பிசினஸ்: குடை விற்றே லட்சாதிபதியானார்...! - – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019

திருவிழாக்­க­ளில் இது காணப்­ப­டும். புகைப்­ப­டக் கலை­ஞர்­கள் இதைப் பயன்­ப­டுத்­து­வார்­கள். தாக்­கு­த­லுக்கு ஒரு ஆயு­த­மா­கவோ அல்­லது தற்­காப்­புக்கு உரிய கேட­ய­மா­கவோ கூடப் பயன்­ப­டும். இந்த உப­க­ர­ணம் பற்­றிய குறிப்பை முதன் முத­லாக 24 நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் காண முடி­கி­றது. அப்­போது அது ‘ஸோஹூ லி’ எனக் குறிக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வைப் பொருத்­த­வ­ரை­யில், மகா­பா­ர­தத்­தில் ஜம்­தக்னி பற்­றி­யும் அவ­ரது பதி விரதை ரேணுகா பற்­றி­யும் பேசும் போதும் இது பற்­றிக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது... இப்­போது அதற்­குப் பெயர் குடை. மழை­யி­லி­ருந்­தும் வெயி­லி­லி­ருந்­தும் பாது­காக்­கும் ஒரு சாத­னம். பிர­தீக் தோஷி­யின் குடை பற்­றிய பார்வை பிற­ரது பார்­வை­யி­லி­ருந்து மாறு­பட்­டது. அவ­ருக்கு குடை வர்த்­த­கத்­திற்­கான வாய்ப்­பாக இருந்­தது. இரண்டே மாதங்­க­ளில் குடையை விற்றே ஒரு­வர் 30 லட்­சத்­திற்­கும் மேல் சம்­பா­திக்க முடி­யு­மா­னால், பிற­கென்ன பிர­தீக் அதை வர­வேற்­கத்­தானே செய்­வார். மழையை ஈடு கொள்ள முடி­யாத ஒரு உற்­சா­கத்­து­டன் தழு­விக் கொள்­கி­றார் பிர­தீக். ப்ரதீக், தொழில்­மு­னை­வ­ராக பல்­வேறு வளைவு நெளி­வும் மேடு பள்­ளங்­க­ளும் உள்ள பாதை­யைக் கடந்­தி­ருக்­கி­றார். சீக்கி சன்க் நிறு­வ­னத்­தின் (அவ­ரது குடை விற்­பனை நிறு­வ­னம்) வெற்றி ரக­சி­யத்தை அறிந்து கொள்­ள­வோம்

சீக்கி சன்க் நிறு­வ­னர் பிர­தீக் தோஷி நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது 2014ல்தான். சீக்கி சன்க்கை ப்ரதீக் தொடங்­கி­னார். ஒரு சில குடை­களை விற்­பனை செய்­தார். அதற்­குக் கிடைத்த பெரும் வர­வேற்­பைத் தொடர்ந்து, பல்­வேறு டிசைன்­கள் போட்ட வித்­தி­யா­ச­மான குடை­களை, வாங்­கக் கூடிய விலை­க­ளில், விற்­பனை செய்ய ஒரு நிறு­வ­னத்­தைத் தொடங்க முடிவு செய்­தார். முது­நி­லைப் பட்­டப் படிப்பை முடித்­த­தும் இதை தொடங்­கி­னார். அதுவே அவ­ரது வேலை வாய்ப்­பா­க­வும் ஆனது.

“நான் இந்த முடி­வுக்கு வந்­த­தற்கு இரண்டு கார­ணங்­கள். ஒன்று இதற்கு முன்பு யாரும் இதைச் செய்­ய­வில்லை. சந்­தை­யில் ஏரா­ள­மான வாய்ப்பு திறந்து கிடந்­தது. மற்­றொன்று யாரோ ஒரு­வர் பணக்­கா­ரர் ஆவ­தற்கு சலிப்­பூட்­டும் ஒரே மாதி­ரி­யான வேலை­யைத் தூக்­கிச் சுமக்க வேண்­டி­ய­தில்லை” என்­கி­றார் பிர­தீக்.

