‘திருக்குறள் திலகம்’ யார்யார்?

பதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2019

ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கும் ‘குறளோடு விளை யாடு - சீசன் 2’ புதிய நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகிறது. தமிழ் ஆர்வம் உள்ள பள்ளி – கல்லுாரி மாணவர்களுக்காக - திருக்குறள் சார்ந்த மாபெரும் அறிவார்ந்த விளையாட்டு நிகழ்ச்சியாக இது விளங்குகிறது.

பூன்பன் மீடியா சார்பாக துரை நாகராஜன் இயக்க, ஆர்த்தி, கிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 24, 2020 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

ஸ்ரீராம் குழுமம், நெல்லை, சென்னை,  புதுச்சேரி, மதுரை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலுார் ஆகிய 10 மையங்களில் திறமைமிக்க மாணவர்களைக் கண்டறியும் முதல் கட்ட போட்டியை நடத்தியது. திருக்குறளை மையமாகக் கொண்ட இந்தத் போட்டியில் மொத்தம் 1695 மாணாவர்கள் கலந்து கொண்டனர். இறுதி சுற்று, பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடத்தப்பட்டது.

இதில் 10 மையங்களிலிருந்து வெற்றி பெற்ற 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஜூனியர், சீனியர், கல்லுாரி என மூன்று பிரிவுகளிலும் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் ‘திருக்குறள் திலகம்’ பட்டம் சூட்டப்பட்டனர்.