‘‘கவர்ச்சி கோஷங்களால் திருப்திபடுத்த முடியாது’’ கமல்நாத்

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2019

மத்­திய பிர­தேச முத­ல­மைச்­சர் கமல்­நாத் அனு­ப­வ­முள்ள அர­சி­யல்­வா­தி­க­ளில் ஒரு­வர். சிறந்த அர­சி­யல் நிர்­வா­கி­யும் கூட. ஒன்­பது முறை லோக்­சபா உறுப்­பி­ன­ராக இருந்த கமல்­நாத், கடந்த பத்து மாதங்­க­ளாக குறைந்த பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி நடத்­திக் கொண்­டுள்­ளார். கட்­சி­யில் மோதல்­கள், சல­சப்­பு­களை திறம்­பட கையாண்டு வரு­கி­றார். தி வீக் வார இத­ழுக்கு அளித்த சிறப்பு பேட்­டி­யில், தனது அரசு பல­மாக இருப்­ப­தா­க­வும்,மக்­கள் எதிர்­கா­லம் குறித்து நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார். மாநில காங்­கி­ரஸ் கட்சி தலை­வ­ரா­க­வும் உள்ள கமல்­நாத், ஜோதி­ரா­தித்ய சிந்­தி­யாவை கட்சி தலை­வ­ராக்­கு­வ­தில் எவ்­வித பிரச்­னை­யும் இல்லை என்­றும், மூத்த தலை­வர்­க­ளின் விமர்­ச­னங்­களை ஒதுக்­கித் தள்­ளும்­ப­டி­யும் கூறி­னார். அவ­ரது பேட்டி:

கேள்வி: மத்­திய பிர­தேச அரசு ஏறக்­கு­றைய பத்து மாதத்தை கடந்து விட்­டது. உங்­க­ளது சாத­னை­கள், சவால்­கள் என்ன?

பதில்: கடந்த பத்து மாதங்­க­ளில் இரண்­டரை மாதங்­கள் லோக்­சபா தேர்­த­லுக்­கான தேர்­தல் நடத்தை விதி­மு­றை­கள் அம­லில் இருந்­தது. இருப்­பி­னும் நிலை­கு­லைந்து போயி­ருந்த மாநில நிதி நிலையை சமா­ளித்­தோம். கஜான காலி என்­பதை பா.ஜ.,வே ஒத்­துக் கொண்­டது. எனவே முக்­கி­ய­மான வேலை நிதி நிலையை சீர­மைப்­பதே. நாங்­கள் முதல்­கட்­ட­மாக 21 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு கடன் தள்­ளு­படி செய்­துள்­ளோம். கடன் தள்­ளு­ப­டிக்கு விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்கு, நாங்­கள் தள்­ளு­படி செய்­ய­வில்லை என்று கூறி­னால், அது முற்­றி­லும் தவறு. ஏனெ­னில் எங்­க­ளி­டம் பல­ன­டைந்த விவ­சா­யி­க­ளின் வங்கி கணக்கு எண், ஆதார் எண் போன்­றவை உள்­ளன. இரண்­டாம் கட்­ட­மாக மேலும் 12 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு கடன் தள்­ளு­படி செய்­யப் போகின்­றோம்.  

அடுத்து நிர்­வா­கத்தை சீர்­தி­ருத்­து­வது. நிர்­வா­கம் எனில் கோப்­பு­க­ளும், குறிப்பு எழு­து­வது மட்­டு­மல்ல. இதன் பலன்­கள்­தான் முக்­கி­யம். நாங்­கள் நிர்­வா­கத்­தில் பல சீர்­தி­ருத்­தங்­களை செய்­துள்­ளோம். ஓய்­வூ­தி­யம், மானி­யம் போன்ற பல புதிய திட்­டங்­களை கொண்டு வந்­துள்­ளோம்.  

கேள்வி: சவால்­களை பற்றி என்ன கூறு­கின்­றீர்­கள்?