ஆரம்­பத்­தில் இந்த யோச­னை­யைச் சொன்ன போது, குடை­களை விற்று பிழைப்பு நடத்­து­வதா என்று அவ­ரது நண்­பர்­கள் பலர் அவ­ரது முது­குக்­குக் பின்­னால் சிரித்த சம்­ப­வங்­களை இப்­போது நினைவு கூர்­கி­றார். அவ­ரது எம்­பிஏ நண்­பர்­க­ளெல்­லாம் உட்­கார்ந்த இடத்­தில் நல்ல சம்­ப­ளம் வாங்­கிக் கொண்­டி­ருந்த போது, குறைந்த மூல­த­னத்­தைப் போட்டு தொழி­லைத் தொடங்கி விட்டு, நக­ரம் முழு­வ­தும் சுற்றி வர வேண்­டி­யி­ருந்­தது. அவ­ரது சேமிப்­பில் இருந்த ஒரு லட்­சத்து 35 ஆயி­ரம் ரூபாய்­தான் அவ­ரது ஆரம்ப முத­லீடு.

இந்­தப் பணம் அவ­ரது கல்­லூரி நாட்­க­ளில் மாண­வர்­க­ளுக்­குப் பாடம் சொல்­லிக் கொடுத்­துச் சம்­பா­தித்­தது. குடை­களை வடி­வ­மைக்­க­வும் தயா­ரிக்­க­வும் ஒரு இணைய தளத்தை உரு­வாக்­க­வும் அவர் அந்­தப் பணத்­தைச் செலவு செய்­தார். யோசனை நல்ல யோச­னை­தான். ஆனால் பணம் சம்­பா­திப்­பது கொஞ்­சம் கடி­ன­மா­கவே இருந்­தது. 500 குடை­க­ளைத் தயா­ரித்து, அவ­ரது நண்­பர்­கள் மற்­றும் குடும்­பத்­தி­னர் மூலம் விற்­பனை செய்­தார். சீக்கி சன்க்கின் குடை டிசைன்­கள் சீசன் முடிந்­த­தும் நான் வேலை இல்­லா­த­வ­னாகி விட்­டேன். டைம்­பாஸ் முடிந்து விட்­டது. ஏதா­வது உருப்­ப­டி­யான வேலை­யைப் பார் என்று நண்­பர்­கள் சொல்ல ஆரம்­பித்து விட்­ட­னர். என் நண்­பர்­க­ளெல்­லாம் உட்­கார்ந்த இடத்­தில் சம்­ப­ளம் வாங்­கிக் கொண்­டி­ருக்க நான் மூல­த­னம் போட்டு, கஷ்­டப்­பட்டு, எல்­லா­வற்­றை­யும் இழந்து சம்­பா­திக்க வேண்­டி­யி­ருந்­தது.

அது­வும் அவர்­கள் இரண்டு மாதத்­தில் பெறும் சம்­ப­ளத்தை நான் சம்­பா­திக்க எனக்கு ஆறு மாதங்­கள் ஆனது. நாட்­கள் போகப் போக எனக்­கும் சந்­தே­கம் வந்­தது. நாம் உருப்­ப­டி­யான வேலை­யைத்­தான் பார்க்­கி­றோமா? தற்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி விட்­டது. எம்­பிஏ படித்த ஒரு­வர் இரண்டு ஆண்­டு­க­ளில்

சம்­பா­திப்­பதை, பிர­தீக் மூன்றே மாதத்­தில் குடை­களை விற்றே சம்­பா­திக்க ஆரம்­பித்து விட்­டார். ஒரு கச்­சி­த­மான குடை­யைத் தயா­ரிக்க வேண்­டு­மா­னால், அதில் உள்ள கைப்­பிடி, பேனல்­கள், துணி, பிரேம், டிசைன், தையல் என அத்­தனை அம்­சங்­க­ளும் சரி­யாக இருக்க வேண்­டும். பிர­தீக் தனக்­குத் தேவை­யான பிரேம்­களை ராஜஸ்­தா­னில் இருந்து வர­வ­ழைத்­துக் கொள்­கி­றார். உள்­ளூ­ரில் துணியை வாங்­கிக் கொள்­கி­றார். டிசைன் பிரின்ட் செய்­வது மற்­றும் தைக்­கும் வேலைக்கு உள்­ளூ­ரில் கான்ட்­ராட்­டர்­களை அமர்த்­தி­யுள்­ளார். ஒரு வெளிச்­சம் குறைந்த அறை­யில், குடை­க­ளில் டிசைன் செய்ய பிரின்­ட­ரு­டன் உதவி செய்­வ­தில் இருந்து உரிய நேரத்­திற்கு தயா­ரிப்பை முடிக்க, 10 கிலோ துணியை ஒரு கிலோ மீட்­டர் வரை­யில் தூக்­கிச் சுமப்­பது வரை­யில் நான் இந்­தத் தொழிலை வளர்க்க நான் நிறை­யப் பாடு­பட வேண்­டி­யி­ருந்­தது என்­கி­றார் பிரதீக்..

