வாழ வைக்கும் வனிதா!

பதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2019

பிரபல சரிகம இந்தியா லிமிடெட் நிறுவன தயாரிப்பில் வளர்ந்து வரும் ‘சந்திரலேகா’ சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வருகிறது.

‘பிக்  பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு புகழ் வனிதா விஜயகுமார் இதில் புதிதாக இணைந்திருக்கிறார். பெரிய திருப்பம் தரக்கூடிய கேரக்டரில் நடிகை வனிதா விஜயகுமாராகவே அவர் வருவது ஸ்பெஷல். அவர் நடிக்கும் முதல் சீரியல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரா, சஞ்சய் ஆகியோரின் வாழ்க்கையை புரட்டி போடும் வகையில் புயலொன்று கிளம்புகிறது. அந்த பிரச்னையை ‘சரி’ பண்ணி அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் கேரக்டர் வனிதாவுக்கு!

குமரேசன், வள்ளிமுத்து இருவரும் திரைக்கதை அமைக்க, குரு. சம்பத்குமார் வசனம் எழுத, கே.எஸ். உதயசங்கர் ஒளிப்பதிவு செய்ய, டைரக்ட் செய்கிறார் ஆனந்த்பாபு. பிரின்ஸ் இமானுவேல் கிரியேட்டிவ் ஹெட்டாக இயங்குகிறார். தயாரிப்பு நிறுவனத்தின் துணை தலைவர் – பி.ஆர். விஜயலட்சுமி.