மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 15

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019

‘அண்ணே! நீங்க குயில் முட்டை மாதிரி. குயில் முட்­டை­யைக் காக்­கை­தான் அடை­காக்­கும் என்­பது உங்­க­ளுக்கு தெரி­யும். ரெக்கை முளைச்சு குயில் குஞ்சு கூவிப் பறக்­குற போது­தான் அது தன் குஞ்­சில்­லேங்­கி­றது காக்­கைக்கு தெரி­யும்...! அது­மா­திரி, நீங்க நக­ரத்­தார் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வங்க, சைவத்­தை­யும்,, தெய்­வத்­தை­யும் இரண்டு கண்­க­ளாக எண்­ணு­கிற சமூ­கம். உங்க சமூ­கம் இயல்­பாக உங்­க­ளுக்­குள்ளே இருக்­கிற இறைப்­பற்று வெளிப்­பட்ட நேரம் வந்­த­வு­டனே, நீங்­க­ளும் கழ­கத்தை விட்டு வெளிய வந்­துட்­டீங்க. அத­னால்­தான் உங்­களை குயில் குஞ்சு என்று கூர்­மை­யா­கச் சொன்­னேன்.

 கண்­ண­தா­சன் ஒரு விநாடி சிந்­த­னை­யில் ஆழ்ந்­தார். பிறகு நிதா­ன­மாக சொன்­னார்.

‘கட­வுளை உணர்­வ­தி­லி­ருந்­து­தான், உண்­மை­யான பகுத்­த­றிவே தொடங்­கு­கி­றது’ என்­றார்.

 இதே கருத்தை ஒரு ஆங்­கி­லக் கவி­ஞன் பாடி இருப்­ப­தை­யும் வாலி அவ­ருக்கு எடுத்­துச் சொன்­னார்.

’நாம் அடிக்­கடி சந்­திக்­க­லாம்’­என்று கவி­ஞர் சொன்­னார்.

ஆனால், காலம் அவர்­கள் இரு­வ­ரை­யும் எதி­ரெ­திர் அணி­யில் நிறுத்தி தொழில் புரிய வைத்­தது. அதன் கார­ண­மாக அவர்­க­ளுக்­கி­டை­யில் உள்ள இடை­வெ­ளி­யும் நீண்­டு­கொண்டே வந்­தது. எம்ஜி.ஆர்., ரசி­கர் மன்ற மேடை­க­ளில் வாலி, கண்­ண­தா­ச­னின் பாடல்­களை விமர்­சிப்­ப­தும், காங்­கி­ரஸ் மேடை­க­ளில் கண்­ண­தா­சன் வாலி­யின் பாடல்­களை விமர்­சிப்­ப­தும் தவிர்க்க முடி­யாத விஷ­யங்­க­ளாக ஆகி­விட்­டன.

ஒரு முறை கண்­ண­தா­சன், மெல்­லிசை மன்­னர் விஸ்­வ­நா­த­னி­டம், “விசு, நீ யாரை வேணும்­னா­லும் என்­க­ரேஜ் பண்ணு. இந்த வாலியை மட்­டும் என்­க­ரேஜ் பண்­ணாதே’ என்று சொல்ல, அதற்கு விஸ்­வ­நா­தன் ‘ஏன் அவன் பார்ப்­பான் என்­ப­தாலா?’ என்று கேட்­டார்.

` சேச்சே! அந்த எண்­ணம் எல்­லாம் எனக்கு கிடை­யாது. மத்­த­வங்­களை நீ என்­க­ரேஜ் பண்­ண­லாம். எவ­னும் எனக்கு போட்­டியா வர­மாட்­டான். இந்த பய அப்­ப­டி­யில்லை. விஷ­யம் உள்­ள­வன்’ என்று சொல்­லி­விட்டு கவி­ஞர் குழந்­தை­போல வெறித்­த­ன­மாக சிரித்து இருக்­கி­றார்.

இதைக் கேள்­விப்­பட்ட வாலி, விஸ்­வ­நா­த­னி­டம்’’ அண்ணே! சினி­மா­விலே பாட்டு எழு­த­ற­துங்­கி­றது வரு­மா­னம் சம்­பந்­தப்­பட்ட விஷ­யம். என்­னு­டைய வளர்ச்சி அவ­ரு­டைய வரு­மா­னத்தை பாதிக்­க­லாம். அத­னால் அப்­படி சொல்லி இருக்­கார். அது நியா­ய­மும் கூட. ஏன்னா, எனக்கு ஒரே குழந்தை. அவ­ருக்கு பத்து பன்­னி­ரண்டு குழந்­தை­கள். பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாக, அவ­ரு­டைய வரு­மா­னம், இன்­னொ­ருத்­தர் வர­வால பாதிக்­கப்­ப­டு­வதை அவர் கவ­னிக்­கா­மல் இருக்க முடி­யுமா?’ என்று வாலி, கண்­ண­தா­ச­னின் எண்­ணத்தை நியா­யப்­ப­டுத்­திப் பேசி­னார்.