பதில்: மாநி­லம் முழு­வ­தும் கடந்த பதி­னைந்து ஆண்­டு­க­ளில் (பா.ஜ.,ஆட்­சி­யில்) ஏற்­பட்ட சீர­ழிவை புரிந்து கொள்­வது சவா­லா­ன­தாக இருந்­தது. அவர்­கள் எல்­லா­வற்­றை­யும் சீர்­கு­லைத்­து­விட்­ட­னர். இந்த சூழ்­நி­லை­யில் மிக முக்­கி­ய­மா­னது மூத­லீட்டை ஈர்ப்­பதே. நம்­பிக்­கை­யின் பேரில்­தான் முத­லீடு வரும். நாம் கேட்­ப­தால் அல்ல. முத­லீட்டை ஈர்க்க வேண்­டும். இதற்­காக நாங்­கள் தேவை­யா­ன­வற்றை எல்­லாம் செய்­தோம். இதன் ஒரு அங்­கம்­தான் முத­லீட்­டா­ளர் மாநாடு.

கேள்வி: சட்­ட­ச­பை­யில் காங்­கி­ர­சுக்கு பெரும்­பான்மை இல்லை. உங்­கள் அர­சின் பலம் குறித்து சந்­தே­கம் நில­வு­கி­றது. இது பற்றி அக்­கறை கொள்­கின்­றீர்­களா?

பதில்: நாங்­கள் சட்­ட­ச­பை­யில் அர­சின் ஸ்திரத்­தன்­மைஸ பெரும்­பான்மை குறித்து ஒரு முறை அல்ல மூன்று முறை நிரூ­பித்­துள்­ளோம். அரசு ஸ்திரத்­தன்­மை­யாக இருக்­கின்­றது. அதே நேரத்­தில் அறு­திப் பெரும்­பான்மை இருந்­தால், இன்­னும் நல்­லது.

(மத்­திய பிர­தேச சட்­ட­ச­பை­யில் மொத்­தம் 230 இடங்­கள் உள்­ளன. சென்ற தேர்­த­லில் காங்­கி­ரஸ் 115 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. நான்கு சுயேச்­சை­கள் ஆத­ர­வு­டன் ஆட்சி அமைத்த்து. பார­திய ஜனதா 108 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. பகு­ஜன் சமாஜ் கட்சி 2 இடங்­க­ளி­லும். சமாஜ்­வாதி கட்சி ஒரு இடத்­தி­லும் வெற்றி பெற்­றன. சமீ­பத்­தில் நடை­பெற்ற ஜபுவா தொகுதி இடைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றுள்­ளது. இதன் மூலம் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் எண்­ணிக்கை 116 ஆக அதி­க­ரித்­துள்­ளது.)

கேள்வி: நீங்­கள் காங்­கி­ரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அர­சுக்கு ஆத­ரவு தரும் எம்.எல்.ஏ.,க்களை பார­திய ஜனதா பண ஆசை காட்டி இழுக்­கப்­பார்க்­கின்­றது என்று கூறி­யி­ருந்­தீர்­கள். இத­னால் ஆபத்து இல்­லையா?

பதில்:     பார­திய ஜனதா எல்­லா­வித அர­சி­ய­லி­லும் ஈடு­ப­டும். ஆனால் யார் போக­வேண்­டும் என்று நினைக்­கின்­ற­னரோ, அவர்­கள் எப்­ப­டி­யா­வது போக­தான் பார்ப்­பார்­கள். நாங்­கள் ஸ்திரத்­தன்­மை­யாக அரசை நடத்த முடி­யும் என்ற நம்­பிக்­கை­யு­டன் உள்­ளோம்.

கேள்வி: உங்­க­ளுக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி­யு­டன் சுமு­க­மான உறவு இருப்­ப­தால், உங்­கள் அர­சுக்கு ஆபத்து வராது என்ற பேச்சு உள்­ளது. இது எந்த அளவு உண்மை?

பதில்: நான் யாரி­ட­மும் மோச­மான உற­வில் இல்லை.

கேள்வி: மோடி அரசு, உங்­களை உட்­பட காங்­கி­ரஸ் மற்­றும் எதிர்­கட்சி தலை­வர்­களை சி.பி.ஐ., அம­லாக்­கத்­து­றையை பயன்­ப­டுத்தி குறி­வைக்­கி­றதா?

