ஸ்லோகமும் பொருளும்!

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2019

கங்காதரம் கரகளம் கண்டாகர்ண ஸமர்சிதம்!

டங்க ஹஸ்தம் டாதி மந்திர வேத்யம் வைத்யம் மஹாருஜாம்!!

(கவுதம முனிவரின் ஜம்புநாத ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: கங்கையைத் தாங்கியவரே! கழுத்தில் விஷத்தைக் கொண்டவரே! கண்டா கர்ணனால் பூஜிக்கப்படுபவரே! டங்கம் என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவரே! டாதி என்னும் மந்திரத்தால் அறியத்தக்கவரே! நோய் போக்கும் வைத்தியநாதரே! சிவபெருமானே! உம்மை போற்றுகிறேன்.


பாடலும் பொருளும்!

பிரமன் மால் அறியாத பெருமையன்

தரும மாகிய தத்துவன் எம்பிரான்

பரமனார் உறை பாண்டிக் கொடுமுடி

கரும மாகத் தொழு மட நெஞ்சமே!

(திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்)

பொருள்: அறியாமையில் வாழும் மனமே! பிரம்மனும், திருமாலும் அறிய முடியாத பெருமைமிக்கவன் சிவன். தருமமே வடிவான அவன், அரிய தத்துவமாகத் திகழ்கின்றான். பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அப்பெருமானை வழிபடுவதை உன் கடமையாகக் கொள்வாயாக.