சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 4–11–19

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2019

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

காட்டுவாசிகள் அதிகமாக சுள்ளி பொறுக்கினால்  அது மழை வருவதற்கான அறிகுறி என்பார்கள். அதுபோல நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை என்ற சமயத்தில் பங்குச்சந்தைகள் ஏறினால், வருங்காலத்தில் பொருளாதாரம் சரியான நிலைக்கு வந்துவிடும் என்பதற்கான அறிகுறி தற்போதைய சந்தை நிலவரம். நாம் சென்ற வாரம் தான் கூறினோம் 40,000 புள்ளிகள் மும்பை பங்குச் சந்தையில் தொட்டு விடும் தூராம் தான் என்றோம். அது உண்மையாகி விட்டது. மும்பை பங்குச்சந்தை இந்த வாரம் 40,000 புள்ளிகளையும் தாண்டிச் சென்றது.

வெள்ளியன்று இறுதியாக

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை  40 புள்ளிகள் கூடி  40165 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 13 புள்ளிகள் கூடி  11890  புள்ளிகளுடன் முடிவடைந்தது.

இது மும்பை பங்குச் சந்தையில் சென்ற வாரத்தை விட கிட்டதட்ட 1100 புள்ளிகள் குறைவாகும்.

ஏன் சந்தைகள் இவ்வளவு கூடியிருக்கிறது?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வந்திருக்கிறார்கள். மேலும் சிறிய முதலீட்டாளர்களும் வாங்குகிறார்கள். இதனால் சந்தை கூடி வருகிறது. இது தான் முக்கியமான காரணம். பொருளாதார நிலைமை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. வேலையில்லாதவர்களின் சதவீதம் 8.4 ஆக இருக்கிறது. தொழில் வளர்ச்சி சரியில்லை. ஜிஎஸ்டி கலெக்ஷன் குறைவு. இவையெல்லாம் இருந்தும் சந்தைகள் கூடுகின்றன என்றால், வரும் மாதங்களில் ஒரு பெரிய ரெகவரி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதை சந்தைகள் நமக்கு முன் கூட்டியே உணர்த்துகிறது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

என்ன பங்குகள் வாங்கலாம்?

பந்தன் பங்க், ஏ யு பைனான்ஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ், ஹெச்சிஎல்,  மாருதி சுசூகி, இந்தியன் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆர்த்தி டிரக்ஸ், ஆர்த்தி இண்டஸ்டீரீஸ்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை சென்ற வாரம் வாங்குகள் என்று அறிவுருத்தியிருந்தோம். அப்படி திங்களன்று வாங்கியிருந்தால் அது வெள்ளியன்று வரை உங்களுக்கு நல்ல லாபங்களை கொடுத்திருக்கும் என்பது தான் உண்மை.

ஆட்டோ சேல்ஸ்

ஆட்டோ சேல்ஸ் அக்டோபர் மாதம் கூடுதலாக இருந்ததால் பொதுவாகவே எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் விதிவிலக்கல்ல. ஆனால் இது தொடருமா? நவம்பர் மாதமும் ஆட்டோ சேல்ஸ் கூடுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். அப்படி கூடும் ஆனால் அது சந்தைகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.

காலாண்டு முடிவுகள்

இந்த காலாண்டு முடிவுகள் பல கம்பெனிகளுக்கு சாதகமாக பல கம்பெனிகளுக்கு பாதகமாகவும் இருக்கிறது. இந்த இந்த காலாண்டு முடிவுகளில் மருந்து கம்பெனிகளில் பல நல்ல முடிவுகளை கொடுத்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக சரியான டிராக்கில் இல்லாத செக்டாரில் மருந்து கம்பெனிகளும் ஒன்றாகும். அவை இந்த காலாண்டில் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.

இந்த வாரம் டாக்டர் ரெட்டீஸ்

லாப் நல்ல காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளது. சென்ற வருடம் இதே காலாண்டு வைத்து நோக்கும் போது இந்த வருடம் அதே காலாண்டில் 120 சதவீதம் கூடுதலாக லாபங்களை ஈட்டியுள்ளது.

அடுத்த வாரம் எப்படி இருக்கிறது?

சந்தைகளில் வாங்கும் செண்டிமெண்ட் இருக்கிறது. அதே சமயம் சந்தைகள் இவ்வளவு ஏறி இருக்கிறதே, சிறிது லாபமும் பார்த்து விடலாம் என்ற எண்ணமும் பலரிடம் இருக்கிறது.

இதனால் சந்தைகள் மேலும், கீழுமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். கடந்த சில மாதங்களில் சந்தைகள் 10 சதவீதம் வரை கூடியிருக்கிறது. 10 சதவீதம் உடனடியாக குறைய வாய்ப்புகள் இல்லை. ஆதலால் சந்தைகளில் தொடர்ந்து இருக்கலாம்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com