நாளொன்­றுக்கு 400 குடை­கள் தேவை என்­னும் அள­வுக்கு ஆர்­டர் உயர்ந்­தது. தேவை உயர உயர, அதை நிறை­வேற்­று­வ­தற்கு தங்­க­ளி­டம் உள்ள குறைந்த பணி­யா­ளர்­கள் நிறைய கஷ்­டப்­பட வேண்­டி­யி­ருந்­தது என்­கி­றார் பிரதீக்.

குடை­களை பேக் செய்­வது, தயா­ரித்த குடை­க­ளைச் சரி­பார்ப்­பது, பில் போடு­வது என்று அத்­தனை வேலை­க­ளை­யும் செய்­வது கஷ்­ட­மாக இருந்­தது என்­கி­றார் அவர். பேக் செய்­யும் பணி நடக்­கி­றது வெவ்­வேறு துறை நிபு­ணர்­கள் திரு­ம­ணம் செய்து கொண்­ட­தைப் போலத்­தான் இது. சுல­ப­மா­ன­தில்லை ஆனால் மதிப்பு மிக்­கது. ஒரு இணைய வர்த்­தக நிறு­வ­னம் எப்­படி செயல்­ப­டு­கி­றது என்­பதை பல­பே­ரி­டம் கேட்­டுத் தெரிந்து கொண்­டோம். என்­கி­றார் அவர்.

மாண­வர்­கள் பெரும்­பா­லும் தங்­க­ளது பை சார்ட்­டி­லும் எக்­செல் சீட்­டி­லுமே தேங்கி விடு­கின்­ற­னர். உண்­மை­யில் படிப்பு என்­பது அதற்கு வெளி­யே­தான் இருக்­கி­றது என்று கரு­து­ப­வர் பிரதீக். அப்­துர் ரெஹ்­மான் தெரு­வில் உள்ளே நுழைந்து பாருங்­கள். அங்கு கிடைப்­ப­தெல்­லாமே வித்­தி­யா­ச­மான அனு­ப­வங்­கள்­தான். மனி­தர்­க­ளின் நட­வ­டிக்கை, ஒரு­வ­ரி­டம் எப்­ப­டிப் பேசு­வது என்ற கலை, தனித்­து­வத்­தின் மதிப்பு, திரும்­பத் திரும்ப சலிக்­கா­மல் வற்­பு­றுத்­து­வ­தால் கிடைக்­கும் பலன் என அங்கு நிறை­யக் கற்­றுக் கொண்­டேன்.

எல்­லா­வற்­றிற்­கும் மேலாக நான் கற்­றுக் கொண்­டது.. கீதை­யில் இருந்து நான் அடிக்­கடி மேற்­கோள் காட்­டும் இந்த வரி­க­ளைத்­தான். “கட­மை­யைச் செய் பலனை எதிர்­பா­ராதே” சீக்கி சன்க் ஏழு பேர் குழு­வைக் கொண்­டது. இரண்டு எம்­பிஏ பட்­ட­தா­ரி­கள், ஒரு அக்­க­வுன்ட்­டன்ட், குடை­களை பரி­சோ­திக்­க­வும் பேக் செய்­ய­வும் அக்­க­றை­யு­டன் வேலை செய்­யும் இரண்டு பேர். இவர்­கள்­தான் சீக்கி சன்க் குழு.

தண்­ணீர் ஒழு­கா­மல் இருக்­குமா, குறை­பாடு இல்­லா­மல் இருக்­கி­றதா என்று ஒவ்­வொரு குடை­யும் முழு­மை­யாக பரி­சோ­திக்­கப்­ப­டு­கி­றது. சீக்கி சன்க்­கில் குடை­க­ளின் விலை குறை­வு­தான். சந்­தைப்­ப­டுத்­த­லுக்கு செலவு கிடை­யாது பிரதீக்­கைப் பொருத்­த­வ­ரை­யில் அவ­ரது மார்க்­கெட்­டிங்­கில் போட்­டோ­கி­ராபி முக்­கி­யப் பங்கு வகித்­த­தா­கச் சொல்­கி­றார். ஐம்­பது சத­வீத விற்­ப­னைக்கு பொரு­ளின்

தர­மும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நற்­சான்­றும்­தான்

கார­ணம் என்­கி­றார் அவர்.

