ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 6–11–19

பதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2019

போட்டி பாடலில் நட்பு தெரியும்!

(சென்ற வார தொடர்ச்சி...)

“இசை ஒரு பெருங்­க­டல்.. நான் செய்­தது, ஒரு சிப்­பி­யில் கொஞ்­சம் அள்­ளி­யது மட்­டுமே” – - இது இளை­ய­ராஜா சொன்­னது. இவர் சிப்­பி­யில் அள்­ளி­ய­வற்­றி­லேயே நாம் ரசிக்­கா­மல் விட்­டது எத்­த­னையெ­த்­தனை?

அப்­ப­டி­யான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்­வப்­போது பார்க்­க­லாம். இதோ ஒன்­பது பாடல்­கள். இவற்­றில் ஒரு பாட­லை­யா­வது ‘அட.. இப்­படி ஒரு பாட்டா.. எப்­படி மிஸ் பண்­ணி­னோம்!’ என்று நினைப்­பீர்­கள். சில பாட்­டு­க­ளில், ‘ப்ச்.. இதெல்­லாம் எனக்­குத் தெரி­யும்ப்பா’ என்­றும் நினைப்­பீர்­கள்.

1. வானம்­பாடி கூடு தேடும்.. இந்த நேரம் என்ன பாடும்?

‘முஸ்­தபா முஸ்­தபா’ ரக கல்­லூ­ரிப்­பா­டல். 1984ல் வெளி­யான 'தலை­யணை மந்­தி­ரம்' என்ற படத்­தில், இளை­ய­ராஜா இசை­யில், இளை­ய­ரா­ஜாவே பாடிய பாடல். பாண்­டி­யன் நடித்­தி­ருக்­கி­றார். கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்­டிய பாடல். ராஜா­வின் பெரும்­பா­லான பாடல்­கள் ‘கண்ணை மூடிட்­டுக் கேட்­க­லாம்ப்பா’ ரகம்­தான். ஆனால், இங்கே எந்த அர்த்­தம் என்­பது பாடலை கேட்­டால் தெரி­யும். அரு­மை­யான மெலடி.  ‘முக­வரி வாங்­கிக் கொண்­டோம்.. முகங்­க­ளைத் தாண்­டிச் சென்­றோம்’ என்ற அரு­மை­யான வரி­கள் எல்­லாம் உண்டு. சர­ணத்­தில் ராஜா­வின் ரம­ண­மா­லை­யின் ‘சதா சதா உனை நினைந்து நினைந்து ’ பாடலை நினை­வு­ப­டுத்­தும் மெட்டு.  இரண்­டா­வது இடை­யி­சை­யின் புல்­லாங்­கு­ழல்.. டிபிக்­கல் ராஜா டிரீட்!

2.   நீர்­வீழ்ச்சி  தீ முட்­டுதே.. தீ கூட குளிர்­கா­யுதே...

'என்­னது.. இந்த மெட்­டுல எத்­தனை பாட்­டு­தான் இருக்கு!' என்று உங்­க­ளில் பெரும்­பா­லோர் ஆச்­ச­ரி­யப்­ப­டப்­போ­வது உறுதி. ஆம்.. ‘சங்­கத்­தில் பாடாத கவிதை’ பாட­லின் அதே  மெட்டு. அறி­வு­மதி வரி­கள். அதெப்­படி ஒரே மெட்டு ரெண்டு படத்­துக்கு என்­றால், 'மலை­யாள தும்பி வா' பாடல் எல்­லார் மன­சை­யும் கொள்­ளை­ய­டிக்க, ‘அதே மெட்­டுல போடுங்க’ என்று கேட்­டி­ருப்­பார்­கள் போல. அப்­படி டிரா­வ­லான மெட்டு, தெலுங்­கில் போடப்­ப­டு­கி­றது. அந்­தப் படம், 1988ல் 'கண்ணே கலை­மானே' என்ற பெய­ரில்  டப்­பிங் ஆக, நமக்கு லக்கி பிரை­சாக...  அதே மெட்­டில்   இன்­னொரு பாட்டு.  இது­வும் எஸ். ஜான­கி­யின் மெஸ்­ம­ரி­சக் குரல்­தான். அறி­வு­ம­தி­யின் வரி­கள் அத்­தனை அழகு. இடை­யி­சை­க­ளில் அதே சங்­கத்­தில் பாடாத பாட­லின் வாச­னை­தான். இந்­தப் பாட­லின் மெட்­டுக்கு, எத்­தனை வித­மா­கப் போட்­டா­லும் கேட்­க­லாம்­தானே.. அந்த தைரி­யம்! ம்ம்ம்.. நடத்­துங்க ராஜா.. நடத்­துங்க!  

