காலிபிளவர் 15 கிலோ பாகற்காய் 7 அடி ; பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனை விவசாயி!

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2019

இயற்கை விவ­சாயி ஜெக­தீஷ் பாரிக் (75), இந்த வருட துவக்­கத்­தில் வய­லில் வேலை செய்து கொண்­டி­ருந்­தார். அப்­போது அவ­ருக்கு ஜனா­தி­பதி மாளி­கை­யில் இருந்து போன் அழைப்பு வந்த்து. அவர் பத்­மஸ்ரீ விரு­துக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­த­னர். அதற்கு நன்றி தெரி­வித்­துக் கொண்­டார். இந்­தி­யா­வில் மிக உய­ரிய விரு­து­க­ளின் வரி­சை­யில் நான்­கா­வது விருது பத்­மஸ்ரீ விருது.

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் சிகார் மாவட்­டத்­தில் உள்ள அஜித்­கர்க் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­தான் இயற்கை விவ­சாயி ஜெக­தீஷ் பாரிக். இவ­ருக்கு சொந்­த­மாக இரண்டு ஹெக்­டேர் நிலம் உள்­ளது.

எனக்கு பத்­மஸ்ரீ விருது பற்­றி­யும், அதன் பெரு­மை­க­ளைப் பற்­றி­யும் எது­வும் தெரி­யாது. இதை வாங்­கு­வ­தற்­காக டில்லி சென்ற பிறகு தான், இந்த விரு­தின் முக்­கி­யத்­து­வம் தெரிந்­தது என்று கூறு­கி­றார் ஜெக­தீஷ் பாரிக்.

“நான் இறப்­ப­தற்­குள் மீத­முள்ள மூன்று விரு­து­க­ளை­யும் பெற்­று­விட வேண்­டும். இதை நான் மிக­வும் பணி­வு­ட­னும், மரி­யா­தை­யு­ட­னும் கூறு­கின்­றேன். தொடர்ந்து ஆரோக்­கி­ய­மான காய்­க­றி­களை உற்­பத்தி செய்து, மற்ற விவ­சா­யி­கள் இயற்கை வேளாண்மை முறை­யில் காய்­க­றி­களை பயிர் செய்ய எடுத்­துக் காட்­டாக இருக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றேன்”  என்­கின்­றார் ஜெக­தீஷ் பாரிக்.

இவர் பயிர் செய்­யும் காய்­க­றி­கள், மற்ற காய்­க­றி­க­ளில் இருந்து வேறு­பட்­டது. அதிக சத்­துக்­கள் நிறைந்­தது. இவர் பல வரு­டங்­க­ளாக இயற்கை முறை­யில் காய்­கறி பயி­ரிட்டு வரு­கின்­றார். இவர்  உற்­பத்தி செய்த காய்­க­றி­களை சங்­கர் தயாள் சர்மா முதல் ராம்­நாத் கோவிந்த் வரை ஆறு ஜனா­தி­ப­தி­கள் பார்­வை­யிட்டு பாராட்­டி­யுள்­ள­னர். அது­மட்­டு­மல்ல இவர் ஜனா­தி­ப­தி­கள் பிர­ணாப் முகர்ஜி, அப்­துல்­க­லாம், பிர­தீபா பாடீல் ஆகி­யோ­ருக்­கும் காய்­க­றியை வழங்­கி­யுள்­ளார்.

இயற்கை முறை­யில் ஜெகத் பாரீக் பயிர் செய்­யும் காய்­க­றி­கள், சந்­தை­யில் கிடைக்­கும் காய்­க­றியை போல் அல்­லாது வித்­தி­யா­ச­மாக உள்­ளது. 15 கிலோ எடை­யுள்ள பெரிய காலி புள­வர். 86 கிலோ எடை­யுள்ள பூச­ணிக்­காய், 7 அடி நீள­முள்ள பீர்க்­கங்­காய், 8 கிலோ எடை­யுள்ள முட்­டை­கோஸ், 3 அடி நீள­முள்ள கத்­த­ரி­காய் என, இவர் உற்­பத்தி செய்­யும் எல்லா காய்­க­றி­க­ளும் மிக பெரிய அள­வி­லும், சுவை­யா­க­வும், சத்­துக்­கள் நிறைந்­தும் உள்­ளது. இந்த அள­வுக்கு காய்­க­றி­கள் பெரி­தா­க­வும், நீள­மா­க­வும் வளர்­வ­தற்கு நான் ரக­சி­ய­மாக எவ்­வித பொருட்­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்­கின்­றார்.

