட்­டால் உடல் தெரி­யும் வகை­யி­லான பேப்­ரிக்கை தவிர்க்­க­வும். வெள்ளை, சந்­தன நிற ஆடை­க­ளும் ஈரம் பட்­டால் தெரி­யும். எனவே மழைக்­கா­லங்­க­ளில் இது­போன்ற சிக்­கல்­க­ளை­யும் யோசித்து ஆடையை அணி­யுங்­கள்.

முடிந்­தால் உடன் மாற்று ஆடை வைத்­துக்­கொள்­வது நல்­லது. காலை அலு­வ­ல­கம் செல்­லும்­போதே எதிர்­பா­ராத வித­மாக கன­ம­ழை­யில் சிக்­கிக்­கொண்­டால் அப்­ப­டியே இருக்­கை­யில் அமர முடி­யாது. எனவே மாற்று உடை வைத்­துக்­கொள்­வது வச­தி­யாக இருக்­கும்.

பாதம் வரை தொடும் ஆடை­களை தவிர்ப்­பது நல்­லது. குறிப்­பாக பெண்­கள் முழு­நீள குர்த்தா, கவுன் அணி­வதை மழைக்­கா­லத்­தில் தவி­ருங்­கள். முட்­டிக்கு மேல் வரை உள்ள குர்த்தா, டாப் அணி­யுங்­கள். பெண்­கள் ஆங்­கிள் லென்த் லெங்­கின் பேண்ட் அணி­ய­லாம். இத­னால் சக­தி­கள் , கழிவு நீர் ஆடை­யில் படா­மல் தவிர்க்­க­லாம். பாதம் வரை தொடும் ஆடை­களை தவிர்ப்­பது நல்­லது. .

ரெயின் கோட்டை மழைக்­கா­லங்­க­ளில் மழை வர­வில்லை என்­றா­லும் எடுத்­துச்­செல்­லுங்­கள். எந்த நேரத்­தி­லும் மழை பெய்­ய­லாம். எனவே தயங்­கா­மல் உடல் முழு­வ­தும் மூடும் வகை­யி­லான ரெயின் கோட் வாங்­கு­வது நல்­லது. அதே­போல் நியான் அல்­லது வெளிச்­சம் எதிர்­வி­னை­யாற்­றும்  வகை­யி­லான ரெயின் கோட் வாங்­கு­வது நல்­லது. ஏனெ­னில் மழைக்­கா­லங்­க­ளில் அடிக்­கடி மின்­சா­ரம் துண்­டிக்­கப்­ப­டும். அந்த நேரத்­தில் நீங்­கள் நடந்து செல்­லும்­போது எதிரே வரும் நப­ருக்கோ, வண்­டிக்கோ உங்­களை எளி­தில் கண்­ட­றிய உத­வும்.

பெண்­கள் ஹீல்ஸ் போன்ற கால­ணி­களை தவிர்ப்­பது நல்­லது. நீர் புகாத பூட்ஸ் வாங்­கு­வது மழைக்­கா­லத்­தில் உத­வும் அல்­லது காலணி, ஷூவை மூடும் வகை­யி­லான வாட்­டர் புரூப் கவர் வாங்கி அணி­யுங்­கள். இத­னால் காலனி நனை­யாது என்­பதை விட சாக்­கடை நீர், சகதி காலில் படா­மல் தவிர்க்­க­லாம். இத­னால் நோய் தொற்று பர­வு­வ­தை­யும் தவிர்க்­க­லாம்.

அலு­வ­ல­கம், கல்­லூரி செல்­வோர் தங்­கள் பைகளை மழை­யில் நனை­யா­த­வாறு பாது­காக்க நீர் புகாத பைகளை பயன்­ப­டுத்­து­வது நல்­லது. தின­சரி வேலைக்கு எடுத்­துச்­செல்­லும் லாப்­டாப் பேகை மூடும் வகை­யி­லான தண்­ணீர் புகாத பை வாங்கி பயன்­ப­டுத்­துங்­கள். உங்­கள் செல்­போ­னை­யும் நீர் புகாத பை வாங்கி மூடுங்­கள். இத­னால் மழை­யி­னால் தேவை­யில்­லாத சிக்­கல்­களை தவிர்க்­க­லாம்.