விற்­ப­னையை விரிவு படுத்த சீக்கி சன்க் தனது வாடிக்­கை­யா­ள­ருக்கு பரிசு வழங்­கும் உத்தி ஒன்­றைக் கையாள்­கி­றது. பிற வாடிக்­கை­யா­ள­ரு­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பரி­சு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஊட­கங்­க­ளில் ஒரு பொரு­ளைப் பற்றி எழு­து­வது அதன் விற்­ப­னை­யில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. ஆனால் தனது பொரு­ளைப் பற்றி யாருக்­கா­வது பணம் கொடுத்து எழு­தச் செய்­வதை பிர­தீக்

விரும்­பு­வ­தில்லை.

பிர­தீக் இணைய வழி வர்த்­த­கத்­தைத்­தான் வலி­யு­றுத்­து­கி­றார். இணைய தளப் பட்­டி­ய­லில் உங்­கள் பொருளை சேர்த்த உட­னேயே சந்­தைப்­ப­டுத்­தல் ஆர­ம­பித்து விடு­கி­றது. தேடும் குறிச் சொற்­கள் முக்­கி­யம். நமது பொருளை எப்­ப­டித் தேடி­னா­லும் கிடைக்­கும் விதத்­தில் அதற்கு நூற்­றுக்­கும் மேற்­பட்ட குறிச் சொற்­க­ளைக் கொடுத்து வைக்க வேண்­டும். அவற்­றில் சில எழுத்­துப் பிழை­க­ளு­டன் கூட இருக்­கும். நமது பொரு­ளைச் சந்­தைப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணித்­துக் கொண்டே இருக்க வேண்­டும். சென்ற ஆண்டு  மே 27ம் தேதி நான் ரொம்­ப­வும் பதற்­றத்­தில் இருந்­தேன். அப்­போ­து­தான் எனது குடையை அமே­சா­னின் விற்­ப­னைப் பட்­டி­ய­லில்

சேர்த்­தேன். எனது மாமா­வி­டம் சொல்லி, அமே­சான் மூலம் குடையை ஆன்­லை­னில் வாங்­கச் சொல்­லி­யி­ருந்­தேன். அந்த நேரத்­தில் அது 20வது பக்­கத்­தில் இருந்­தது. மூன்றே வாரத்­திற்­குள் அது முதல் பக்­கத்­தில் வந்­த­தோடு, அமே­சா­னில் அதி­கம் விற்ற குடை நம்­மு­டை­யு­து­தான் என்ற பெய­ரைப் பெற்­றது என்­கி­றார் ப்ரதீக் பெரு­மை­யு­டன்.

உங்­கள் பொருளை வாங்­கச் சொல்லி ஒரு­போ­தும் சொல்­லா­தீர்­கள் என்­கி­றார் பிரதீக். அதற்கு பதி­லாக உங்­க­ளின் தர­மான பொரு­ளைக் காட்­சிப் படுத்­துங்­கள். உங்­கள் பொருள் எந்­தச் சூழ்­நி­லைக்­குத் தேவையோ அந்­தச் சூழ்­நி­லையை விரும்­பச் செய்­யுங்­கள் என்­கி­றார் அவர். சீக்கி சன்க், மக்­களை மழையை விரும்­பச் செய்­கி­றது. மழை­யு­டன் அவர்­க­ளது இனி­மை­யான நினை­வு­களை அசை போடத் தூண்­டு­கி­றது. மழை­யாய்க் குவிந்த விற்­பனை தற்­போது சீக்கி சன்க், பிலிப்­கார்ட், அமே­சான், ஸ்நாப்­டீல் ஆகிய இணை­ய­த­ளங்­க­ளி­லும் மற்­றும் தனது சொந்த இணை­ய­த­ளத்­தி­லும் விற்­பனை செய்­கி­றது.

இது தவிர மும்­பை­யில் பாந்த்ரா, மாதுங்கா, பிரீச்­கேண்டி, சர்ச்­கேட் ஆகிய இடங்­க­ளில் உள்ள ஒரு சில சில்­லறை விற்­ப­னைக் கடை­க­ளி­லும் விற்­பனை நடக்­கி­றது. இந்த ஆண்­டின் துவக்­கத்­தில் 1000 குடை­கள் விற்­பனை செய்­வது என இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்­த­னர். ஆனால் இதற்­குள்­ளா­கவே 7 ஆயி­ரம் குடை­க­ளுக்கு மேல் விற்­றுத் தீர்ந்து விட்­டது. பீகார், சத்­தீஸ்­கர், ஒடிஸ்ஸா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் உள்ள இரண்டு மற்­றும் மூன்­றாம் நிலை நக­ரங்­க­ளில் மட்­டுமே 40 சத­வீத விற்­பனை நடந்­துள்­ளது. பெரும்­பா­லான குடை­கள் மறு விற்­ப­னை­யா­ளர்­கள் மூல­மா­கத்­தான் நுகர்­வோ­ருக்கு விற்­ப­னை­யா­கி­யுள்­ளன. அவர்­கள் இணைய தளம் உள்­ளிட்ட சந்­தை­க­ளில் மொத்­த­மாக வாங்கி சில்­ல­றை­யாக விற்­கின்­ற­னர்.

