கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 7–11–19

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019

கரெக்ட்டான பயன்பாடு!

நானும் அவ­ரும் பூங்­கா­விற்­குப் போனோம் என்ற வாக்­கி­யத்தை ஆங்­கி­லத்­தில் எப்­ப­டிக் கூறு­வீர்­கள்?

‘மீ அண்ட் ஹீ வென்ட் டூ த பார்க்’ (Me and he went to the park) என்று தவ­றா­கப் பேசக் கூடி­ய­வர்­கள் பலர் இருக்­கி­றார்­கள்.

ஆனால் ‘நான்’ என்று வரு­கிற போது ‘ஐ’ (I) என்று தான் வரும். ஆகவே ‘மீ’ (me) என்­ப­தற்­குப் பதில் ‘ஐ’ என்று கூற வேண்­டும்.

ஆனால் ஆங்­கில வாக்­கிய அமைப்­பில் ஒரு மரபு உண்டு. நானும் அவ­னும் என்று கூறும் போது, நான், அதா­வது ‘ஐ’ என்­பதை முத­லில் கூறக்­கூ­டாது என்­ப­து­தான் அந்த மரபு.

ஆகவே, ‘ஹீ’ அண்ட் ‘ஐ’ வென்ட் டூ த பார்க் (He and I went to the park) என்­ப­து­தான் ஆங்­கி­லத்­தில் சரி­யான வாக்­கி­யம்.

வேறு வாக்­கிய உதா­ர­ணம். ‘ஐ’ (I) என்­ப­தற்கு அடுத்து ஆம் (am) வரும், இஸ் (is), ஆர் (are) என்­பவை வராது என்­பது உண்­மை­தான்.

அதற்­காக, ‘நீங்­கள் முந்தி வேலை செய்த நிறு­வ­னத்­தில் எத்­தனை ஆண்­டு­கள் பணி­யாற்­றி­னீர்­கள்’ (How many years did you work in your previous company?) என்று கேட்­கிற போது, ‘ஐ ஆம் வர்க்dட் dதேர் ஃபார் ஃபோர் இயர்ஸ்’ (I am worked there for four years) என்று கூறக்­கூ­டாது. அப்­ப­டிச் செய்­தால்

இலக்­க­ணப் பிழை.

வர்க்dட் (worked) என்­பது வர்க் (work) என்ற நிகழ்­கால வினைச் சொல்­லின் கடந்த கால வடி­வம்.  அதற்கு முன் ஆம் (am) வரக்­கூ­டாது (ஆனால், ‘ஐ ஆம் வர்­கிங்’, I am working, ‘நான் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றேன்’ என்ற நிகழ்­கால தொடர்­வினை வாக்­கி­யத்­தில் வரும்).

ஐ வர்க்dட் இன் சிங்­கப்­பூர் ஃபார் ஃபைவ் இயர்ஸ் (I worked in Singapore for five years). நான் சிங்­கப்­பூ­ரில் ஐந்து வரு­டங்­கள்

பணி­யாற்­றி­னேன்.

‘ஐ dடான்ஸ்dட் இன் dடிலைட் வென் இண்d­­டியா வன் dத gகேம்’ (I danced in delight when India won the game). இந்­தியா ஆட்­டத்தை வென்­ற­போது, நான் சந்­தோ­ஷத்­தில் நட­னம் ஆடி­னேன். இது கடந்த கால நிகழ்ச்­சி­யைக் குறிப்­பி­டு­வ­தால் டான்ஸ் (dance) என்­ப­தன் கடந்த கால வடி­வ­மான dடான்ஸ்dட் (danced) பயன்­பட்­டி­ருக்­கி­றது. அதே போல் வின் (win) என்­ப­தன் கடந்த கால வடி­வ­மான வொன் (won) வாக்­கி­யத்­தில் பயன்­பட்­டி­ருக்­கி­றது.

‘Won’ மற்­றும் ‘one’ (ஒன்று) ஆகிய சொற்­க­ளின் உச்­ச­ரிப்பு ஒரே மாதி­ரி­யாக, ‘வொன்’ என்று தான் உள்­ளது.

இன்­னொரு உதா­ர­ணம். ஒரு­வர் தான் பணி­யாற்­றிய கம்­பெ­னி­யின் ஒரு முக்­கிய குறை­பாட்டை கூறி­னார்.

‘லோ ஸாலரி இஸ் வொன் ஆஃப் த மெயின் டிஸ்­அட்­வான்­டேஜ் இன் திஸ் கம்­பெனி’. Low salary is one of the main disadvantage in this company என்­றார். குறைந்த சம்­ப­ளம் தான் இந்த கம்­ப­னி­யில் ஒரு முக்­கி­ய­மான குறை­பாடு என்று பொருள்.

ஆனால் ‘one of the’ என்று வந்­தாலே அடுத்து வரும் பெயர்ச் சொல் பன்­மை­யில் வர­வேண்­டும். அப்­ப­டித்­தான் வரும்.

ஆகவே, மேற்­படி வாக்­கி­யத்­தில், ‘லோ ஸாலரி இஸ் வொன் ஆஃப் த மெயின் டிஸ்­அட்­வான்­டே­ஜஸ் இன் திஸ் கம்­பெனி’. Low salary is one of the main disadvantages in this company என்­ப­து­தான் சரி­யான வாக்­கிய அமைப்பு.