ஆனால்,’ மயக்­கமா? கலக்­கமா?”என்ற அவ­ரது பாடல்­தான், வாலியை சென்­னை­யி­லேயே தங்க வைத்­தது என்­பது அப்­போது கண்­ண­தா­ச­னுக்கு தெரி­யாது. மற்­றொரு சந்­தர்ப்­பத்­தில் இதை வாலி, கண்­ண­தா­ச­னி­டம் சொன்­ன­போது, ‘என் பாட்டு, ஒரு­வ­னுக்கு தெம்பு கொடுத்­தி­ருக்­கி­றது என்­றால், அது எனக்கு மிக­வும் சந்­தோ­ஷ­மான விஷ­யம்’ என்று வாலியை கட்­டித் தழு­விக்­கொண்­டார். கண்­ண­தா­ச­னுக்கு ஆரம்­பத்­தில் வாலி­யின் மேலி­ருந்த காழ்ப்­பு­ணர்ச்சி மெல்ல மெல்ல கரைந்து, அன்­பும், நட்­பும், துளிர்­வி­டத் தொடங்­கின.

 வாலி­யின் எழுத்தை கண்­ண­தா­சன் அங்­கீ­க­ரிக்­கத் தொடங்­கி­னார்.

 இதை தொட­ரும் முன்  வாலி­யின் ஆரம்ப நாட்­களை கொஞ்­சம் பார்க்க வேண்­டும். அப்­போது வாலி தி.நகர் கிளப் ஹவு­சில்  இருந்­தார். அப்­போது அவ­ருக்கு இரு­வர் அறி­மு­க­மா­னார்­கள்.

 ஒரு­வர் சென்னை ஏஜி ஆபீ­சில் பணி­யாற்­றிக் கொண்டு நாட­கங்­கள் போட்­டுக் கொண்­டி­ருந்­த­வர். அவர் நாகே­ஷைப் பார்க்க  அவ்­வப்­போது கிளப் ஹவு­சிற்கு வரு­வார். அவர்­தான் பின்­னா­ளில் புகழ்­பெற்ற இயக்­கு­ந­ராய் வளர்ந்த கே பால­சந்­தர். இன்­னொ­ரு­வர் மா ரா என்று நண்­பர்­க­ளால் அழைக்­கப்­ப­டும் மா. ராமச்­சந்­தி­ரன்.

மா.ரா. அப்­போது நிறைய படங்­க­ளுக்கு வச­னங்­கள் எழு­திக் கொண்­டி­ருந்­தார்.

 பால­சந்­தர் திரைப்­ப­டத்­து­றை­யில் நுழை­யாத காலம் அது. அத­னால் மா.ரா. மூல­மாக திரைப்­ப­டத்­தில் பாடல் எழு­தும் வாய்ப்­பு­கள் ஏதே­னும் பெற­லாம் என்ற எண்­ணத்­தில் அப்­போ­தெல்­லாம் வாலி, ராஜ­கு­மாரி தியேட்­ட­ருக்கு பின்­பு­றம் இருந்த மா.ரா. வீட்­டுக்கு அதி­கா­லை­யில் சென்று பார்ப்­ப­துண்டு. மா.ரா. நல்ல எழுத்­தா­ளர் மட்­டு­மல்ல, நல்ல மனி­த­ரும் கூட. நடி­கர் பாலாஜி, நாகேஷ் போன்­ற­வர்­கள் மா.ராவின் நாட­கங்­க­ளில் தயா­ரா­ன­வர்­கள்­தான்.

இந்­தி­யில் மிகப் வெற்­றிப்­ப­ட­மாக திகழ்ந்த `தீதார்’ என்­னும் படத்தை பத்மா பிலிம்­ஸார்’ நீங்­காத நினை­வு’­என்ற தலைப்­பில் படம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். கே. வி. மகா­தே­வன்­தான் இசை. ‘தாதா மிராசி’ படத்­தின் இயக்­கு­னர்.

 அந்­தப்­ப­டத்­தின் அதி­பர் சுலை­மா­னி­டம் மா.ரா. வாலியை அறி­மு­கப்­ப­டுத்தி இரண்டு பாடல்­கள் எழு­தும் வாய்ப்பை வாங்கி தந்­தார். அது சாத்­தி­ய­மா­ன­தற்கு முக்­கிய கார­ணம் மா.ரா. அந்­தப்­ப­டத்­தில் அவர்­தான் வச­னம்.