இந்த சீசன் முடி­வில் எப்­ப­டி­யும் விற்­பனை எண்­ணிக்கை 10 ஆயி­ரத்­தைத் தொட்டு விடும் என எதிர்­பார்க்­கி­றார் பிர­தீக். நிறு­வ­னம் லாப­க­ர­மாக இயங்­கு­கி­றது. ஆரம்­பத்­தில் குடைக்­குத் தேவை­யான உதி­ரி­பா­கங்­கள் விற்­பனை செய்­ப­வர்­க­ளி­டம் ஒரு குறிப்­பிட்ட தொகையை மட்­டுமே கொடுத்து விட்டு மீதிப்­ப­ணத்தை குடை­களை விற்­றுத் தரு­வ­தாக ஒப்­பந்­தம் செய்து கொண்­டி­ருந்­தது சீக்கி சன்க். அந்த நேரத்­தில் நடை­முறை மூல­த­னத்­தில் இருந்த பற்­றாக்­கு­றையை இப்­ப­டித்­தான் சரிக்­கட்­டி­னார்­கள்.

வெள்ளை வய­லில் ஊதாப் பசு­வா­கத் தோன்­றுங்­கள் சீக்கி சன்க் ஒரு நேரத்­தில் ஏதே­னும் ஒரே ஒரு விஷ­யத்­தில் மட்­டும் கவ­னம் வைக்­கி­றது. கடந்த வரு­டத்­தில் முன்­மா­தி­ரி­யாக ஒரு சில தயா­ரிப்­பு­களை கொண்டு வந்­தது. அவற்றை இந்த ஆண்டு தீபா­வ­ளிக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது. தயா­ரிப்­பு­க­ளின் எண்­ணிக்­கையை விரிவு படுத்த வேண்­டும் என்­பதை ப்ரதீக் புரிந்­தி­ருக்­கி­றார். சீக்கி சன்க் பணி­களை விரும்­பக் கூடிய முத­லீட்­டா­ளர்­களை எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார். ஒரு கூட்­டத்­தில் ஒரு பத்­துப் பேர் வழக்­க­மான அதே கருப்­புக் கலர் குடை­யைப் பிடித்­துக் கொண்­டி­ருக்­கும் போது பதி­னோ­ரா­வது நபர் சீக்கி சன்க்­கின் மஞ்­சள் நிறக் குடை­யைப் பிடித்­துக் கொண்­டி­ருந்­தால், நிச்­ச­யம் அது உங்­க­ளுக்கு புன்­ன­கையை வர­வ­ழைக்­கும்.

எங்­கள் அனைத்­துத் தயா­ரிப்­பு­க­ளுக்­கும் நாங்­கள் இதைத்­தான் செய்ய விரும்­பு­கி­றோம் என்­கி­றார் பிர­தீக். புதிய பணி­யா­ளர்­களை அமர்த்தி, நிறு­வ­னத்தை விரி­வாக வளர்த்து வெள்ளை வய­லில் ஒரு ஊதா நிறப் பசு போல தனித்­துத் தெரிய ஆசைப்­ப­டு­கி­றார் பிரதீக். நம்­பிக்கை நிறைந்த பிர­தீக் பின்­வ­ரு­மாறு முடிக்­கி­றார்: “வழக்­க­மான ஒரு காபி மக் அல்­லது ஒரு டீ சர்ட்டை நாங்­கள் விற்­பதை நீங்­கள் ஒரு­போ­தும் பார்க்க முடி­யாது. நிறை­யப் பேர் அதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். அதே விஷ­யத்­தைச் செய்­வ­தற்கு எங்­கள் நேரத்தை வீண­டிக்க நாங்­கள் விரும்ப மாட்­டோம். உண்­மை­யான பிரச்­னை­க­ளுக்கு எங்­கள் படைப்­பாற்­றல் மூலம் நாங்­கள் தீர்வு காண்­போம்.” என்­கி­றார்.