பெற்றோருக்கு வேண்டுகோள்!

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2019

தனக்கு தேவையான உணவை தானே சமைப்பதற்கு ‘சுயம்பாகம்’ என பெயர். மற்றவர்கள் சமைப்பதை விட இது உயர்வானது.  ஏனெனில், சமைப்பவரின் எண்ணம் சமைக்கும் உணவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கடவுளின் திருநாமங்களைச் சொல்லியபடி சமைக்க வேண்டும் என்பர். சாப்பிடும் முன் “ உண்ணும் இந்த உணவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன்” என சொல்ல வேண்டும். “நாம் உண்ணும் அன்னமும் சிவன். அதை ஜீரணிக்கும் அக்னியும் சிவன். அதை சாப்பிடுபவனும் சிவன். அதனால் அடையப்போகும் லட்சியமான கடவுளும் சிவன்” என்கிறார் காஞ்சிப்பெரியவர். அதாவது உணவே கடவுள். இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே சிந்தாமல், சிதறாமல் சாப்பிடக் கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமை.