ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: சுயேட்சைகள் அமோக வெற்றி

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2019

ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­தில் வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­தல்­கள் முடிந்து, முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்த தேர்­தல் சென்ற மாதம் 24ம் தேதி நடை­பெற்­றது. வாக்­குப்­ப­திவு காலை 9 மணி முதல் நண்­ப­கல் 1 மணி வரை நடை­பெற்­றது. வாக்­குச் சீட்­டு­களே பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இவற்­றில் பெரும்­பா­லும் சுயேட்சைகளே வெற்றி பெற்­றுள்­ள­னர். அர­சி­யல் கட்­சி­களை பொருத்­த­மட்­டில் பார­திய ஜனதா மட்­டுமே போட்­டி­யிட்­டது. பிர­தான கட்­சி­க­ளான காங்­கி­ரஸ், தேசிய மாநாட்டு கட்சி,மக்­கள் ஜன­நா­யக கட்சி ஆகி­யவை தேர்­தலை புறக்­க­ணித்­தன.

மத்­திய அரசு ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு வழங்­கி­யுள்ள சிறப்பு அந்­தஸ்தை சென்ற ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்­தது. அத்­து­டன் ஜம்­மு–­காஷ்­மீர், லடாக் என இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­க­ளா­க­வும் அறி­வித்­தது. இந்த இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­கள் அக்­டோ­பர் 31ம் தேதி முதல் அம­லுக்கு வந்­துள்­ளன. இத­னால் ஒரே மாநி­ல­மாக இருக்­கும் நிலை­யில் நடக்­கும் கடைசி தேர்­தல் இதுவே. தேசிய மாநாட்டு கட்சி தலை­வர்­க­ளான பரூக் அப்­துல்லா, அவ­ரது மகன் உமர் அப்­துல்லா, மக்­கள் ஜனா­நா­யக கட்சி தலை­வர் மெக்­பூபா முப்தி உட்­பட பல தலை­வர்­கள் காவ­லில் உள்­ள­னர். இந்த நிலை­யில் நடை­பெற்ற வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­தலை பிர­தான அர­சி­யல் கட்­சி­கள் புறக்­க­ணித்­தன.  

இந்த தேர்­த­லில் 98.3 சத­வி­கி­தம் வாக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ள­தாக மாநில தலைமை தேர்­தல் அதி­காரி சைலேந்­திர குமார் தெரி­வித்­துள்­ளார். ஸ்ரீந­கர் மாவட்­டத்­தில் நூறு சத­வி­கி­தம் வாக்­கு­கள் பதி­வா­ன­தா­க­வும், பதற்­றம் நிறைந்த புல்­வானா மாவட்­டத்­தில் 86%, சோபி­யான் மாவட்­டத்­தில் 85% வாக்­கு­கள் பதி­வா­ன­தா­க­வும் தெரி­வித்­தார்.  

சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது ஸ்ரீந­க­ரில் 13 சத­வி­கித வாக்­கு­களை பதி­வா­கி­யி­ருந்­தன. புல்­வானா, சோபி­யான் ஆகிய மாவட்­டங்­க­ளில் 3 சத­வி­கித்­திற்­கும் குறை­வான வாக்­கு­களே பதி­வா­கி­யி­ருந்­தன. இப்­போது வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­த­லில் வாக்­கு­ப­திவு அதிக அளவு இருப்­ப­தற்கு கார­ணம், இது மறை­முக தேர்­தல் என்­பதே. மூன்று அடுக்­கு­களை கொண்ட பஞ்­சா­யத்­தில், வட்­டார வளர்ச்சி கவுன்­சில், கிராம பஞ்­சா­யத்­துக்கு அடுத்­த­ப­டி­யாக இரண்­டாம் நிலை­யி­லா­னது. இந்த கவுன்­சில் தலை­வர் சம்­பந்­தப்­பட்ட வட்­டார வளர்ச்சி கவுன்­சி­லில் அடங்­கி­யுள்ள பஞ்­சா­யத்து உறுப்­பி­னர், பஞ்­சா­யத்து தலை­வர்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றார்.

சென்ற வரு­டம் பஞ்­சா­யத்து உறுப்­பி­னர், தலை­வர்­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெற்­றது. அப்­போது தீவி­ர­வா­தி­க­ளின் மிரட்­ட­லால் காஷ்­மீர் சம­வெ­ளி­யில் பல பஞ்­சா­யத்­து­க­ளில் யாரும் போட்­டி­யி­ட­வில்லை. 30 சத­வி­கித பஞ்­சா­யத்­து­க­ளுக்கு மட்­டுமே உறுப்­பி­னர்,. தலை­வர் தேர்­தல் நடை­பெற்­றது. 61 சத­வி­கித பஞ்­சா­யத்து உறுப்­பி­னர், 45 சத­வி­கித பஞ்­சா­யத்து தலை­வர் தேர்­தல் நடை­பெ­ற­வில்லை. இவை­க­ளில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள் இல்­லாத கார­ணத்­தால், தற்­போது நடை­பெற்ற வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­த­லில், இந்த பஞ்­சா­யத்­து­க­ளின் சார்­பில் யாரும் வாக்­க­ளிக்க தகுதி பெற­வில்லை.

லடாக் பிராந்­தி­யத்­தை­யும் சேர்த்து ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­தில் மொத்­தம் 22 மாவட்­டங்­க­ளில் 316 வட்­டார வளர்ச்சி கவுன்­சில்­கள் உள்­ளன. இதில் பெண்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நான்கு இடங்­கள் உட்­பட 9 இடங்­க­ளுக்கு தகு­தி­யான வேட்­பா­ளர்­கள் இல்லை. எனவே சென்ற மாதம் 24ம் தேதி பலத்த பாது­காப்­புக்கு இடையே 307 வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தலை­வ­ருக்­கான தேர்­தல் நடை­பெற்­றது. இதில் 27 பேர் போட்­டி­யின்றி தேர்வு செய்­யப்­பட்­ட­னர். மீத­முள்­ள­வை­க­ளுக்கு மொத்­தம் 1,065 பேர் போட்­டி­யிட்­ட­னர். இதில் 853 பேர் சுயேட்சைகள்.

ஜம்மு, காஷ்­மீர், லடாக் என மூன்­று­பி­ராந்­தி­யங்­க­ளில் உள்ள 307 வட்­டார வளர்ச்சி கவுன்­சி­லில் 217 இடங்­க­ளில் சுயேட்சைகள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். பார­திய ஜனதா 81 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. பிர­தான அர­சி­யல் கட்­சி­க­ளான காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ், மக்­கள் ஜன­நா­யக கட்சி ஆகி­யவை தேர்­தலை புறக்­க­ணித்த நிலை­யில், பார­திய ஜனதா ஒரு மாதம் கடு­மை­யாக பிர­சா­ரம் செய்­தது. இருப்­பி­னும் 81 இடங்­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. மொத்­த­முள்ள 22 மாவட்­டங்­க­ளில் 19 மாவட்­டங்­க­ளில் சுயேட்சைகள் வெற்றி பெற்­றுள்­ள­னர். இரண்டு மாவட்­டங்­க­ளில் பார­திய ஜன­தா­வும், ஒரு மாவட்­டத்­தில் பந்­தர் கட்­சி­யும் வெற்றி பெற்­றுள்­ளது.

மாநில தலைமை தேர்­தல் அதி­காரி சைலேந்­திர குமார் தக­வல்­படி, காஷ்­மீர் சம­வெளி பிராந்­தி­யத்­தில் 136 பஞ்­சா­யத்து பிளாக்­கு­கள் உள்­ளன. 128 இடங்­க­ளில் 109 சுயேட்சைகள் வெற்றி பெற்­றுள்­ள­னர். 18 இடங்­க­ளில் பா.ஜ,,வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­றுள்­ள­னர். சென்ற வரு­டம் நடை­பெற்ற பஞ்­சாய்த்து தேர்­த­லில், 8 பஞ்­சா­யத்­து­க­ளில் தேர்­தல் நடை­பெ­ற­வில்லை.

அதி­கா­ர­பூர்வ தக­வல்­படி குப்­வாரா, பந்­தி­போரா, காந்­தர்­பால், ஸ்ரீந­கர், குலா­கம் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளில் உள்ள 50 இடங்­க­ளி­லும் சுயேட்சைகள் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ள­னர். பார­முல்லா மாவட்­டத்­தில் உள்ள 25 இடங்­க­ளில் பார­திய ஜனதா ஒரு இடத்­தி­லும், மீத­முள்ள 24 இடங்­க­ளில் சுயேட்சைக­ளும் வெற்றி பெற்­ற­னர். அனந்­த­நாக் மாவட்­டத்­தில் மொத்­த­முள்ள 16

இடங்­க­ளில் சுயேட்சைகள் 13 இடங்­க­ளி­லும், பா.ஜ.,3 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

புல்­வானா மாவட்­டத்­தில் மொத்­த­முள்ள 9 இடங்­க­ளில் சுயேட்சைகள் நான்கு இடங்­க­ளி­லும், பார­திய ஜனதா 4 இடங்­க­ளி­லும், காங்­கி­ரஸ் சின்­னத்­தில் போட்­டி­யிட்­ட­வர் ஒரு இடத்­தி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர். காங்­கி­ரஸ் தேர்­தலை புறக்­க­ணித்­தும்­கூட, இவர் காங்­கி­ரஸ் சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்­ளார். சோபி­யான் மாவட்­டத்­தில் மொத்­த­முள்ள 8 இடங்­க­ளில் எல்­லா­வற்­றை­யும் பா.ஜ., கைப்­பற்­றி­யுள்­ளது. இதில் ஆறு இடங்­க­ளில் பா.ஜ.,வேட்­பா­ளர்­கள் போட்­டி­யின்றி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். தேர்­தல் நடை­பெற்ற இரண்டு இடங்­க­ளி­லும் பா.ஜ., வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

ஜம்மு பிராந்­தி­யத்­தில் அதிக இடங்­க­ளில் வெற்றி பெற­லாம் என்று பா.ஜ., தலை­வர்­கள் எதிர்­பார்த்­த­னர். ஆனால் எதிர்­பார்த்த அளவு வெற்றி கிடைக்­க­வில்லை. 2014 லோக்­சபா தேர்­த­லுக்கு பிறகு, நடை­பெற்ற எல்லா தேர்­தல்­க­ளி­லும் பா.ஜ., அதிக அளவு வெற்றி பெற்று இருந்­தது. ஆனால் தற்­போது வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­த­லில் எதிர்­பார்த்த அளவு வெற்றி கிடைக்­க­வில்லை. இங்­கும் சுயேட்சைகளே அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்­ற­னர். ஜம்மு பிராந்­தி­யத்­தில் மொத்­தம் 148 இடங்­கள் உள்­ளன. இதில் சுயேட்சைகள் 88 இடங்­க­ளி­லும், பா.ஜ.,52 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது. பாந்­தர் கட்சி 8 இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது.

பூஞ்ச் மாவட்­டத்­தில் உள்ள 11 இடங்­க­ளை­யும் சுயேட்சைகள் கைப்­பற்­றி­னர். ஜம்மு மாவட்­டத்­தில் 11 இடங்­க­ளில் சுயேட்சைக­ளும், 9 இடங்­க­ளில் பா.ஜ.,வும் வெற்றி பெற்­றன. இதே போல் கதுவா மாவட்­டத்­தில் சுயேட்சைகள் 10 இடங்­க­ளி­லும், பா.ஜ.,9 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது.  அரு­கா­மை­யில் உள்ள சம்பா மாவட்­டத்­தில் பா.ஜ.,4 இடங்­க­ளி­லும், சுயேட்சைகள் 5 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

தோடா, கிஸ்ட்­வார், ரம்­பான் மாவட்­டங்­ளில் 27 இடங்­க­ளில் சுயேட்சைக­ளும், 14 இடங்­க­ளில் பா.ஜ.,வும் வெற்றி பெற்­றுள்­ளது. ரஜீரி, ரியாசி மாவட்­டங்­க­ளில் சுயேட்சைகள் 19 இடங்­க­ளி­லும், பா.ஜ., 12 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது. கிஸ்ட்­வார் மாவட்­டத்­தில் உள்ள 13 இடங்­க­ளில் பா.ஜ.,7 இடங்­க­ளி­லும்,சுயேட்சைகள் 6 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர். உதம்­பூர் மாவட்­டத்­தில் பாந்­தர் கட்சி எட்டு இடங்­க­ளி­லும், சுயேட்சைகள் ஐந்து இடங்­க­ளி­லும், பா.ஜ., நான்கு இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

காஷ்­மீர், ஜம்மு பிராந்­தி­யத்தை போலவே, வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­த­லில் லடாக் பிராந்­தி­யத்­தி­லும் அதிக இடங்­களை சுயேட்சைகளே கைப்­பற்­றி­யுள்­ள­னர். லடாக் பிராந்­தி­யத்­தில் இரண்டு மாவட்­டங்­க­ளில் உள்ள 31 இடங்­க­ளில் சுயேட்சைகள் 20 இடங்­க­ளி­லும், பா.ஜ,,11 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது. புத்த மதத்­தி­னர் அதி­கம் வாழும் லே மாவட்­டத்­தில் பா.ஜ.,7 இடங்­க­ளி­லும், சுயேட்சைகள் 9 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர். முஸ்­லீம்­கள் அதி­கம் வாழும் கார்­கில் மாவட்­டத்­தில் சுயேட்சைகள் 11 இடங்­க­ளி­லும், பா.ஜ.,நான்கு இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

இந்த தேர்­தல் முடி­வு­கள் பற்றி பா.ஜ., பொதுச் செய­லா­ளர் (அமைப்பு) அசோக் கவுல் கூறு­கை­யில், “இந்த தேர்­தல் முடி­வு­கள் பற்றி விரை­வில் கட்­சி­யில் விவா­திக்­கப்­ப­டும். காஷ்­மீர் பிராந்­தி­யத்­தில் கட்சி 15 சுயேட்சைக­ளுக்கு ஆத­ரவு அளித்­தது. இவர்­கள் அனை­வ­ரும் வெற்றி பெற்­றுள்­ள­னர்” என்று தெரி­வித்­தார்.

ஜம்மு, காஷ்­மீர், லடாக் ஆகிய மூன்று பிராந்­தி­யங்­க­ளி­லும் நடை­பெற்ற வட்­டார வளர்ச்சி கவுன்­சில் தேர்­த­லில் சுயேட்சைகளே அதிக அள­வில் வெற்றி பெற்­றுள்­ள­னர். இந்த தேர்­த­லில் பங்­கேற்ற ஒரு கட்­சி­யான பார­திய ஜனதா எதிர்­பார்த்த அளவு வெற்றி பெற­வில்லை. தேர்­தலை புறக்­க­ணித்த தேசிய மாநாட்டு கட்சி, மக்­கள் ஜன­நா­யக கட்சி, காங்­கி­ரஸ் ஆகி­யவை பங்­கேற்று இருந்­தால் முடி­வு­கள் வேறு மாதிரி இருந்­தி­ருக்க வாய்ப்பு உள்­ளது. தற்­போது சுயேட்சைகள் அதிக அளவு வெற்றி பெற்­ற­தில் இருந்து தேர்­த­லில் பங்­கேற்ற வாக்­கா­ளர்­கள் அர­சி­யல் கட்­சி­கள் மீது நம்­பிக்­கையை இழந்து விட்­ட­னரோ என எண்­ணத் தோன்­று­கி­றது.                             ***