எதிலும் ஒட்டும் பொருள்!

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019


ஒட்­டும் தன்மை கொண்ட பசை­கள் எல்லா பரப்­பு­க­ளின் மேலும் ஒட்­டி­வி­டாது. எனவே, எந்­தப் பரப்­பின் மீதும் 'பச்­சக்' என ஒட்­டும் ஒரு பொருளை உரு­வாக்­கி­விட ஆராய்ச்­சி­யா­ளர்­கள் பாடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில், அமெ­ரிக்­கா­வி­லுள்ள வடக்கு கரோ­லைனை மாநில பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள், உலோ­கம், சிமென்ட், பிளாஸ்­டிக் என்று எந்­தப் பரப்­பின் மீது வைத்­தா­லும், அட்­டைப் பூச்சி போல ஒட்­டிக்­கொள்­ளும் பொருளை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

பாலி­மர்­களை சிதைத்து கரை­ச­லாக்கி, அந்­தக் கரை­சலை வேறு திர­வத்­தில் போட்டு கலக்கி, பாலி­மர் மூலக்­கூ­று­க­ளில் பல கிளைப் பிரி­வு­களை விஞ்­ஞா­னி­கள் உரு­வாக்­கு­கின்­ற­னர். இந்த முறையை, 'திரவ நேனோ உற்­பத்தி' முறை என விஞ்­ஞா­னி­கள் அழைக்­கின்­ற­னர். இதன் மூலம் கிடைக்­கும் கிளை­கள் கொண்ட நுண் பாலி­மர்­கள், மென்­மை­யாக, அதே சம­யம் எதி­லும் கெட்­டி­யாக ஒட்­டும் தன்­மை­யும் கொண்­டுள்­ளன.

இந்த நேனோ பாலி­மர்­களை பசை­கள், பூச்­சுக்­கள், ஜெல்­கள் என பல வடி­வங்­க­ளில் தயா­ரிக்க முடி­யும் என­வும் கரோ­லைனா பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னி­கள், 'நேச்­சர் மெட்­டீ­ரி­யல்ஸ்' இத­ழுக்­குத் தெரி­வித்­துள்­ள­னர்.

***