டி.வி. பேட்டி : முன்னேறி போங்க! செய்ய வேண்டியதை செய்யுங்க! – அஸ்வினி நம்பியார்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019

*    “வந்துட்டேன்னு சொல்லு,  திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!” என்று அறிவிப்பது போல கிட்டத்தட்ட 13 வருட இடைவெளிக்கு பிறகு சிங்கப்பூரிலிருந்து  மீண்டும் தமிழ் சினிமா மற்றும்  சின்னத்திரை பக்கம் வந்திருக்கிறார் அஸ்வினி நம்பியார்.

*    “மகராசி” சீரியலை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் – யாருமே எதிர்பார்க்காத நெகட்டிவ் கேரக்டரில்!  

*    யார் இந்த அஸ்வினி நம்பியார்? அவர் வேறு யாருமல்ல, நம்ம பழைய ருத்ராதான்.

*    ருத்ரா? அதான்ங்க ……. “புது நெல்லு புது நாத்து” படத்திலே பாரதிராஜா அறிமுகப்படுத்தினாரே……. அந்த ருத்ராதான் அஸ்வினி நம்பியாராக இருக்கிறார். ஆனால், அவர் தன் பெயரை மாற்றி ரொம்ப காலமாகி விட்டது.

*    அவர் ‘ஜாய்புல்’ சிங்கப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிலாகி விட்டார்.

*    சிங்கப்பூரில் தயாரிக் கப்படும் டிவி சீரியல் களில் நடித்துக் கொண்டி ருக்கிறார்.

*    அவர் ஒரு நடிகை மட்டு மல்ல, நல்ல நடனக்கலை ஞர், பாடகியு மாவார்.

*    ‘‘முன்னேறி செல்லுங்கள், மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள், உங்களுக்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள்!” – இப்படி டுவிட்டரில் டுவீட் செய்திருக்கிறார்.

* கேரள மாநிலத்தை சேர்ந்தவர். கேரளா

வில் இறுதி பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு மலையாள இதழுக்காக அவர் தன் சக வகுப்புத் தோழி

களோடு சேர்ந்து மாடலிங் கொடுத்திருந்தார். அந்த  இதழ் பாரதிராஜாவின் பார்வைக்கு  பட்டு

விட, “புது நெல்லு புது நாத்து” வாய்ப்பு கிடைத்தது. அதில், ‘மரிக்கொழுந்து’ என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.

* அதன்பின், “கிழக்குச் சீமையிலே,” “தூரத்து சொந்தம்,” “புதுப்பட்டி பொன்னுத்தாயி,” “ராமன் அப்துல்லா,” “பெரிய தம்பி,” “கள்ளழகர்,” “என்னவளே” போன்ற படங்களில் நடித்தார்.

* நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் “மணிச்சித்திரத்தாழு,” “துருவம்,” “பிடக்கோழி கூவுன்ன நூட்டாண்டு,” “குடும்பக் கொடத்தி” போன்றவை குறிப்பிடத் தக்கவை.

*    இவை தவிர “நசார்” உட்பட சில இந்தி படங்களிலும், “ஹிட்லர்,” “பெல்லி சேசு குண்டம்,” “போலீஸ்” உட்பட சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

* “கடமட்டத்து காத்தனார்,” “அம்மாகனிக்கோ அம்மாயி,” “அந்தர்நேத்ரம்,” “அந்தரங்காலு,” “கலங்கிதா,” “விடுதலை,” “சின்ன சின்ன ஆசை” போன்றவை அவர் நடித்திருக்கும் சீரியல்கள்.

* கேரள கலாமண்டலத்தில் நடனத்தில் பட்டம் பெற்றுள்ளார். நிருத்தா மற்றும் அபிநயத்தில் அவர் எக்ஸ்பர்ட்!

* மீண்டும் “மகராசி” மூலம் தமிழ் சீரியலில் நடிப்

பதை பற்றி சொல்லும்போது – “நான் சென்னையில் மீண்டும் பணியாற்றுவது கேக்கி லுள்ள ஐசை சாப்பிடுவது போல அற்புதமாக இருக்கிறது. பழைய சக கலைஞர்களை சந்திப்பதும், ஒளி – ஒலி அமைப்புகளை அனு பவிப்பதும், படப்பிடிப்பில் நான் மரியாதையாக நடத்தப்படுவதும் இனிமையான தருணங்கள்!” என்று குறிப்பிடுகிறார்.

* சிங்கப்பூரில் மனநல ஆரோக்கிய விழிப்புணர்வு முகாமில் தான்  பங்கேற்றதை கவுரவமாக கருதுகிறார் அஸ்விணி நம்பியார்.

– இருளாண்டி