3. தூரத்­தில் நான் கண்ட உன் முகம்...

'நிழல்­கள்' (1980) படத்­தில், ''இது ஒரு பொன்­மா­லைப் பொழுது,'' ''மடை­தி­றந்து,'' ''பூங்­க­தவே'' பாடல்­கள்­தான் ஹிட். ஆனால் இது, ராஜா ரசி­கர்­கள் பல­ரின் பேவ­ரிட்.   என்ன ஒரு பாடல் இது! எஸ். ஜான­கிக்கு குரல் அப்­ப­டியே இருந்­தி­ருக்­கக்­கூ­டாதா என்று நினைக்க வைக்­கும் ஆரம்­பம்.  பல்­லவி முடிந்து, முதல் இடை­யி­சை­யில் வய­லின்­கள் விளை­யாட்டு. தொடர்ந்து கோரஸ். வீணை. இசைக்­கோர்ப்பு என்­பது என்­ன­வென்று பாடமே எடுக்­க­லாம். சர­ணத்­தில் ஜான­கி­யின் ஆலாப், கண்­மூ­டிக் கேட்­டால் கண்­ணீரே வரும். ‘மீரா பாடும் இந்­தப் பாட­லைக் கேட்டு வர­வில்லை என்­றால்..  என்­னடா கண்­ணன் நீ’ என்று கேட்­கத் தோன்­றும். இரண்­டாம் இடை­யிசை கொஞ்­சம் பதட்ட­மான ஸ்பீட் எடுத்து, மீண்­டும் வய­லி­னில் அமை­தி­யு­றும். இரண்­டாம் சர­ணம்.. வேறு மெட்டு. எங்­கெங்கோ திரிந்து, அமை­தி­யாகி... வேற லெவல் பாட்டு பாஸ் இது!

4. வழி­விடு வழி­விடு என் தேவி வரு­கி­றாள்...

ராஜா­வும், எஸ்.பி.பி-யும் சேர்ந்து பாடிய பாடல். 'பாட்டு பாடவா' (1995) படம். இளை­ய­ரா­ஜா­வின் குரல்... ரகு­மா­னுக்கு! ஆம், நடி­கர் ரகு­மான் பாஸ். அப்ப, எஸ்.பி.பி. குரல் யாருக்கு என்று தெரி­யா­த­வர்­கள் கேட்­க­லாம். எஸ்.பி.பிக்­குத்­தான். அவ­ரும், ரகு­மா­னும் இணைந்து நடித்த படம். பாட­லின் சூழ­லில் ராஜா­வுக்­கும், எஸ்.பி.பிக்­கும் போட்டி இருக்­கும். ஆனால், பாட­லில் இரு­வ­ருக்­கு­மான நட்பு தெரி­யும். அப்­படி ஒரு அசால்ட்­டாக, தோழ­மை­யாக, நேர்த்­தி­யாக பாடி­யி­ருப்­பார்­கள் இரு­வ­ரும். இசை­யைப்   பிரிக்­கும் டெக்­னிக்­கல் விற்­பன்­னர்­கள் இருந்­தால்..

முதல் சர­ணத்­தின் தபே­லாவை பிரித்­துக் கேளுங்­கள். பித்­துப் பிடிக்க வைக்­கும். கடைசி பல்­ல­வி­யின்­போது, ‘வில..கிடு’ என்­றொரு சங்­கதி போடு­வார்

எஸ்.பி.பி. ப்ச்.. தெய்­வமே!