இந்த முறை­யில் சில வாக்­கிய

உதா­ர­ணங்­கள்:

‘எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி வாஸ் வொன் ஆஃப் த மோஸ்ட் ரெஸ்­பெக்­டெdட் சிங்g­­கர்ஸ் ஆஃப் அவர் டைம்ஸ்’. M.S.Subbulakshmi was one of the most respected singers of our times. நம்­மு­டைய காலத்­தில் எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி மிக­வும் மதிக்­கப்ட்ட பாட­கி­க­ளில் ஒரு­வ­ராக இருந்­தார்.

‘ஹீ இஸ் வொன் ஆஃப் மை பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்’. He is one of my best friends. என்­னு­டைய மிகச்­சி­றந்த நண்­பர்­க­ளில் அவன் ஒரு­வன்.

‘கப்­ப­லோட்­டிய தமிழ்ன் இஸ் வொன் ஆஃப் த பெஸ்ட் ஃபிலிம்ஸ் இன் விச் சிவாஜி ஆக்­டெட்’. ‘Kappalottiya Tamilan is one of the best films in which Sivaji acted’. சிவாஜி நடித்த மிகச்­சி­றந்த திரைப்­ப­டங்­க­ளில் ‘கப்­ப­லோட்­டிய தமி­ழன்’ ஒன்று.

‘திருக்­கு­றள் இஸ் வொன் ஆஃப் த gகிரே­டெஸ்ட் எதி­கல் வர்க்ஸ் ஆஃப் த வர்ள்dட்’. Tirukkural is one of the greatest ethical works of the world. உல­கத்­தின் அற­நூல்­க­ளில் மிகச் சிறந்த  நூல் திருக்­கு­றள்.

‘வொன் ஆஃப் த’ (one of the) என்று வரும் சொற்­தொ­ட­ருக்­குப் பின் வரும் பெயர்ச் சொல், பன்­மை­யில் தான் அமைந்­தி­ருக்­கும் என்­பதை மன­தில் நன்­றாக நிறுத்­திக்­கொள்­ள­வும்.

இன்­னொரு எடுத்­துக்­காட்டு. ஒரு நிறு­வ­னத்­தில் சேர வேண்­டும் என்ற ஆவ­லோடு, இண்­டர்­வி­யூ­வின் போது ஒரு­வர் கூறி­னார், ‘ஐ ஆம் வெரி இண்­ட­ரெஸ்­டிங் டு ஜொயின் திஸ் கம்­பெனி’ என்று. ஆனால், I am very interesting to join this company என்­பது தவறு.

‘இண்­டெ­ரெஸ்­டிங்’ (interesting) என்­பது ஒரு அடை­மொழி. இந்­தப் புத்­த­கம் மிக­வும் ‘இண்­டெ­ரெஸ்­டிங்கா’ இருக்­கி­றது என்று கூற­லாம். கவ­னத்­தைத் தக்க வைத்­துக்­கொள்­கிற, ஈர்க்­கிற புத்­த­கம் என்று பொருள். இந்த= படம் மிக­வும் ‘இண்­டெ­ரெஸ்­டிங்gகா’ இருக்கு என்று கூற­லாம். ஆனால் ‘ஐ ஆம் வெரி இண்­டெ­ரெஸ்­டெdட்’ என்று கூற­வேண்­டும். I am very interested to join this company.  ஐ ஆம் வெரி இண்­டெ­ரெஸ்­டெdட் to join this company என்று கூற­வேண்­டும்.

ஒரு­வர் நன்­றாக ஆங்­கி­லம் பேசி­னார். அவர் யாரி­டம் ஆங்­கி­லம் கற்­றார் என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள, ‘ஹூ டீச்ட் யூ இங்­கி­லிஷ்’ என்று இன்­னொ­ரு­வர் கேட்­டார்.

‘டீச்’ என்ற வினைச் சொல்­லின் கடந்த கால வடி­வம் ‘டாட்’ (taught), டீச்ட்d (teached) அல்ல. ஆகவே இந்­தக் கேள்வி, ‘ஹூ டாட் யூ இங்­கி­லிஷ்?’  (Who taught you English?) என்­று­தான் வர­வேண்­டும்.

‘அவன் பாஸ் செய்­தானா’ என்று கேட்க நினைத்த ஒரு­வர், dடிdட் ஹீ பாஸ்ட்d (Did he passed?) என்று கேட்­டார்.

இப்­படி dடிdட் (did) என்­பதை முன்னே வைத்­துக் கேட்­கப்­ப­டும் கேள்­வி­யில், ‘dடிdட் ஹீ பாஸ்’ (Did he pass?) என்று தான் வர­வேண்­டும்.

அவன் சாப்­பிட்­டானா? dடிdட் ஹீ ஈட்?

அவன் சென்­றானா? dடிdட் ஹீ கோ?

அவன் வந்­தானா? dடிdட் ஹீ கம்?

dடிdட் யூ அன்d­­டர்ஸ்­டான்dட் …புரிந்­து­கொண்­டீர்­களா? புரிந்­து­கொண்டு மீண்­டும் மீண்­டும் பழ­கி­னால் நல்ல ஆங்­கி­லம் நமுக்கு வச­மா­கி­வி­டும். சித்­தி­ர­மும் கைப்­ப­ழக்­கம் சிறந்த ஆங்­கி­ல­மும் நாப்­ப­ழக்­கம்…

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in