ஜெத­கீஷ் பாரிக் உற்­பத்தி செய்த மிக பெரிய அள­வி­லான காலி­பு­ள­வர் தான் அவரை முதன் முத­லில் பெரு­மை­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்­தது. இதற்­காக தேசிய கண்­டு­பி­டிப்பு அறக்­கட்­டளை, “தேசிய புதிய கண்­டு­பி­டிப்பு” விருது வழங்கி கௌர­வித்­தது. 2001ல் இந்த காலி­பு­ள­வர் ரகத்­திற்கு காப்­பு­ரிமை பெற்­றுள்­ளார். அதற்கு அஜித்­கர்க் ரகம் என்று தனது கிரா­மத்தை குறிக்­கும் பெயர் வைத்­துள்­ளார்.

“எனது கிரா­மம் பிர­பல்­ய­மாக வேண்­டும் என்று விரும்­பி­னேன். அத­னால்­தான் நான் பிறந்த மண்­ணின் பெயரை வைத்­துள்­ளேன் என்­கின்­றார்” இயற்கை விவ­சாயி ஜெக­தீஷ் பாரிக்.

ஜெக­தீஷ் பாரிக்­கிற்கு பத்து வய­தில் இருந்தே (1957 முதல்) விவ­சா­யத்­தில் நாட்­டம் வந்து விட்­டது. அவர் தந்­தை­யு­டன் தின­சரி வய­லில் உற்­பத்தி செய்த காய்­க­றி­களை விற்­பனை செய்ய சந்­தைக்கு போவார்.

“நான் காலை ஐந்து மணிக்கே எழுந்து, தந்­தை­யு­டன் சேர்ந்து காய்­க­றி­களை விற்­பனை செய்து விட்டு பிறகு பள்­ளிக்­கூ­டத்­திற்கு செல்­வேன். இதே போல் பத்து வரு­டங்­கள் தொடர்ந்­தன. அப்­போது எனக்­கும் காய்­கறி பயிர் செய்ய வேண்­டும் என்ற ஆசை வளர தொடங்­கி­யது என்று சிறு­வ­யது நினை­வு­களை அசை போடு­கின்­றார் ஜெக­தீஷ் பாரிக். இவர் பனி­ரெண்­டாம் வகுப்­பில் தேர்ச்சி பெற்ற உடன் கல்­லூ­ரி­யில் பி.ஏ பட்­டப்­ப­டிப்­பில் சேர்ந்­தார். ஆனால் படித்து முடிக்­க­வில்லை. பிறகு அஸ்­ஸாம் மாநி­லத்­தில் ஓ.என்.ஜி.சி நிறு­வ­னத்­தில் வேலைக்கு சேர்ந்­தார். அங்கு போதிய வரு­வாய் கிடைக்­காத கார­ணத்­தால் 60’களில் சொந்த கிரா­மத்­திற்கு திரும்­பி­னார்.

“எனக்கு போதிய வரு­மா­னம் கிடைக்­காத கார­ணத்­தால், கிரா­மத்­திற்கு திரும்பி தாய் மாமன் வய­லில் வேலை செய்ய தொடங்­கி­னேன். எனது சாத­னைக்கு எல்­லாம் அவரே கார­ணம். அவர் இர­சா­யண உரம், பூச்சி கொல்லி மருந்து பயன்­ப­டுத்­தா­மல் பயிர் செய்­வ­தற்­கும், சொந்­த­மாக உரம் தயா­ரிக்­க­வும் கற்­றுக் கொடுத்­தார்” என்று கூறு­கின்­றார் ஜெக­தீஷ் பாரிக்.

1970களில் இவ­ரது தந்தை கால­மா­னார். அதற்கு பிறகு அவர் விட்டு சென்ற இரண்டு ஹெக்­டேர் நிலத்­தில், மாமா­வி­டம் கற்ற இயற்கை விவ­சாய முறையை பயன்­ப­டுத்தி விவ­சா­யம் செய்ய தொடங்­கி­னார். மற்ற விவ­சா­யி­க­ளி­டம் இருந்து இவர் வித்­தி­யா­ச­மாக விவ­சா­யம் செய்­வ­தற்கு அடிப்­படை கார­ணம் விதை­யும், குறிப்­பிட்ட நேரத்­தில் எதை செய்ய வேண்­டுமோ, அதை செய்­வதே.  

“விவ­சா­யத்­தில் ஒவ்­வொன்­றை­யும் குறிப்­பிட்ட நேரத்­தில் செய்ய வேண்­டும். விதைப்­பது. தண்­ணீர் பாய்ச்­சு­வது, பறிப்­பது, அறு­வடை செய்­வது என எல்­லா­வற்­றை­யும் குறிப்­பிட்ட நேரத்­தில் செய்ய வேண்­டும். பயி­ரின் வளர்ச்­சியை பொருத்து, நான் மூன்று நாட்­க­ளுக்கு ஒரு முறை தண்­ணீர் பாய்ச்­சு­வேன். விதை­களை பொருத்த மட்­டில், விவ­சா­யி­கள் அவர்­கள் நிலத்­தில் இருந்து சேக­ரித்த விதை­களை பயன்­ப­டுத்­தி­னால் அதிக உற்­பத்தி கிடைக்­கும். நான் முத­லில் பயிர் செய்ய தொடங்­கி­ய­போது, ஜெய்ப்­பூ­ரில் இருந்து விதை­களை வாங்­கி­னேன். அதன் பிறகு மற்­ற­வர்­க­ளி­டம் இருந்து விதையை வாங்­கி­ய­தில்லை. இப்­போது நான் முந்­தைய வரு­டத்­தின் விளைச்­ச­லில் இருந்து விதையை சேமித்து, அதை பயன்­ப­டுத்­து­கின்­றேன்” என்­கின்­றார்.

இவர் ஒவ்­வொரு செடிக்­கும் இரண்டு அடி இடை­வெளி விடு­கின்­றார். வரி­சை­க­ளுக்கு இடை­யில் ஒன்­றரை அடி இடை­வெளி விடு­கின்­றார். அப்­போ­து­தான் மழை நீர் பூமி­யில் நன்கு போகும். இதுவே கோடை காலத்­தி­லும் கூட தண்­ணீர் பற்­றாக்­குறை இல்­லா­மல் இருப்­ப­தற்கு கார­ணம்.

“எனது கிரா­மத்­தில் விவ­சா­யத்­திற்கு வரை­முறை இல்­லாம் நிலத்­தடி நீரை உறிஞ்சி எடுத்த கார­ணத்­தி­னால், கிரா­மங்­க­ளில் கிண­று­கள் வற்றி விட்­டன. நான் எனது நிலத்­தில் மழை நீர் வெளி­யே­றா­த­படி வரப்பு வெட்டி தடுத்­துள்­ளேன்” என்­கின்­றார். பயிர்­க­ளில் பூச்சி தாக்­கு­தல் இல்­லா­மல் பாது­காக்க, தனக்கு தேவை­யான உரத்தை சொந்­த­மாக தயா­ரித்­துக் கொள்­கின்­றார்.

நான் பத்து அடி நீளம், ஆறு அடி அக­லம், மூன்று அடி நீளத்­திற்கு குழி வெட்­டு­கின்­றேன். அதில் சாணம் போன்ற பிரா­ணி­க­ளின் கழி­வு­களை சேக­ரித்து, எல்லா பக்­க­மும் ஒரே மாதிரி தூவி விடு­கின்­றேன். அதன் பிறகு வேப்ப இலை, வெள்­ளரி தோல், மற்ற இலை­களை போடு­கின்­றேன். இது பதி­னைந்து நாட்­க­ளுக்கு பிறகு உர­மாக ஆகி­வி­டும் என்று உரம் தயா­ரிப்­பது குறித்து விளக்­கு­கின்­றார் ஜெக­தீஷ் பாரிக்.

இந்த இயற்கை உரம் நிலத்­திற்கு நல்­லது என்­ப­து­டன், செல­வும் இல்லை. எனது சக விவ­சா­யி­கள் உரத்தை தயா­ரிக்க நேரத்தை செல­வ­ழிக்க தயங்­கு­கின்­ற­னர். அதற்கு பதி­லாக பணம் செல­வ­ழித்து இர­சா­யண உரங்­களை வாங்கி பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இத­னால் பூச்சி தாக்­கு­த­லும் ஏற்­ப­டு­கின்­றது. எனது சக விவ­சா­யி­கள் 1 பிகா நிலத்­திற்கு உரத்­திற்­காக ரூ.4 ஆயி­ரம் வரை (இரண்­டரை பிகா நிலம் 1 ஏக்­கர்) செல­வ­ழிக்­கின்­ற­னர். சொந்­த­மாக உரம் தயா­ரித்­தால், இந்த செலவு மிச்­சம் என்­கின்­றார் ஜெக­தீஷ் பாரிக்.

இவர் இவ்­வ­ளவு கஷ்­டப்­பட்டு உற்­பத்தி செய்­யும் காய்­க­றி­களை விற்­பனை செய்­வது கஷ்­ட­மாக உள்­ளது. ஏனெ­னில் இவை இர­சா­யண உரம் பயன்­ப­டுத்தி உற்­பத்தி செய்த காய்­க­றி­களை போல் கண்­ணைப் பறிக்­கும் பள­ப­ளப்பு இருக்­காது.