சுலை­மான் மாடர்ன் தியேட்­டர்­சில் நெடுங்­கா­லம் பணி­யாற்றி, பிறகு ஒளிப்­ப­தி­வா­ளர் டபிள்யூ. ஆர். சுப்­பா­ராவ், ஒலிப்­ப­தி­வா­ளர் பத்­ம­நா­பன் ஆகி­யோர் கூட்­டுச்­சேர்ந்து ஆரம்­பித்த நிறு­வ­னம்­தான் பத்மா பிலிம்ஸ். கே. வி. மகா­தே­வன் அவர்­களை அப்­போ­து­தான் முதல்­மு­றை­யாக சந்­திக்­கி­றார்.

 அவர் வாலியை உத­ற­வும் இல்லை, உற்­சா­கப்­ப­டுத்­த­வும் இல்லை. சுலை­மா­னும். மா.ரா.வும் வாலி விஷ­யத்­தில் காட்­டிய உறு­தி­தான் கே.வி .மகா­தே­வன் வாலி­யின் பாடல்­களை ஏற்க வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளாக்­கி­யது.

பிற்­கா­லத்­தில் கே. வி. மகா­தே­வன் இசைக்கு வாலி நூற்­றுக்­க­ணக்­கான பாடல்­கள் எழு­தி­னார் என்­பது வேறு விஷ­யம்.

 சுலை­மா­னும், மா.ராவும் முக்தா சீனி­வா­ச­னி­டம் வாலி­யைப் பற்றி பேசி­யி­ருக்­கி­றார்­கள்.

 இதன் விளை­வாக முக்தா பிலிம்ஸ் தயா­ரித்­துக் கொண்­டி­ருந்த `இத­யத்­தில் நீ’ப­டத்­தில் வாலி பாடல் எழு­தி­னார்.

வாலி­யின் சந்­தோ­ஷத்­திற்கு அளவே இல்லை. கார­ணம், அந்­தப் படத்­திற்கு இசை விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி. இவர்­க­ளின் இசை­யில் பாட்டு எழுத வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தானே வாலி காத்­துக்­கொண்­டி­ருந்­தார்!

 1963 ஜன­வரி மாதம் முதல் வாரத்­தில் ஒரு மதிய வேளை­யில் முக்தா பிலிம்ஸ் மாடி­யி­லுள்ள சின்ன அறை­யில் விஸ்­வ­நா­தன் ராம­மூர்த்­திக்கு வாலி அறி­மு­கம் செய்து வைக்­கப்­பட்­டார்.

 வாலி ஏற்­க­னவே எம்­ஜி­ஆர்., படத்­தி­லும், பாடல்­கள் எழுதி இருப்­பதை விஸ்­வ­நா­த­னி­டம் சொன்­னார். முக்தா சீனி­வா­சன், ` நல்ல கவி­ஞர், பாட்டை பாருங்­கள், பிடித்­தி­ருந்­தால் ஏற்­றுக்­கொள்­ளுங்­கள். ஒத்து வராது என்று தோன்­றி­னால் நான் உங்­களை வற்­பு­றுத்­த­மாட்­டேன்’­என்று தெளி­வா­கச் சொன்­னார் முக்தா சீனி­வா­சன்.

விஸ்­வ­நா­தன் – வாலியை பார்த்து கேட்ட முதல் கேள்வி சற்று அதிர்ச்­சி­யாக இருந்­தது.’ நீங்­கள் பிரா­மினா?’ என்­ப­து­தான்.  ‘ஆம்’ என்று வாலி சொல்லி முடிப்­ப­தற்­கு­முன்’­எங்­க­ளுக்கு உற­வுக்­கார பையன்’ என்­றார் முக்தா ராம­சாமி. இவர் முக்தா சீனி­வா­ச­னின் மூத்த சகோ­த­ரர்.

 விஸ்­வ­நா­தன் ஜாதி கண்­ணோட்­டம் இல்­லா­த­வர்; பாப­நா­சம் சிவனை தலைக்கு மேல் வைத்­துக் கொண்­டா­டு­ப­வர்  என்­பது வாலிக்கு தெரி­யும். அத­னால் வாலி­யின் ஜாதி­யைப் பற்றி அவர் தெரிந்­து­கொள்ள விரும்­பி­யி­ருக்­கி­றார் என்று வாலி தீர்­மா­னித்­துக் கொண்­டார்.. அடுத்து என்ன நடந்­தது?

(தொட­ரும்)