பதில்: இது பா.ஜ., அர­சி­யல் செய்­யும் முறை. எதிர்­கட்­சி­களை குறி­வைக்க மத்­திய அமைப்­பு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது மற்­ற­வர்­கள் நம்மை நேசிக்க வேண்­டும் என்று நினைக்­கும் அரசு அல்ல. அச்­சப்­பட வேண்­டும் என்று கரு­தும் அரசு.

கேள்வி: ஆனால் இதை எதிர்­கொள்ள வாய்ப்பு உள்­ளதா?  

பதில்: நாட்டு மக்­கள் பா.ஜ.,வின் அர­சி­யலை புரிந்து கொள்­வார்­கள். இறு­தி­யில் ஒவ்­வொ­ரு­வ­ரும் நாட்­டின் பல­மான நிறு­வ­னங்­களை பாதுக்­காக்க வேண்­டும் என்று விரும்­பு­வார்­கள்.

கேள்வி: மாநில காங்­கி­ரஸ் கட்சி தலை­வ­ராக ஜோதி­ரா­தித்ய சிந்­தி­யாவை நிய­மிப்­பது, மாநி­லத்­தில் இரண்டு அதி­கார மையங்­கள் ஏற்­பட்டு விடும் என்று கவ­லைப்­ப­டு­கின்­றீர்­களா?  

பதில்: ஏன் பிரச்னை ஏற்­பட போகின்­றது. நான் கடந்த ஆறு­மா­தங்­க­ளாக கட்­சிக்கு புதிய தலை­வர் வேண்­டும் என்று கூறிக் கொண்­டுள்­ளேன். ஏனெ­னில் நான் இரண்டு பொறுப்­பு­களை (முதல்­வர், கட்சி தலை­வர்) தொடர்ந்து வகிக்க முடி­யாது.  

கேள்வி:  உங்­க­ளுக்கு ஜோதித்­ரா­தித்ய சிந்­தி­யா­வையோ அல்­லது வேறு ஒரு­வ­ரையோ மாநில கட்சி தலை­வ­ராக நிய­மிப்­ப­தில் பிரச்னை

இல்­லையே? ஏதா­வது பிரச்னை ஏற்­ப­டுமா?

பதில்: நான் அப்­படி நினைக்­க­வில்லை.

கேள்வி: கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் பல இக்­கட்­டான அறிக்­கை­களை விடு­கின்­ற­னரே?

பதில்: எந்த மாதி­ரி­யான அறிக்­கை­கள். விவ­சா­யி­கள் கடனை ரத்து செய்ய வேண்­டும் என்­கின்­ற­னர் (சிந்­தியா விட்ட அறிக்கை) நாங்­கள் ரத்து செய்­துள்­ளோம். இது ஒன்­றும் புதி­தல்ல. கட்­சி­யின் எல்லா தொண்­டர்­க­ளுமே கூறு­கின்­ற­னர். இதில் பெரி­தாக என்ன உள்­ளது

கேள்வி: திக்­வி­ஜய் சிங் டுவீட்­டர் பதிவு பற்றி என்ன கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: சாலை­க­ளில் பசு­மா­டு­கள் திரி­கின்­றன என்று திக்­வி­ஜய் சிங் டுவீட்­ட­ரில் பதி­விட்­டார். இதை எனது கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தார். இது எனக்­கும் தெரி­யும். இதில் என்ன உள்­அர்த்­தம் உள்­ளது.

கேள்வி: தேசிய மட்­டத்­தில் சஞ்­ச­யம் நிரு­பம், அசோக் தன்­வர் போன்­ற­வர்­கள் தேர்­தல் நேரத்­தில் விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­ற­னர். இது மக்­கள் மத்­தி­யில் கட்­சிக்கு கெட்ட பெயரை ஏற்­ப­டுத்­தாதா?. தேர்­த­லில் பாதிக்­காதா?