நான் உற்­பத்தி செய்­யும் காய்­க­றி­கள் பெரி­தாக, நீள­மாக இருக்­கும். ஒரு காலி­பு­ள­வரோ அல்­லது கத்­த­ரிக்­காயோ ஒரு குடும்­பத்­திற்கு போதும். இத­னால் அதிக அளவு விற்­பனை செய்ய முடி­யா­மல் வீணாக சென்­றது. இந்த பிரச்­னைக்கு தீர்­வு­காண கூலி வேலை செய்­ப­வர்­கள், குறைந்த வரு­வாய் இருப்­ப­வர்­க­ளுக்கு குறைந்த விலை­யில் விற்­பனை செய்­தார். சந்­தை­யில் ஒரு கிலோ முட்­டை­கோஸ் ரூ.40 எனில், இவர் ரூ.15க்கு விற்­பனை செய்­தார். இத­னால் வீணா­வது தடுக்­கப்­பட்­டது.

தன்­னைப் போல் மற்ற விவ­சா­யி­க­ளும் இயற்கை விவ­சா­யத்தை மேற்­கொண்டு, பெரிய அள­வி­லான காய்­க­றி­களை உற்­பத்தி செய்ய வேண்­டும் என்று ஜெக­தீஷ் பாரிக் விரும்­பி­னார். விவ­சா­யி­களை தனது நிலத்­திற்கு வந்து பார்­வை­யி­டும் படி கேட்­டுக் கொண்­டார். இவ­ரது நிலத்தை பார்­வை­யிட வந்த விவ­சா­யி­க­ளுக்கு , அவர் கடைப்­பி­டிக்­கும் முறை­களை பற்றி விளக்­கி­ய­து­டன், இல­வ­ச­மாக விதை­க­ளை­யும் கொடுத்­தார்.

இவ­ரி­டம் பயிற்சி பெற்ற இயற்கை விவ­சா­யம் செய்­யும் முன்­னாள் ராணுவ வீரர் பாபு­லால் குஜ்­ஜார் கூறு­கை­யில், “நான் ராணு­வத்­தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த பத்து ஆண்­டு­க­ளாக விவ­சா­யம் செய்து வரு­கின்­றேன். விவ­சா­யம் செய்ய தொடங்­கின உட­னேயே இர­சா­யண உரம் போன்­ற­வை­களை பயன்­ப­டுத்­து­வ­தால் ஏற்­ப­டும் பாதிப்­பு­கள் பற்றி உணர்ந்­தேன். நான் ஜெக­தீஷ் பாரிக்­கரை அணுகி ஆலோ­சனை கேட்­டேன். அவ­ரி­டம் இருந்து இயற்கை உரம் தயா­ரிப்­பது பற்றி தெரிந்து கொண்­டேன். விதை­க­ளை­யும் பெற்­றேன். தற்­போது இர­சா­யண உரம் பயன்­ப­டுத்­து­வ­தையே நிறுத்­தி­விட்­டேன். விளைச்­ச­லும் கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது” என்று தெரி­வித்­தார்.

இதே போல் மணி­ராம் சைனி என்ற விவ­சாயி, ஜெகதீ பாரிக் செய்­யும் விவ­சாய முறையை கடைப்­பி­டிக்க தொடங்­கிய பிறகு, நான் உற்­பத்தி செய்­யும் காய்­க­றி­க­ளின் எடை­யும், அள­வும் அதி­க­ரித்­துள்­ளது என்­கின்­றார்.

ஜெக­தீஷ் பாரிக் தனது அனு­ப­வத்தை விவ­சா­யி­க­ளி­டம் மட்­டும் பகிர்ந்து கொள்­வ­து­டன் நிறுத்­த­வில்லை. பல்­க­லைக்­க­ழ­கங்­கள், விவ­சா­யி­கள் குழுக்­கள், விவ­சாய நிபு­ணர்­க­ளி­ட­மும் பகிர்ந்து கொள்­கின்­றார். “இயற்கை விவ­சா­யம் செய்­வது ஒன்­றும் கம்­ப­சூத்­தி­ர­மல்ல. நீங்­கள் அக்­கறை எடுத்­துக் கொண்டு உழைக்க வேண்­டும். கவ­ன­மாக, பொறு­மை­யாக இருந்து பயிர்­களை கண்­ணும் கருத்­து­மாக காக்க வேண்­டும். அவ்­வ­ள­வு­தான் என்று கூறு­கின்­றார் பத்­மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவ­சாயி ஜெக­தீஷ் பாரிக்.