பதில்: காங்­கி­ர­சில் ஒரு­வர் இருந்­தால், அவர் கட்­சி­யின் சித்­தாந்த்தை ஏற்­றுக் கொண்டு கட்­சிக்கு உண்­மை­யாக இருக்க வேண்­டும். ஒரு­வர் பத­விக்­காக மட்­டும் இருந்­தால், அவர் சித்­தாந்­தம், கொள்­கைக்­காக இல்லை என்று அர்த்­தம்.

கேள்வி: அப்­ப­டி­யெ­னில் அவர்­கள் வெளி­யேற வேண்­டி­யது தானா?

பதில்: அவர்­கள் தாரா­ள­மாக வெளி­யே­ற­லாம். பலர் கட்­சியை விட்டு வெளி­யே­ற­வும், பலர் உள்ளே வர­வும் தயா­ராக உள்­ள­னர்.

கேள்வி: தேசிய அள­வில் காங்­கி­ரஸ் சிக்­க­லில் உள்­ளது. கட்சி சில சிறப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்: இந்த அரசு (பா.ஜ.,) மத்­தி­யில் இரண்­டா­வது தட­வை­யாக ஆட்­சிக்கு வந்­துள்­ளது. அவர்­கள் என்ன செய்­யப்­போ­கின்­றார்­கள் என்­பதை மக்­கள் முன் காண்­பிக்க கால அவ­கா­சம் வழங்க வேண்­டும். ஆட்­சிக்கு வந்த முதல்­நா­ளில் இருந்தே விமர்­ச­னம் செய்ய கூடாது. இப்­போது அவர்­கள் சில முயற்­சி­ களை எடுக்­கின்­ற­னர். இத­னால் என்ன பலன் ஏற்­பட போகின்­றது என்­பதை பார்க்க வேண்­டும். இத­னால் விவ­சா­யம், வேலை­யின்மை, பொரு­ளா­தார வளர்ச்சி போன்­ற­வை­கள் பலன் அடைய வேண்­டும். இவை மக்­க­ளின் அன்­றாட வாழ்க்­கையை பாதிக்­கின்­றன. நீங்­கள் கவர்ச்சி கோஷங்­களை எழுப்­பு­வ­தால் மட்­டுமே, மக்­களை திருப்­தி­ப­டுத்த முடி­யாது.  

கேள்வி: சிலர் ஆத்­தி­ரப்­பட வைக்­கும் அல்­லது மத­து­வே­சங்­களை தூண்­டும் வகை­யில் பேசு­கின்­ற­னர். அவை அர­சின் கவ­னத்­திற்கு வரு­வ­தில்லை. இவ்­வாறு சமீ­பத்­தில் விஷ்வ இந்து பரி­ஷத் தலை­வர் ஆகார் மால்வா பேசி­யுள்­ளாரே?

பதில்: அவர் மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று நினைக்­கின்­றேன். மாநி­லத்­தில் யாரா­வது மத துவே­சத்தை உண்­டாக்க முயற்சி செய்­தால், அதை சகித்­துக் கொள்ள மாட்­டோம்.

கேள்வி: நாட்­டின் மற்ற பகு­தி­களை போல், மத்­திய பிர­சே­தம் பொரு­ளா­தார மந்­த­நி­லை­யால் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­யுள்­ளீர்­களே?

பதில்: வாக­னங்­க­ளின் விற்­பனை சரி­ய­வில்லை. மற்ற பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளும் பாதிப்­பில்­லா­மல் உள்­ளன.

கேள்வி: இது எவ்­வாறு சாத்­தி­யம். இவ்­வாறு உண்­டாக்க என்ன செய்­தீர்­கள்?

பதில்: மக்­கள் எதிர்­கால நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் செல­வ­ழிக்­கின்­ற­னர். அவர்­கள் எதிர்­கா­லம் சூனி­ய­மாக இருப்­ப­தாக கரு­தி­னால் செல­வ­ழிக்­கா­மல் சேமித்து வைப்­பார்­கள். மத்­திய பிர­சே­சத்­தில் மக்­கள் எதிர்­கா­லம் சிறப்­பாக இருப்­ப­தாக கரு­து­கின்­ற­னர். அதுவே கார­ணம்.

நன்றி: தி வீக் வார இத­ழில்

ஸ்ராவணி சர்க்­கார்.